ஜீப் காம்பஸ் மார்க்கெட்டை குறிவைத்து ஸ்கோடா களமிறக்கும் அட்டகாசமான புதிய எஸ்யூவி!

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக வரும் ஸ்கோடா கரோக் எஸ்யூவி இன்று ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து இந்தியர்களின் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இந்திய மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிப்பதற்காக, ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் புராஜெக்ட் 2.0 என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்திய மார்க்கெட்டிற்கான சிறப்பு அம்சங்களுடன் கூடிய பல புதிய கார் மாடல்களை கொண்டு வர இருக்கிறது. குறிப்பாக, பல எஸ்யூவி மாடல்களை களமிறக்க கங்கணம் கட்டி இறங்கி இருக்கிறது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இதில், குறிப்பிடத்தக்க மாடலாக அனைவரின் எதிர்பார்ப்பையும் ஸ்கோடா கரோக் எஸ்யூவி பெற்றிருக்கிறது. இந்த புதிய மாடலானது ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டூஸான் ஆகிய எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

முதல்கட்டமாக ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்தியர்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இந்த எஸ்யூவியை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வதற்கான திட்டத்தை கையில் எடுக்க ஸ்கோடா ஆட்டோ திட்டமிட்டுள்ளது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இந்த எஸ்யூவி வெளிநாடுகளில் பல்வேறு விதமான பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் 1.5 லிட்டர் பிஎஸ்-6 டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் வழங்கப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி போன்ற பல டிசைன் அம்சங்கள் இந்த காரிலும் இடம்பெற்றிருக்கிறது. இந்த காரின் வண்ணத்து பூச்சி வடிவிலான ஸ்கோடாவின் பாரம்பரிய க்ரில் அமைப்பு முகப்பின் அழகை கூட்டுகிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பனி விளக்குகள், சி வடிவிலான டெயில் லைட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

ஸ்கோடா கரோக் எஸ்யூவியில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பிரத்யேக ஏசி வென்ட்டுகள், வெர்ச்சுவல் காக்பிட் சிஸ்டம் ஆகியவையும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும்.

பல்முனை பாதுகாப்பை வழங்கும் வகையில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி ரூ.17 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதம் முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 5, 2020, 21:16 [IST]
English summary
Skoda Auto has unveiled Karoq mid-size SUV at the ongoing Auto Expo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+