ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம் வெளியானது!

இந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம்

எஸ்யூவி கார்களுக்கு இந்தியாவில் அதிகரித்து வரும் வரவேற்பை சரியாக பயன்படுத்தும் விதத்தில் பல புதிய மாடல்களை களமிறக்கும் பணிகளில் ஸ்கோடா தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், கரோக் என்ற மிட்சைஸ் எஸ்யூவியை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம்

இந்த புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவிக்கு இன்று முதல் அதிகாரப்பூர்வமாக முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது. லாக் டவுன் முடிந்தவுடன் டெலிவிரி கொடுக்கும் பணிகள் உரிய பாதுகாப்புடன் துவங்கப்பட உள்ளன.

ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம்

இந்த நிலையில், இந்த காரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக பல முக்கிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஸ்கோடா கரோக் எஸ்யூவியானது அதிகபட்ச வசதிகள் கொண்ட ஒரே வேரியண்ட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம்

அடுத்து இந்த கார் கேண்டி ஓயிட், மேக்னெட்டிக் பிரவுன், லாவா புளூ, மேஜிக் பிளாக், பிரில்லியண்ட் சில்வர், குவார்ட்ஸ் க்ரே ஆகிய வண்ணத் தேர்வுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம்

ஸ்கோடா கரோக் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம்

ஸ்கோடா கரோக் எஸ்யூவியானது 0 - 100 கிமீ வேகத்தை 9 வினாடிகளில் எட்டும் திறன் பெற்றிருக்கிறது. மணிக்கு 202 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம்

எல்இடி விளக்குகள், 18 அங்குல அலாய் வீல்கள், பனோரமிக் சன்ரூஃப் வெர்ச்சுவல் காக்பிட், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட்லிங்க் கனெக்ட்டிவிட்டி, டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், ஆம்பியண்ட் லைட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம்

இந்த மிட்சைஸ் பிரிமீயம் எஸ்யூவியில் பார்க் ட்ரோனிக் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 9 ஏர்பேக்குகள், இபிடியுன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம்

ரூ.20 லட்சத்தை ஒட்டிய பட்ஜெட்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மிட்சைஸ் எஸ்யூவி கார்களில் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும். ஹூண்டாய் டூஸான், ஜீப் காம்பஸ் மாடல்களுக்கு போட்டியாக வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 1, 2020, 10:36 [IST]
English summary
Skoda Auto India has revealed variant and colour details of Karoq SUV ahead of its launch in India.
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+