ஸ்கோடா கரோக், சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் பிஎஸ்6 ரேபிட் கார்களை இன்று முன்பதிவு செய்யலாம்..!

ஸ்கோடா நிறுவனம் கரோக், சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் பிஎஸ்6 ரேபிட் மாடல்களுக்கான முன்பதிவை ஏற்க துவங்கியுள்ளது. மிக விரைவில் இந்திய சந்தைக்கு வரவுள்ள இந்த ஸ்கோடா கார்களை பற்றி முழுமையாக இனி பார்ப்போம்.

ஸ்கோடா கரோக், சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் பிஎஸ்6 ரேபிட் கார்களை இன்று முன்பதிவு செய்யலாம்..!

ஸ்கோடா நிறுவனம் முன்னதாக இந்த புதிய மாடல்களை கடந்த மார்ச் மற்றும் இந்த ஏப்ரல் மாதங்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்குள்ளாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவ துவங்கியதால் இவற்றின் அறிமுகத்தில் தாமதம் ஏற்பட்டது.

ஸ்கோடா கரோக், சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் பிஎஸ்6 ரேபிட் கார்களை இன்று முன்பதிவு செய்யலாம்..!

இதனால் இந்த மூன்று ஸ்கோடா கார்களும் கொரோனாவின் தாக்கம் தணிந்தவுடன் அறிமுகமாகவுள்ளன. ஊரடங்கினால் டீலர்ஷிப்கள் மூடப்பட்டிருந்தாலும், ஸ்கோடாவின் புதிய கரோக், சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் பிஎஸ்6 ரேபிட் மாடல்களை இணையத்தளத்தில் முன்பதிவை செய்வதற்கான நடவடிக்கைகள் இன்றிலிருந்து துவங்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா கரோக், சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் பிஎஸ்6 ரேபிட் கார்களை இன்று முன்பதிவு செய்யலாம்..!

இதில் ரூ.22 லட்சத்தை எக்ஸ்ஷோரூம் விலையாக பெற்றுள்ள கரோக் மாடலுக்கு முன்பதிவு தொகையாக ரூ.50,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மிட்-சைஸ் எஸ்யூவி காரில் ஸ்கோடா நிறுவனம் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பிஎஸ்6 டர்போ பெட்ரோல் என்ஜினை பொருத்தியுள்ளது.

ஸ்கோடா கரோக், சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் பிஎஸ்6 ரேபிட் கார்களை இன்று முன்பதிவு செய்யலாம்..!

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். கரோக் மாடலை போன்று ரூ.50 ஆயிரத்தை முன்பதிவு தொகையாக பெற்றுள்ள சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 190 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்கோடா கரோக், சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் பிஎஸ்6 ரேபிட் கார்களை இன்று முன்பதிவு செய்யலாம்..!

ஸ்கோடா சூப்பர்ப் மாடலுக்கு இந்திய சந்தையில் டொயோட்டா காம்ரி கார் மட்டும் தான் போட்டியாகவுள்ளது. சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலையை எக்‌ஷ்ஷோரூமில் ரூ.30 லட்சமாக ஸ்கோடா நிர்ணயித்துள்ளது. இவற்றுடன் இந்நிறுவனத்தில் இருந்து விரைவில் அறிமுகமாகவுள்ள ரேபிட் பிஎஸ்6 ஒன்றும் சந்தைக்கு புதிய மாடல் அல்ல.

ஸ்கோடா கரோக், சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் பிஎஸ்6 ரேபிட் கார்களை இன்று முன்பதிவு செய்யலாம்..!

ஏனெனில் வழக்கமான தோற்றத்தில் தான் ரேபிட் மாடலின் புதிய வெர்சன் கார் வெளியாகவுள்ளது. இதில் புதிய மாற்றமாக 1.5 லிட்டர் டிடிஐ மற்றும் 1.6 லிட்டர் எம்பிஐ என்ஜின்களுக்கு மாற்றாக பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான புதிய 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா கரோக், சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் பிஎஸ்6 ரேபிட் கார்களை இன்று முன்பதிவு செய்யலாம்..!

விரைவான ரேபிட் மாடலாக மாற்றியுள்ள இந்த புதிய என்ஜின் அதிகப்பட்சமாக 115 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ரூ.25 ஆயிரத்தை முன்பதிவு தொகையாக பெற்றுள்ள இந்த காருக்கு எக்ஸ்ஷோரூமில் ரூ.10 லட்சம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா கரோக், சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் பிஎஸ்6 ரேபிட் கார்களை இன்று முன்பதிவு செய்யலாம்..!

ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் நுழைந்தத்தில் இருந்து இந்நிறுவனம் மேற்கொள்ளும் மிக பெரிய அப்டேட்களாக இந்த மூன்று கார்களின் அறிமுகங்கள் பார்க்கப்படுகின்றன. மேலும் இந்த நிறுவனம் இவற்றுடன் விஷன் இன் கான்செப்ட் எஸ்யூவி காரையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
You Can Book The 2020 Skoda Karoq, Superb Facelift, And Rapid TSIOnline Right Now!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X