ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடலின் டெலிவிரி பணிகளில் மும்முரம்... முதல் கார் டெலிவிரியானது...!

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் ஒரு வழியாக இந்தியாவில் ஆக்டேவியா ஆர்எஸ் 245 மாடலுக்கான டெலிவிரி பணிகளை துவங்கியுள்ளது. 200 யூனிட்கள் மட்டுமே நமது நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ள இந்த கார் மிக விரைவில் விற்று தீர்க்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடலின் டெலிவிரி பணிகளில் மும்முரம்... முதல் கார் டெலிவிரியானது...!

ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற இந்த கார் இந்தியாவின் ஸ்கோடா ஆக்டேவியா மாடலில் அப்டேட் வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டு உள்ளது. ரேஸ் ப்ளூ நிறத்தில் காட்சியளிக்கின்ற ஆக்டேவியாவின் புதிய ஆர்எஸ் 245 வெர்சன் கோவாவில் உள்ள ஒரு டீலர்ஷிப் ஷோரூமில் இருந்து டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடலின் டெலிவிரி பணிகளில் மும்முரம்... முதல் கார் டெலிவிரியானது...!

மொத்த 200 யூனிட்களில் சென்னை மாநகருக்கு 22 யூனிட்களும், பெங்களூருக்கு 44 யூனிட்களும், ஹைதராபாத் மற்றும் புனே நகரங்களுக்கு தலா 20 யூனிட்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வெர்சனை பற்றி கூறவேண்டுமென்றால், ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடலில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை ஸ்கோடா நிறுவனம் பொருத்தியுள்ளது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடலின் டெலிவிரி பணிகளில் மும்முரம்... முதல் கார் டெலிவிரியானது...!

இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 245 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதன் என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. காரின் சேசிஸ் வழக்கமான ஆக்டேவியா மாடலை விட 15மிமீ தாழ்வாக பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடலின் டெலிவிரி பணிகளில் மும்முரம்... முதல் கார் டெலிவிரியானது...!

இவற்றுடன் இந்த கார் விறைப்பான சஸ்பென்ஷன் மற்றும் எலக்ட்ரிக் முறையில் ஒழுங்குப்படுத்தப்பட்ட விஏக்யூ ஸ்லிப் டிஃப்ரென்ஷியல் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது. 0-விலிருந்து 100 kmph என்ற வேகத்தை வெறும் 6.6 வினாடிகளில் அடைந்துவிடும் இந்த புதிய வெர்சனின் அதிகப்பட்ச வேகம் 250kmph ஆகும்.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடலின் டெலிவிரி பணிகளில் மும்முரம்... முதல் கார் டெலிவிரியானது...!

இதனால் இது தான் தற்போதைக்கு ஸ்கோடா நிறுவனத்தின் ஆற்றல்மிக்க மாடலாக இந்திய சந்தையில் விளங்குகிறது. இந்த காரில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை பல முறை நமது செய்தி தளத்தில் பதிவிட்டுள்ளோம். அல்காண்டாரா இருக்கைகளை கொண்டுள்ள இந்த காரில் தாழ்வான ஸ்டேரிங் சக்கரம் மற்றும் 12-வழிகளில் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்புற இருக்கைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடலின் டெலிவிரி பணிகளில் மும்முரம்... முதல் கார் டெலிவிரியானது...!

இதுமட்டுமின்றி 12.3 இன்ச் விர்டியுவல் காக்பிட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஸ்மார்ட்போன் இணைப்புடன் உள்ள 8-இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ட்யூல்-ஜோன் ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல், பனோராமிக் சன்ரூஃப், ஹோண்ட்ஸ்-ப்ரீ பார்க்கிங், உட்புறத்தில் சுற்றிலும் விளக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடலின் டெலிவிரி பணிகளில் மும்முரம்... முதல் கார் டெலிவிரியானது...!

ரேஸ் ப்ளூ மட்டுமின்றி, ரலி பச்சை, கொரிடா சிவப்பு, மேஜிக் ப்ளாக் மற்றும் கேண்டி வொயிட் என்ற நான்கு நிறத்தேர்வுகளிலும் புதிய ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடல் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.35.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 14, 2020, 13:28 [IST]
English summary
Skoda Octavia RS 245 Deliveries Commence In India
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+