முதல் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 கார் இந்தியாவில் டெலிவிரி... அட்டகாசமான புகைப்படம் இதோ...!

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடலின் டெலிவிரி பணிகள் இந்தியாவில் துவங்கியுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

முதல் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 கார் இந்தியாவில் டெலிவிரி... அட்டகாசமான புகைப்படம் இதோ...!

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக முதன்முறையாக ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடலை ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது. இதில் பலரது கவனத்தை ஈர்த்திருந்த இந்த காருக்கு எக்ஸ்ஷோரூமில் ரூ.35.99 லட்சம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 கார் இந்தியாவில் டெலிவிரி... அட்டகாசமான புகைப்படம் இதோ...!

வெறும் 200 யூனிட்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள இந்த காருக்கான முன்பதிவுகள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ரூ.1 லட்சம் என்ற முன் தொகையுடன் ஏற்று கொள்ளப்பட்டு வருகிறது. இந்த காருக்கு ஸ்கோடா நிறுவனம் ராலி க்ரீன், ரேஸ் ப்ளூ, கொரிடா ரெட், மேஜிக் ப்ளாக் என்ற 5 நிறத்தேர்வுகளை வழங்கியுள்ளது.

முதல் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 கார் இந்தியாவில் டெலிவிரி... அட்டகாசமான புகைப்படம் இதோ...!

இதில் ரேஸ் ப்ளூ நிறத்தில் தான் முதல் ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடல் கோவாவில் டெலிவிரி செய்யப்பட்டுள்ளதாக டீம் பிஎச்பி தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. ஆக்டேவியாவின் இந்த புதிய ஆர்எஸ்245 வெர்சனில் பொருத்தப்பட்டுள்ள 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 245 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது.

முதல் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 கார் இந்தியாவில் டெலிவிரி... அட்டகாசமான புகைப்படம் இதோ...!

இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 250 kmph என்ற வேகத்தில் இயங்கக்கூடிய இந்த கார் 0-விலிருந்து 100 kmph வேகத்தை 6.6 வினாடிகளில் எட்டிவிடும்.

முதல் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 கார் இந்தியாவில் டெலிவிரி... அட்டகாசமான புகைப்படம் இதோ...!

வழக்கமான ஆக்டேவியா மாடலில் இருந்து வேறுப்படுவதற்காக தேன்கூடு வடிவிலான ஏர் டேம் மற்றும் கருப்பு நிறத்தில் ஸ்மோக்டு ஹெட்லைட்டை கொண்டுள்ள இந்த புதிய வெர்சன் காரில் 18-இன்ச் இரட்டை வண்ண அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

முதல் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 கார் இந்தியாவில் டெலிவிரி... அட்டகாசமான புகைப்படம் இதோ...!

இவை மட்டுமின்றி செவ்வக வடிவிலான ஃபாக் விளக்குகள், பளபளப்பான கருப்பு க்ரில், பூட் ஸ்பாய்லர் மற்றும் ஸ்டீல் எக்ஸாஸ்ட் டிப்கள் உள்ளிட்டவையும் இந்த காரில் உள்ளன. அலாய் சக்கரங்களுடன் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

முதல் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 கார் இந்தியாவில் டெலிவிரி... அட்டகாசமான புகைப்படம் இதோ...!

பாதுகாப்பிற்கு இந்த காரில் 9 காற்றுப்பைகள், அடாப்டிவ் லைட் சிஸ்டம், ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல், எலக்ட்ரானிக் ப்ரேக் டிஸ்ட்ரீபியுஷன் சிஸ்டம், ஹைட்ராலிக் ப்ரேக் அசிஸ்ட் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

முதல் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 கார் இந்தியாவில் டெலிவிரி... அட்டகாசமான புகைப்படம் இதோ...!

சிபியூ முறையில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்ற இந்த காரின் டெலிவிரி பணிகள் லாக்டவுன் முடிவுக்கு வந்தவுடன் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே ஊரடங்கில் சிறிய தளர்வு ஏற்பட்டவுடன் இந்த பணிகள் துவங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 7, 2020, 8:30 [IST]
English summary
Skoda Octavia RS 245 deliveries begin
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+