2020 ஸ்கோடா ரேபிட் காரை ட்ரைவ் செய்யாத வரைக்கும் அதன் திறனை நம்ப மாட்டீர்கள்.. புதிய டிவிசி வீடியோ..

ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகமான ரேபிட் செடான் மாடலின் புதிய டெலிவிஷன் கமர்ஷியல் (டிவிசி) வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 ஸ்கோடா ரேபிட் காரை ட்ரைவ் செய்யாத வரைக்கும் அதன் திறனை நம்ப மாட்டீர்கள்.. புதிய டிவிசி வீடியோ..

இந்திய சந்தையில் சி-பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஸ்கோடாவின் ரேபிட் செடான் கார் மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா மற்றும் ஹோண்டா சிட்டி மாடல்களுக்கு விற்பனையில் போட்டியாக உள்ளது.

2020 ஸ்கோடா ரேபிட் காரை ட்ரைவ் செய்யாத வரைக்கும் அதன் திறனை நம்ப மாட்டீர்கள்.. புதிய டிவிசி வீடியோ..

புதிய தத்துவத்தின்படி ஸ்கோடா நிறுவனம் அதன் டீசல் என்ஜின்களுக்கு பதிலாக பெட்ரோல் யூனிட்களின் மீது கவனத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை பிஎஸ்6 தரத்தில் பெற்றுள்ள ஸ்கோடா ரேபிட் செடான் மாடல் தயாரிப்பு நிறுவனத்தின் மிகவும் மலிவான விலை கொண்ட காராக விளங்குகிறது.

2020 ஸ்கோடா ரேபிட் காரை ட்ரைவ் செய்யாத வரைக்கும் அதன் திறனை நம்ப மாட்டீர்கள்.. புதிய டிவிசி வீடியோ..

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள டிவிசி வீடியோவில் காரின் அப்டேட் செய்யப்பட்ட என்ஜின் தான் மையக்கருத்தாக எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. மேலே கூறப்பட்ட இதன் 1.0 லிட்டர், 3 சிலிண்டர், டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 110 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

2020 ஸ்கோடா ரேபிட் காரை ட்ரைவ் செய்யாத வரைக்கும் அதன் திறனை நம்ப மாட்டீர்கள்.. புதிய டிவிசி வீடியோ..

இந்த வீடியோவில் புதிய ரேபிட் கார் ஆற்றல் மிக்கதாகவும் அதேநேரம் எரிபொருள் திறனை சிறப்பாக கொண்டதாகவும் விளங்குகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நீங்கள் நம்ப வேண்டுமென்றால் ஒரே முறையாவது இந்த காரை ஓட்டி பாருங்கள் எனவும் இந்த டிவிசி வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

2020 ஸ்கோடா ரேபிட் காரை ட்ரைவ் செய்யாத வரைக்கும் அதன் திறனை நம்ப மாட்டீர்கள்.. புதிய டிவிசி வீடியோ..

முன்னதாக ரேபிட் காரின் பிஎஸ்4 வெர்சனில் வழங்கப்பட்டு வந்த 1.6 லிட்டர் எம்பிஐ என்ஜினை காட்டிலும் புதிய பிஎஸ்6 இணக்கமான என்ஜின் 23 சதவீதம் கூடுதல் எரிபொருள் திறனை பெற்றுள்ளது. இதனால் 2020 ரேபிட் மாடலின் மைலேஜ் அளவு 18.97 kmpl என்ற அளவில் உள்ளது.

2020 ஸ்கோடா ரேபிட் காரை ட்ரைவ் செய்யாத வரைக்கும் அதன் திறனை நம்ப மாட்டீர்கள்.. புதிய டிவிசி வீடியோ..

டிசைன் அமைப்பை பொறுத்தவரையில் வெளிப்புறத்தில் இந்த 2020 மாடல் அதன் முந்தைய தலைமுறை காரில் இருந்து பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் பெறவில்லை. முன்புறத்தில் கருப்பு நிற பட்டாம்பூச்சி வடிவிலான க்ரில் ஆனது ஸ்கோடா ப்ராண்ட்டின் லோகோவுடன் உள்ளது.

2020 ஸ்கோடா ரேபிட் காரை ட்ரைவ் செய்யாத வரைக்கும் அதன் திறனை நம்ப மாட்டீர்கள்.. புதிய டிவிசி வீடியோ..

இவற்றுடன் வெளிப்புறத்தில் தென்படுகின்ற கூர்மையான கேரக்டர் லைன்கள் மற்றும் ஸ்போட்டியான அலாய் சக்கரங்கள் காருக்கு மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகின்றன. அதேபோல் உட்புறத்தில் வழங்கப்பட்டுள்ள தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் திரை, காற்றோட்டமான கேபின், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை.

ரைடர், அம்பிஷன், ஓனிக்ஸ், ஸ்டைல் மற்றும் மோண்டே கார்லோ போன்ற வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள ஸ்கோடா ரேபிட் 1.0 டிஎஸ்ஐ மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.7.49 லட்சத்தில் இருந்து ரூ.11.79 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 24, 2020, 16:30 [IST]
English summary
Skoda Rapid 1.0 TSI Check out the new TVC
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+