சிஎன்ஜி கார்களை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஸ்கோடா? சிஎன்ஜி பம்ப் உடன் ரேபிட் கார் சோதனை

சிஎன்ஜி பம்ப் உடன் ஸ்கோடா ரேபிட் சோதனை காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதன்மூலம் அறிய முடிந்த விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சிஎன்ஜி கார்களை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஸ்கோடா? சிஎன்ஜி பம்ப் உடன் ரேபிட் கார் சோதனை

ஆட்டோகிராம் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக கிடைத்துள்ள இந்த ஸ்பை படங்களினால் ஸ்கோடா ரேபிட் காரின் சிஎன்ஜி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமாகலாம் என்ற பேச்சுக்கள் எழ துவங்கியுள்ளன.

சிஎன்ஜி கார்களை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஸ்கோடா? சிஎன்ஜி பம்ப் உடன் ரேபிட் கார் சோதனை

ஏனெனில் சிஎன்ஜி கார்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவர தயாராகி வருவதாகவும், இந்திய அரசாங்கம் சிஎன்ஜி கார்களின் நெட்வொர்க்கை நாட்டில் அதிகப்படுத்த முற்படும்போது தங்களது சிஎன்ஜி கார்கள் ஒவ்வொன்றாக அறிமுகமாகும் எனவும் ஸ்கோடா நிறுவனம் கடந்த ஆண்டிலேயே கூறியிருந்தது.

சிஎன்ஜி கார்களை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஸ்கோடா? சிஎன்ஜி பம்ப் உடன் ரேபிட் கார் சோதனை

ரேபிட் சிஎன்ஜி காரில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் சிஎன்ஜி (டிஜிஐ என்ற பெயரில்) உதவியுடன் பொருத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இத்தகைய சிஎன்ஜி என்ஜின் அமைப்பை ஐரோப்பாவில் விற்பனையில் உள்ள ஃபோக்ஸ்வேகன்- ஸ்கோடா கார்களில் பார்க்க முடியும்.

சிஎன்ஜி கார்களை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஸ்கோடா? சிஎன்ஜி பம்ப் உடன் ரேபிட் கார் சோதனை

பெட்ரோல் வெர்சன் உடன் ஒப்பிடும்போது இந்த சிஎன்ஜி கார்கள் குறைவான என்ஜின் ஆற்றலில் இயங்குகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், ஃபோக்ஸ்வேகன் போலோவின் ஐரோப்பிய வெர்சன். இது டிஜிஐ என்ஜினில் அதிகப்பட்சமாக 90 பிஎச்பி பவரிலும், பெட்ரோல் என்ஜினில் 20 பிஎச்பி அதிகமாக 110 பிஎச்பி பவரிலும் இயங்குகிறது.

சிஎன்ஜி கார்களை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஸ்கோடா? சிஎன்ஜி பம்ப் உடன் ரேபிட் கார் சோதனை

சிஎன்ஜி என்ஜினினால் பயன் என்னவென்றால், அவற்றுடன் கார் சிறப்பான எரிபொருள் திறனிலும், குறைவான எரிபொருள் செலவிலும் இயங்கும். அதேநேரம் வாயு குறைவாக இருக்கும்போது பெட்ரோல்-மட்டும் மோட்-ற்கும் காரை கொண்டு சென்று இயக்கம் நிறுத்தப்படுவதை தவிர்க்கலாம்.

சிஎன்ஜி கார்களை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஸ்கோடா? சிஎன்ஜி பம்ப் உடன் ரேபிட் கார் சோதனை

ஸ்கோடா ரேபிட் சிஎன்ஜி காரின் என்ஜின் சிறப்பம்சங்கள் அனைத்தும் ஐரோப்பிய போலோ உடன் ஒத்திருக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் எப்படியிருந்தாலும் ஸ்கோடாவின் இந்த சிஎன்ஜி கார் அதிக எரிபொருள் திறனில் மாசை அதிகம் வெளிப்படுத்தாத செடான் காரை விரும்புவோருக்கு ஏற்றதாக விளங்கும்.

சிஎன்ஜி கார்களை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஸ்கோடா? சிஎன்ஜி பம்ப் உடன் ரேபிட் கார் சோதனை

இந்த காரில் தொழிற்சாலையிலேயே பொருத்தப்படும் தொழிற்நுட்பம், சந்தைக்கு பிறகான சிஎன்ஜி தொகுப்பை காட்டிலும் மிகவும் குறைவான இரைச்சலை வெளிப்படுத்தும். ஆனால் நிச்சயம், சிஎன்ஜி என்ஜின்கள் கமர்ஷியல் வாகனங்களில் தான் பொருத்தப்படுவை என்ற எதிர்மறையான கருத்தை ஸ்கோடா ரேபிட் கார் எதிர்கொண்டே ஆக வேண்டும்.

சிஎன்ஜி கார்களை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஸ்கோடா? சிஎன்ஜி பம்ப் உடன் ரேபிட் கார் சோதனை

ரேபிட் சிஎன்ஜி காரின் அறிமுகம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், காம்பெக்ட் செடான் பிரிவில் முதல் ஆளாக சிஎன்ஜி வேரியண்ட்டை கொண்டுவரும் நிறுவனமாக ஸ்கோடா விளங்கலாம். பெட்ரோல் என்ஜின் உடன் ரேபிட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.49 லட்சமாக உள்ளது. இதன் சிஎன்ஜி வேரியண்ட்டின் விலையை இதனை காட்டிலும் சற்று ப்ரீமியமாக எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 27, 2020, 22:00 [IST]
English summary
Skoda Rapid CNG Spied Testing For First Time India Launch On Cards
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+