புதிய ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

பிஎஸ்6 எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரின் வேரியண்ட்டுகளில் இடம்பெற்றிருக்கும் வசதிகளை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 மாடலானது இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், விலை குறைவான ஸ்போர்ட்லைன் மற்றும் அதிக விலை கொண்ட எல் அண்ட் கே என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இந்த வேரியண்ட்டுகளில் உள்ள வசதிகள் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ஸ்போர்ட்லைன்

எல்இடி ஹெட்லைட்டுகள், வளைவுகளில் திரும்பும்போது ஒளி வழங்கும் கார்னரிங் வசதியுடன் கூடிய பனி விளக்குகள், க்ரோம் அலங்காரத்துடன் ரியர் டிஃபியூசர், கிளாஸி பிளாக் பேக்கேஜ், பிளாக் லிப் ஸ்பாய்லர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

புதிய ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டின் உட்புறத்தில் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், அலுமினியம் பெடல்கள், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், மெமரி வசதியுடன் ரியர் வியூ மிரர்கள், ஜன்னல்களுக்கு சன் வைசர்கள், ஸ்டீயரிங் வீலில் கியர் ஷிஃப்ட் செலக்டர் வசதிகள் உள்ளன.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

பனோரமிக் சன்ரூஃப், 12 விதமான நிலைகளில் உயரத்தை எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் முறையில் கூட்டி குறைக்கும் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை, எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் லம்பார் சப்போர்ட், லெதர் உறையுடன் கியர் லிவர் மற்றும் ஸ்டீயரிங் வீல், கருப்பு வண்ண அல்கான்ட்ரா அப்ஹோல்ஸ்ட்ரி, 8 ஸ்பீக்கர்களுடன் மியூசிக் சிஸ்டம், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்லிங்க் கனெக்ட்டிவிட்டி வசதிகள் உள்ளன.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், மெக்கானிக்கல் பிரேக் அசிஸ்ட் தொழில்நுட்பம், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஹில் பிரேக் அசிஸ்ட், கீ லெஸ் என்ட்ரி வசதி, எஞ்சின் ஸ்டார்ட் - ஸ்டாப் வசதிகள் உள்ளன.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

சூப்பர்ப் எல் அண்ட் கே

இந்த வேரியண்ட்டில் கூடுதலாக அலங்கரமான தோற்றத்தை தரும் வேலைப்பாடுகள் மற்றும் ஆக்சஸெரீகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, வெளிப்புறத்தில் பல இடங்களில் க்ரோம் பூச்சு பாகங்களுடன் ஜொலிக்கிறது. உட்புறத்திலும் பல இடங்களில் க்ரோம் பூச்சு பாகங்களுடன் மிகவும் பிரிமீயமாக தெரிகிறது. கூடுதலாக இந்த வேரியண்ட்டில் டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், விர்ச்சுவல் காக்பிட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

MOST READ : ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் கூபே எஸ்யூவி காரின் கடைசி டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..?

புதிய ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ஓட்டுனர்கள் அயர்ந்து போவதை எச்சரிக்கும் வசதி, வென்டிலேட்டட் இருக்கைகள், பின் இருக்கையிலிருந்து முன் இருக்கையை அட்ஜெஸ்ட் வசதி, பீஜ் மற்றும் பழுப்பு வண்ண லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் சப் ஊஃபர், 11 ஸ்பீக்கர்கள் கொண்ட கேன்டன் மியூசிக் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

பிஎஸ்6 எஞ்சின்

புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலானது 0 - 100 கிமீ வேகத்தை 7.7 வினாடிகளில் எட்டிவிடும்.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

வணணத் தேர்வுகள்

புதிய ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 மாடலின் ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டானது மூன் ஒயிட், ஸ்டீல் க்ரே மற்றும் ரேஸ் புளூ ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். எல் அண்ட் கே வேரியண்ட்டானது பிசினஸ் க்ரே, மூன் ஒயிட், மேக்னெட்டிக் பிரவுன், மேஜிக் பிளாக் மற்றும் லாவா புளூ ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

விலை விபரம்

புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரின் ஸ்போர்ட்லைன் வேரியண்ட் ரூ.29.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், எல் அண்ட் கே வேரியண்ட் ரூ.32.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 29, 2020, 10:41 [IST]
English summary
Here are given variant wise features of new Skoda Superb BS6 model.
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+