ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்களில் 1.5 லி பெட்ரோல் என்ஜின்...

ஸ்கோடா நிறுவனத்தின் விஷன் இன் எஸ்யூவி மாடலின் காப்புரிமை படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதன் மூலம் வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்களில் 1.5 லி பெட்ரோல் என்ஜின்...

இந்தியன் ஆட்டோஸ்ப்ளாக் செய்தி தளம் மூலமாக வெளிவந்துள்ள இந்த காப்புரிமை படங்களில் மிகவும் முக்கியமாக 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டிஎஸ்ஐ என்ஜின் உடன் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் தேர்வுடனும் புதிய ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி மாடல் விற்பனை செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்களில் 1.5 லி பெட்ரோல் என்ஜின்...

இந்த மிட்-சைஸ் எஸ்யூவி மாடல் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் வழித்தோன்றல் என்பது நமக்கு ஏற்கனவே தெரியும். விஷன் இன் எஸ்யூவி மாடலை இந்நிறுவனம் புதிய எம்க்யூபி ஏ0-இன் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கி வருகின்றது.

ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்களில் 1.5 லி பெட்ரோல் என்ஜின்...

தற்போது இணையத்தில் கசிந்துள்ள தகவல்களில் இந்த எஸ்யூவி காரை ஸ்கோடா நிறுவனம் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளிலும் சோதனைப்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்களில் 1.5 லி பெட்ரோல் என்ஜின்...

விஷன் இன் எஸ்யூவி காருக்கு வழங்கப்படவுள்ள 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் ஆனது ஸ்கோடா ராபிட் மட்டுமின்றி இந்நிறுவனத்தின் இந்திய சந்தைக்கான கூட்டணி நிறுவனமான ஃபோக்ஸ்வேகனின் டைகுன் மாடலிலும் பொருத்தப்பட்டு வருகிறது.

ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்களில் 1.5 லி பெட்ரோல் என்ஜின்...

1.5 லிட்டர் டிஎஸ்ஐ எவொ 4-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 148 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கும். ஆனால் இந்த என்ஜின் தேர்வு விஷன் இன் எஸ்யூவி மாடலின் டாப் வேரியண்ட்களுக்கு மட்டும் தான் வழங்கப்படவுள்ளது.

ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்களில் 1.5 லி பெட்ரோல் என்ஜின்...

இவற்றுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது. இதே என்ஜின்-கியர்பாக்ஸ் காம்போவில் தான் ஃபோக்ஸ்வேகன் டைகுன் விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்கோடா விஷன் இன் மாடலின் இந்திய அறிமுகத்தை 2021ஆம் ஆண்டின் மத்தியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்களில் 1.5 லி பெட்ரோல் என்ஜின்...

அறிமுகத்திற்கு பிறகு ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், நிஸான் கிக்ஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மாடல்களுக்கு விற்பனையில் போட்டியாக விளங்கவுள்ள இந்த எஸ்யூவி மாடலின் விலையை எக்ஸ்ஷோரூமில் ரூ.11- 16 லட்சம் அளவில் ஸ்கோடா நிறுவனம் நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, June 8, 2020, 10:42 [IST]
English summary
Skoda Vision IN patent images leaked: Clearest look yet at the upcoming Skoda SUV
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+