உலகிலேயே முதன்முதலாக இந்தியாவில் அறிமுகமானது ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி..!
ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து விஷன் இன் கான்செப்ட் மாடல் நடைபெற்றுவரும் ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் இந்தியா மட்டுமில்லாமல் மொத்த உலக சந்தைக்கும் காட்சியளித்துள்ளது. அடுத்த 2021ஆம் ஆண்டில் அறிமுகமாகலாம் என கூறப்படும் இந்த மாடலை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்போம்.

இந்த விஷன் இன் கான்செப்ட் கார் 4,256 மிமீ நீளமும், 1,589 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸ் அளவு 2,671 மிமீ ஆகும். முன்புறத்தில் இந்த கார் அகலமான க்ரில் அமைப்பும், 3டி தோற்றத்திற்காக இந்த க்ரில்லின் பார்டர்களில் மெல்லியதாக எல்இடி விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

க்ரில்லின் இரு முனைகளிலும் எல்இடி டிஆர்எல்களுடன் உள்ள எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த இண்டிகேட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஃபாக் விளக்குகளும் எல்இடி தரத்தில் ஹெட்லைட்களுக்கு கீழே பொருத்தப்பட்டுள்ளன.

முன்புறத்தில் உள்ள பம்பர், காற்றை உள் இழுக்கும் பகுதி மற்றும் அலுமினியம் ஸ்பாய்லர்களுடன் காணப்படுகிறது. ஸ்கோடா நிறுவனத்தின் பேட்ஜ் பின்புற டெயில்லைட்களுக்கு மத்தியில் பொருத்தப்பட்டுள்ளது.

இவற்றுடன் செங்குத்தாக வடிவமைக்கப்பட்ட எதிரொலிப்பான் மற்றும் அலுமினியம் டிஃப்யூஸர் போன்றவையும் இந்த விஷன் இன் கான்செப்ட் மாடலின் பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமில்லாமல் காரின் வெளிப்புறத்தில் ரூஃப் ரெயில்ஸ், 19-இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் கண்ணாடியில் பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இந்த புதிய விஷன் இன் கான்செப்ட் மாடலின் உட்புறம் ஸ்கோடாவின் புதிய டிசைன் மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 12.3 இன்ச்சில் மைய திரை, பல செயல்முறைக்களுக்கான கண்ட்ரோல்களை கொண்ட பிடிப்பதற்கு ஏதுவான 3-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் ஆகியவை இந்த புதிய மாடலின் உட்புறத்தில் உள்ளன.

ஹேண்ட் ப்ரேக்கிற்கு பதிலாக எலக்ட்ரோ மெக்கானிக்கல் பார்க்கிங் ப்ரேக் மாற்றப்பட்டுள்ளது. இந்த ப்ரேக்கிற்கான சிறிய அளவிலான ராக்கர் ஸ்விட்ச் கிளாசிக் கியர் லிவர் தேர்ந்தெடுக்கும் பகுதியில் உள்ளது. இதனுடன் ஷிஃப்ட்-பை-வயர் தொழிற்நுட்பத்தையும் இந்த மிட்-சைஸ் எஸ்யூவியை வாங்குவோர் பெறலாம்.

இந்த கான்செப்ட் எஸ்யூவி மாடலில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜினை ஸ்கோடா நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் ட்ரான்ஸ்மிஷனிற்காக 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்கோடாவின் இந்த புதிய விஷன் இன் கான்செப்ட் மாடல் 0-லிருந்து 100kmph வேகத்தை 8.7 வினாடிகளில் அடைந்துவிடும். இந்த காரின் அதிகப்பட்ச வேகம் 195 kmph. இந்த கான்செப்ட் மாடலின் டிசைனை பின் தொடர்ந்து சில கார்களை ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து எதிர்ப்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








