தந்தையை ஆச்சரிய பரிசால் வியக்க வைத்த இளைஞர்.. காரை எப்படி வாங்கினார் என தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க!

இளைஞர் ஒருவர் தனது பெற்றோர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கி அசத்தியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வயதான தந்தையை ஆச்சரிய பரிசால் வியக்க வைத்த இளைஞர்... காரை எப்படி வாங்கினார் தெரிஞ்சா அசந்துருவீங்க!

பொதுவாக, இளைஞர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கனவுகளுடன் தங்களை பயணத்தை நடத்தி வருகின்றனர். இதில், பெரும்பாலான இளைஞர்களுக்கு சொந்த வீடு மற்றும் கார் போன்றவையே மிகப்பெரிய கனவாக இருக்கின்றது. இத்தகைய காரை தன்னுடைய வயதான அன்புமிக்க பெற்றோர்களுக்கு பரிசாக வழங்குவதை ஒரு சிலர் தங்களின் வாழ்க்கை லட்சியமாக நினைத்து வருகின்றனர்.

வயதான தந்தையை ஆச்சரிய பரிசால் வியக்க வைத்த இளைஞர்... காரை எப்படி வாங்கினார் தெரிஞ்சா அசந்துருவீங்க!

இத்தகைய ஓர் இளைஞர்தான் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக மாறியிருக்கும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் டாப் எண்ட் வேரியண்டை, வயதான தந்தைக்கு பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார். இவர் இந்த காரை எப்படி வாங்கினார் என்பதுதான் உங்களில் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

வயதான தந்தையை ஆச்சரிய பரிசால் வியக்க வைத்த இளைஞர்... காரை எப்படி வாங்கினார் தெரிஞ்சா அசந்துருவீங்க!

காரை பரிசாக வழங்கிய இளைஞர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றார். பியர்ட் பைக்கர் என்னும் யுடியூப் சேனலைதான் அவர் நடத்தி வருகிறார். இதில், வாகனத்தை எப்படி வாங்க வேண்டும், குறிப்பிட்ட வாகனத்தின் பயன்பாடு என்ன என்பது போன்ற வாகனம் சார்ந்த பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றார்.

வயதான தந்தையை ஆச்சரிய பரிசால் வியக்க வைத்த இளைஞர்... காரை எப்படி வாங்கினார் தெரிஞ்சா அசந்துருவீங்க!

அவ்வாறு வெளியிட்ட வீடியோக்களின்மூலம் சம்பாதித்த தொகையை வைத்தே தற்போது எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரை அவர் வாங்கியிருக்கின்றார்.

இப்போது, இந்த காருக்கான முன் தொகையை மட்டுமே அவர் செலுத்தியிருக்கின்றார். மேலும், இது முழுக்க முழுக்க அவரின் பெற்றோர்களுடைய பயன்பாட்டிற்கு மட்டுமே வாங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.

வயதான தந்தையை ஆச்சரிய பரிசால் வியக்க வைத்த இளைஞர்... காரை எப்படி வாங்கினார் தெரிஞ்சா அசந்துருவீங்க!

நாங்கள் ஏற்கனவே கூறியதைப் போலவே இந்த கார் எம்ஜி ஹெக்டரின் ஹை எண்ட் வேரியண்ட் ஆகும். ஆகையால், இதில் அதிகளவில் சொகுசு வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன. பனோரமிக் சன் ரூஃப், நேரடி இணைய வசதிகொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் காணப்படுகின்றன.

வயதான தந்தையை ஆச்சரிய பரிசால் வியக்க வைத்த இளைஞர்... காரை எப்படி வாங்கினார் தெரிஞ்சா அசந்துருவீங்க!

இதுமட்டுமின்றி, இந்த காரை ஸ்மார்ட்போன் மூலம் ஆன்-ஆஃப் செய்வது, உலகின் எந்த மூலையில் இருந்தும் லாக் மற்றும் அன்லாக் செய்வது போன்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆகையால், இந்த காரை திருடுவது என்பது சாத்தியமே இல்லாத ஓர் விஷயம் ஆகும். அப்படியே திருடப்பட்டாலும், அந்த திருடப்பட்ட நபர் வசமாக சிக்கிக் கொள்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வயதான தந்தையை ஆச்சரிய பரிசால் வியக்க வைத்த இளைஞர்... காரை எப்படி வாங்கினார் தெரிஞ்சா அசந்துருவீங்க!

இதுமாதிரியான நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பம்சங்கள் எம்ஜி ஹெக்டரின் ஹை எண்ட் வேரியண்டில் உள்ளது. ஒவ்வொரு அம்சம் தனித்துவமான அம்சமாக இருக்கின்றது. அதில் ஒன்றுதான் வாய்ஸ் கமெண்ட் மூலம் சன்ரூஃப்களை இயக்குவது மற்றும் காரை ஆன்-ஆஃப் செய்வது உள்ளிட்டவை ஆகும்.

வயதான தந்தையை ஆச்சரிய பரிசால் வியக்க வைத்த இளைஞர்... காரை எப்படி வாங்கினார் தெரிஞ்சா அசந்துருவீங்க!

இதுபோன்ற பல்வேறு ஆச்சரியப்படுத்தும் அம்சங்களை இந்த கார் கொண்டிருப்பதால் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக ஹெக்டர் எஸ்யூவி மாறியிருக்கின்றது.

இந்த காரில் 1.4 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 2.0 லிலட்டர் டீசல் எஞ்ஜின் ஆகிய தேர்வுகள் கிடைக்கின்றன. இதில், பெட்ரோல் வேரியண்ட் அதிகபட்சமாக 141 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இதில், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வும் காணப்படுகின்றது. இத்துடன், இதனை எம்ஜி 48V என்ற வேரியண்டையும் வழங்குகிறது. இது மற்ற மாடல்களைக் காட்டிலும் அதிக மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது.

வயதான தந்தையை ஆச்சரிய பரிசால் வியக்க வைத்த இளைஞர்... காரை எப்படி வாங்கினார் தெரிஞ்சா அசந்துருவீங்க!

இதேபோன்று, டீசல் எஞ்ஜினும் அசாத்திய திறனைக் கொண்டதாக இருக்கின்றது. இது அதிகபட்சமாக 168 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதில், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழக்கமான ஒன்றாக இருக்கின்றது.

எம்ஜி நிறுவனம் இந்த காரை இந்தியாவில் கால் தடம் பதித்த ஆரம்பமாக, அதாவது இந்தியாவிற்கான முதல் காராக அறிமுகம் செய்தது குறிப்பிடத்தகுந்தது.

Source: Beard Bikerr/YouTube

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Son Gifts To Parents A MG Hector Top End Variant. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X