தென்னாப்பிரிக்க எஸ்-பிரெஸ்ஸோவில் கூடுதல் பாதுகாப்புகள், இந்தியா என்றால் எளக்காராமா? சுஸுகியை வசைபாடும் நெட்டிசன்கள்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடலை காட்டிலும் தென்னாப்பிரிக்காவில் மிகவும் பாதுகாப்பான கார் என்ற பெயருடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

தென்னாப்பிரிக்க எஸ்-பிரெஸ்ஸோவில் கூடுதல் பாதுகாப்புகள், இந்தியா என்றால் எளக்காராமா? சுஸுகியை வசைபாடும் நெட்டிசன்கள்

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோவின் உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனை மதிப்பீடுகள் அதன் பாதுகாப்பின் மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளன. ஏனெனில் இந்த சோதனையில் இந்த மாருதி காருக்கு பூஜ்ஜிய நட்சத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க எஸ்-பிரெஸ்ஸோவில் கூடுதல் பாதுகாப்புகள், இந்தியா என்றால் எளக்காராமா? சுஸுகியை வசைபாடும் நெட்டிசன்கள்

இந்த மினி-எஸ்யூவி கார் இந்தியா மட்டுமின்றி வேறு சில நாட்டு சந்தைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது, இதில் தென்னாப்பிரிக்காவும் ஒன்று. என்சிஏபி சோதனை முடிவு வெளிவந்ததில் இருந்து தென்னாப்பிரிக்கா மக்களிடமும் எஸ்-பிரெஸ்ஸோவின் பாதுகாப்பு குறித்த அச்சம் உருவாகியுள்ளது.

தென்னாப்பிரிக்க எஸ்-பிரெஸ்ஸோவில் கூடுதல் பாதுகாப்புகள், இந்தியா என்றால் எளக்காராமா? சுஸுகியை வசைபாடும் நெட்டிசன்கள்

இந்த நிலையில் ஆச்சிரியம் தரும் விதமாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடலை காட்டிலும் தென்னாப்பிரிக்க எஸ்-பிரேஸ்ஸோ கார் மிகவும் பாதுகாப்பானது என்று சுஸுகி தென்னாப்பிரிக்கா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

தென்னாப்பிரிக்க எஸ்-பிரெஸ்ஸோவில் கூடுதல் பாதுகாப்புகள், இந்தியா என்றால் எளக்காராமா? சுஸுகியை வசைபாடும் நெட்டிசன்கள்

இது தொடர்பாக மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தை அணுகியதற்கு, இப்போதுவரையில் எந்த பதிலும் இல்லை. இப்போது, தென்னாப்பிரிக்காவில் விற்கப்படும் எஸ்-பிரஸ்ஸோ இந்தியாவில் தான் தயாரிக்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்க எஸ்-பிரெஸ்ஸோவில் கூடுதல் பாதுகாப்புகள், இந்தியா என்றால் எளக்காராமா? சுஸுகியை வசைபாடும் நெட்டிசன்கள்

ஆனால் அங்கு விற்கப்படும் மாடலுக்கு இரட்டை ஏர்பேக்குகள் மற்றும் முன் சீட்-பெல்ட்கள் முன்-டென்ஷனர்கள் மற்றும் சுமை வரம்புகள் உள்ளிட்டவை விலை குறைவான வேரியண்ட்களில் இருந்து தரமாக கிடைக்கின்றன. இந்தியாவிலோ மேற்கூறப்பட்டுள்ள வசதிகள் பேஸ்-வேரியண்ட்களில் கூடுதல் தேர்வாகவே வழங்கப்படுகின்றன. அதாவது அவற்றை பெற கூடுதல் செலவாகும்.

தென்னாப்பிரிக்க எஸ்-பிரெஸ்ஸோவில் கூடுதல் பாதுகாப்புகள், இந்தியா என்றால் எளக்காராமா? சுஸுகியை வசைபாடும் நெட்டிசன்கள்

மத்திய மற்றும் டாப் வேரியண்ட்களில் தான் இவை நிலையாக வழங்கப்படுகின்றன. உலகளாவிய என்சிஏபி சோதனையில் உட்படுத்தப்பட்டது மேற்கூறிய பாதுகாப்பு அம்சங்களில் சிலவற்றை கொண்ட எஸ்-பிரேஸ்ஸோவின் ஆரம்ப நிலை வேரியண்ட்டாகும்.

தென்னாப்பிரிக்க எஸ்-பிரெஸ்ஸோவில் கூடுதல் பாதுகாப்புகள், இந்தியா என்றால் எளக்காராமா? சுஸுகியை வசைபாடும் நெட்டிசன்கள்

சமூக வலைத்தள பதிவு குறித்து சுஸுகி ஆட்டோ தென்னாப்பிரிக்காவின் தேசிய பிராண்ட் நிர்வாகி பிரெண்டன் கார்பெண்டர் கருத்து தெரிவிக்கையில், "மோதல் சோதனையில் பயன்படுத்தப்பட்ட மாடல் இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மாதிரியாகும். அந்த குறிப்பிட்ட மாடலில் ஓட்டுநரின் பக்கத்தில் ஒரு காற்றுப்பை மட்டுமே உள்ளது.

தென்னாப்பிரிக்க எஸ்-பிரெஸ்ஸோவில் கூடுதல் பாதுகாப்புகள், இந்தியா என்றால் எளக்காராமா? சுஸுகியை வசைபாடும் நெட்டிசன்கள்

மேலும் அதற்கு முன் இடம்பெறும் முன் இருக்கை பெல்ட்கள் மற்றும் சுமை வரம்புகளைக் கொண்ட டென்ஷனர்கள் உள்ளிட்டவை எதுவும் இல்லை. கூடுதல் காற்றுப்பை மற்றும் சீட்-பெல்ட் மேம்பாடுகள் இங்கு விற்பனை செய்யப்படும் மாடலை மிகவும் பாதுகாப்பான வாகனமாக ஆக்குகின்றன" என கூறினார்.

தென்னாப்பிரிக்க எஸ்-பிரெஸ்ஸோவில் கூடுதல் பாதுகாப்புகள், இந்தியா என்றால் எளக்காராமா? சுஸுகியை வசைபாடும் நெட்டிசன்கள்

ஆப்பிரிக்க எஸ்-பிரஸ்ஸோ வெர்சன் இன்னும் ஆப்பிரிக்க கார்களுக்கான ஆப்பிரிக்கா மோதல் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். எனவே பாதுகாப்பில் இரண்டு மாடல்களுக்கும் இடையிலான வேறுபாடு எவ்வளவு பெரிதாக உள்ளது என்பதை காண நாம் காத்திருக்க வேண்டியுள்ளது.

தென்னாப்பிரிக்க எஸ்-பிரெஸ்ஸோவில் கூடுதல் பாதுகாப்புகள், இந்தியா என்றால் எளக்காராமா? சுஸுகியை வசைபாடும் நெட்டிசன்கள்

இருப்பினும், சமூக ஊடகங்களில் சுஸுகி தென்னாப்பிரிக்காவின் கருத்துக்கள் பல இந்தியர்களை கோபப்படுத்தியுள்ளன. ஏனெனில் மற்ற சந்தைகளுடன் ஒப்பிடும்போது, ​​இந்திய சந்தையை சுஸுகி தரக்குறைவாக கருதுகிறது என்பதுபோல் இந்த கருத்து அமைந்துள்ளது.

தென்னாப்பிரிக்க எஸ்-பிரெஸ்ஸோவில் கூடுதல் பாதுகாப்புகள், இந்தியா என்றால் எளக்காராமா? சுஸுகியை வசைபாடும் நெட்டிசன்கள்

2020 நவம்பரில் மோதல் சோதனை முடிவுகள் வெளிவந்தபோது, ​​மாருதி சுஸுகி இந்தியா, "பாதுகாப்பு என்பது ஒரு முக்கியமான பிரச்சினை. எனவே உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் தங்கள் நாடுகளில் உள்ள மக்களின் பாதுகாப்பிற்கு அவர்கள் பொறுப்பாளிகள் என்பதால் பாதுகாப்பு நெறிமுறைகளை உன்னிப்பாக கவனித்து அவற்றை கட்டுப்படுத்தப்படுகின்றன.

தென்னாப்பிரிக்க எஸ்-பிரெஸ்ஸோவில் கூடுதல் பாதுகாப்புகள், இந்தியா என்றால் எளக்காராமா? சுஸுகியை வசைபாடும் நெட்டிசன்கள்

கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. இந்திய அரசு சமீபத்தில் கார் விபத்து சோதனை தரங்களை கடுமையாக அதிகரித்து அவற்றை ஐரோப்பிய தரங்களுக்கு ஒத்ததாக ஆக்கியுள்ளது. நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் இந்த உலகளாவிய தரங்களுடன் முழுமையாக இணக்கமாகதாகவே தயாரிக்கப்படுகின்றன. அப்போதுதான் இந்திய அரசாங்கத்தால் சான்றிதழ் பெறமுடியும்" என கூறியிருந்தது.

தென்னாப்பிரிக்க எஸ்-பிரெஸ்ஸோவில் கூடுதல் பாதுகாப்புகள், இந்தியா என்றால் எளக்காராமா? சுஸுகியை வசைபாடும் நெட்டிசன்கள்

இந்தியாவில் எஸ்-பிரேஸ்ஸோ மட்டுமின்றி கிட்டத்தட்ட பெரும்பான்மையான மாருதி கார்கள் உலகளாவிய என்சிஏபி சோதனையில் குறைவான மதிப்பீடுகளையே பெற்றுள்ளன. ஆனால் டாடா மோட்டார்ஸோ நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸின் பாதுகாப்பில் முழு 5 நட்சத்திரங்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Suzuki S-Presso Sold In South Africa Claimed To Be Safer Than India-Spec Car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X