மஹிந்திரா எஞ்சினுடன் ஐரோப்பாவில் கெத்து காட்டும் புதிய சாங்யாங் டிவோலி எஸ்யூவி!

மஹிந்திரா எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய சாங்யாங் டிவோலி எஸ்யூவி ஐரோப்பிய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 மஹிந்திரா எஞ்சினுடன் புதிய சாங்யாங் டிவோலி எஸ்யூவி அறிமுகம்!

மஹிந்திராவின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார் நிறுவனம் எஸ்யூவி தயாரிப்பில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்து வருகிறது. மேலும், அந்நிறுவனத்தின் பிரபல எஸ்யூவி மாடல்கள் இந்தியாவில் மஹிந்திரா பிராண்டில் ரீபேட்ஜ் செய்து விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

 மஹிந்திரா எஞ்சினுடன் புதிய சாங்யாங் டிவோலி எஸ்யூவி அறிமுகம்!

அதாவது, டிவோலி எஸ்யூவி எக்ஸ்யூவி300 என்ற பெயரிலும், ரெக்ஸ்ட்டன் எஸ்யூவி அல்டுராஸ் ஜி4 என்ற பெயரிலும் விற்பனையில் இருப்பது தெரிந்ததே. இந்த நிலையில், டிவோலி எஸ்யூவியானது புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

 மஹிந்திரா எஞ்சினுடன் புதிய சாங்யாங் டிவோலி எஸ்யூவி அறிமுகம்!

தற்போதைய மாடலில் வடிவமைப்பு மற்றும் வசதிகள் மேம்படுத்தப்பட்டு இருப்பதுடன், மஹிந்திராவின் புதிய பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு வந்துள்ளதே கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. அதாவது, மஹிந்திராவின் 1.2 லிட்டர் எம்ஸ்டாலியன் பெட்ரோல் எஞ்சின்தான் புதிய டிவோலி எஸ்யூவியில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 மஹிந்திரா எஞ்சினுடன் புதிய சாங்யாங் டிவோலி எஸ்யூவி அறிமுகம்!

இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 126 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில்தான் மஹிந்திராவின் எம்ஸ்டாலியன் குடும்ப வரிசையில் பல்வேறு சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சின்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தன.

 மஹிந்திரா எஞ்சினுடன் புதிய சாங்யாங் டிவோலி எஸ்யூவி அறிமுகம்!

இதில் குறைவான சிசி திறன் கொண்டதாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்த 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் கொண்ட மஹிந்திரா டியூவி300 ஸ்போர்ட்ஸ் மாடலும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இந்த நிலையில், டிவோலி எஸ்யூவியில் இந்த எஞ்சின் பொருத்தப்பட்டு ஐரோப்பிய சந்தையில் வந்துள்ளது.

 மஹிந்திரா எஞ்சினுடன் புதிய சாங்யாங் டிவோலி எஸ்யூவி அறிமுகம்!

மேலும், இந்த எஞ்சின் 0 - 100 கிமீ வேகத்தை 10.6 வினாடிகளில் எட்டிவிடும் என்று சாங்யாங் தெரிவித்துள்ளது. இந்த எஞ்சின் செயல்திறன், எரிபொருள் சிக்கனம் என அனைத்து விதத்திலும் நிறைவை தரும் வகையில் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 மஹிந்திரா எஞ்சினுடன் புதிய சாங்யாங் டிவோலி எஸ்யூவி அறிமுகம்!

இதே எஞ்சின் இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் எஸ்யூவியில் பொருத்தப்பட்டு விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியிலும் இந்த எஞ்சின் இடம்பெற இருப்பதாக தெரிகிறது.

 மஹிந்திரா எஞ்சினுடன் புதிய சாங்யாங் டிவோலி எஸ்யூவி அறிமுகம்!

ஆக இந்த புதிய மஹிந்திரா எஞ்சின் இந்தியர்களையும் விரைவில் ஈர்க்கும் வகையில் சந்தைக்கு வர இருக்கிறது. இதுதவிர்த்து, மஹிந்திரா நிறுவனம் எம்ஸ்டாலியன் குடும்ப வரிசையில் 1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்களையும் அறிமுகம் செய்துள்ளது. இவை புதிய தலைமுறை மஹிந்திரா கார்களில் இடம்பிடிக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 19, 2020, 19:30 [IST]
English summary
Ssangyong has launched Tivoli Facelift SUV with Mahindra Mstallion petrol Engine in Europian market.
மேலும்... #சாங்யாங் #ssangyong
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+