டூ வீலர் - கார்களுக்கு டஃப் கொடுக்கும் ஆட்டோக்கள்.. முன்பு காணாத வளர்ச்சி விகிதத்தில் வட மாநிலங்கள்!

இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு டஃப் கொடுக்கின்ற வகையில் ஆட்டோரிக்சாக்கள் உருவெடுத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

டூ வீலர் - கார்களுக்கு டஃப் கொடுக்கும் ஆட்டோரிக்சாக்கள்... எப்போதும் இல்லாத வளர்ச்சி விகிதத்தில் வட மாநிலங்கள்...

இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு டஃப் கொடுக்கின்ற வகையில் மூன்று சக்கர வாகனமான ஆட்டோக்களும் அதிகளவில் விற்பனையாகின்றன. இதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் கடந்த ஜனவரி மாதத்தைக் காட்டிலும் பிப்ரவரி மாதத்தில் அதிகம் ஆட்டோக் ரிக்ஷாக்கள் விற்பனையாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டூ வீலர் - கார்களுக்கு டஃப் கொடுக்கும் ஆட்டோரிக்சாக்கள்... எப்போதும் இல்லாத வளர்ச்சி விகிதத்தில் வட மாநிலங்கள்...

இந்த தகவலின்படி, 2020 பிப்ரவரி மாதத்தில் ஒட்டுமொத்தமாக 65,752 மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையாகியிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை ஜனவரி மாதத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் 9.17 சதவீதம் அதிகமாக இருக்கின்றது. அதேசமயம், கடந்த வருட (2019) பிப்ரவரி மாதத்தின் விற்பனையுடன் ஒப்பிட்டு பார்த்தாலும் 2020 பிப்ரவரி அதிக எண்ணிக்கை விற்பனையைப் பெற்றிருக்கின்றது.

டூ வீலர் - கார்களுக்கு டஃப் கொடுக்கும் ஆட்டோரிக்சாக்கள்... எப்போதும் இல்லாத வளர்ச்சி விகிதத்தில் வட மாநிலங்கள்...

கடந்த வருட பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்தமாக 54,474 யூனிட்டுகள் ஆட்டோக்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. இந்தியாவில் தற்போது பஜாஜ் ஆட்டோ, பியாஜியோ, டிவிஎஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் மட்டுமே மூன்று ஆட்டோக்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.

டூ வீலர் - கார்களுக்கு டஃப் கொடுக்கும் ஆட்டோரிக்சாக்கள்... எப்போதும் இல்லாத வளர்ச்சி விகிதத்தில் வட மாநிலங்கள்...

இதில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஆட்டோ ரிக்சாக்களே அதிகம் விற்பனையாகியிருக்கின்றன. அதேசமயம், மற்ற போட்டி நிறுவனங்கள் இந்த ஆண்டு பிப்ரவரியில் கணிசமான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன.

டூ வீலர் - கார்களுக்கு டஃப் கொடுக்கும் ஆட்டோரிக்சாக்கள்... எப்போதும் இல்லாத வளர்ச்சி விகிதத்தில் வட மாநிலங்கள்...

இதுகுறித்த முழுமையான தகவலை FADA எனப்படும் ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அது, மாநிலம் வாரியான ஆட்டோக்கள் விற்பனை பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் மூலம் எந்தெந்த மாநிலம் வளர்ச்சியை சந்தித்துள்ளது, எந்த மாநிலம் ஆட்டோ ரிக்சா விற்பனையில் முன்னணியில் இருக்கின்றது என்பதுகுறித்த தகவல் தெளிவாகியுள்ளது.

டூ வீலர் - கார்களுக்கு டஃப் கொடுக்கும் ஆட்டோரிக்சாக்கள்... எப்போதும் இல்லாத வளர்ச்சி விகிதத்தில் வட மாநிலங்கள்...

இதில், முதல் மூன்று இடங்களை வட மாநிலங்களே பிடித்திருக்கின்றன. 43.84 சதவீத வளர்ச்சியுடன் உத்தரபிரதேச மாநிலமே முதல் இடத்தில் இருக்கின்றது. இதையடுத்து, 59.85 சதவீத வளர்ச்சியுடன் பிஹார் மாநிலம் இரண்டாம் இடத்தைப் பிடுத்திருக்கின்றது.

டூ வீலர் - கார்களுக்கு டஃப் கொடுக்கும் ஆட்டோரிக்சாக்கள்... எப்போதும் இல்லாத வளர்ச்சி விகிதத்தில் வட மாநிலங்கள்...

இதைத்தொடர்ந்து, 14.35 சதவீத விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்தும் மஹாராஷ்டிரா மாநில அரசு மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

இதேபோன்று மாநிலங்களும் கடந்த காலங்களைக் காட்டிலும் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. அதேசமயம், ஒரு சில மாநிலங்கள் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன.

டூ வீலர் - கார்களுக்கு டஃப் கொடுக்கும் ஆட்டோரிக்சாக்கள்... எப்போதும் இல்லாத வளர்ச்சி விகிதத்தில் வட மாநிலங்கள்...

அந்தவகையில், தமிழகம் 6.46 சதவீத வளர்ச்சியைப் பெற்று கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக 6வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், கர்நாடகாவோ 17.57 சதவீதம் விற்பனை சரிவைக் கண்ட குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக, அதாவது 19.70 சதவீதம் அதிக விற்பனையைப் பெற்று 5வது இடத்தில் நிற்கின்றது. ஆகையால், குஜராத் மாநிலம் நான்காவது இடத்தில் இருக்கின்றது.

டூ வீலர் - கார்களுக்கு டஃப் கொடுக்கும் ஆட்டோரிக்சாக்கள்... எப்போதும் இல்லாத வளர்ச்சி விகிதத்தில் வட மாநிலங்கள்...

இதில், அதிகபட்ச விற்பனை வீழ்ச்சியை தமன் மற்றும் தியு பெற்றிருக்கின்றது. அதாவது, -83.33 சதவீத விற்பனை வீழ்ச்சியை இது சந்தித்துள்ளது. ஆகையால், இந்த பகுதிகளில் ஆட்டோ ரிக்சா விற்பனை மிகவும் டல் அடித்த நிலையிலேயே காணப்படுகின்றது.

இதேபோன்று, 32 சதவீத விற்பனை வளர்ச்சியைப் அருணாச்சல பிரதேசம் பெற்றிருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக 27 சதவீத விற்பனை வளர்ச்சியை நமது அண்டை மாநிலமான புதுச்சேரி யூனியன் பிரதேசம் பெற்றிருக்கின்றது.

டூ வீலர் - கார்களுக்கு டஃப் கொடுக்கும் ஆட்டோரிக்சாக்கள்... எப்போதும் இல்லாத வளர்ச்சி விகிதத்தில் வட மாநிலங்கள்...

இந்த ஒட்டுமொத்த பட்டியலிலேயே அதிகபட்ச விற்பனை வளர்ச்சியைப் பெற்ற மாநிலமாக திரிபுரா உள்ளது. இந்த மாநிலம் 2019 பிப்ரவரியைக் காட்டிலும் 2020 பிப்ரவரியில் உச்சபட்சமாக 501.35 சதவீதம் விற்பனை வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதாவது, நடப்பாண்டு பிப்ரவரியில் ஒட்டுமொத்தமாக 890 யூனிட் ஆட்டோக்களை விற்பனைச் செய்து இந்த வளர்ச்சியை அது பெற்றுள்ளது.

டூ வீலர் - கார்களுக்கு டஃப் கொடுக்கும் ஆட்டோரிக்சாக்கள்... எப்போதும் இல்லாத வளர்ச்சி விகிதத்தில் வட மாநிலங்கள்...

இதற்கு அடுத்தபடியாக 229 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்று 22வது இடத்தில் இருக்கின்றது. ஹிமாச்சல பிரதேசம். இங்கு ஒட்டுமொத்தமாக 102 யூனிட் ஆட்டோக்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனையாகியிருக்கின்றன.

இதற்கடுத்து 100 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்று, அதாவது கடந்த ஆண்டு பிப்வரியைக் காட்டிலும் 625 யூனிட்டுகளை அதிகமாக விற்று பஞ்சாப் மாநிலம் 15 இடத்தில் உள்ளது. இவ்வாறு, ஒவ்வொரு மாநிலமும் நடப்பாண்டில் ஆட்டோ விற்பனையில் புதிய இலக்கை எட்டியிருக்கின்றன.

டூ வீலர் - கார்களுக்கு டஃப் கொடுக்கும் ஆட்டோரிக்சாக்கள்... எப்போதும் இல்லாத வளர்ச்சி விகிதத்தில் வட மாநிலங்கள்...

இதில் உத்தரபிரதேசம் முன்பு கூறியதைப் போன்று 10,079 யூனிட் ஆட்டோக்களை விற்பனைச் செய்து முதல் இடத்தில் இருக்கின்றது. இங்கு ஏற்கனவே ஆட்டோவை இயக்கி வந்த மற்றும் புதிதாக ஆட்டோ தொழிலில் ஈடுபட்டவர்களினால் இந்த புதிய எண்ணிக்கை ஏற்பட்டுள்ளது.

டூ வீலர் - கார்களுக்கு டஃப் கொடுக்கும் ஆட்டோரிக்சாக்கள்... எப்போதும் இல்லாத வளர்ச்சி விகிதத்தில் வட மாநிலங்கள்...

இதுகுறித்த முழுமையான பட்டியல் இதோ...

எண் மாநிலங்கள் பிப்ரவரி 20 பிப்ரவரி 19 வளர்ச்சி (%)
1 உத்தரபிரதேசம் 10,079 7,007 43.84
2 பீகார் 8,135 5,089 59.85
3 மகாராஷ்டிரா 7,324 8,551 -14.35
4 குஜராத் 5,452 6,614 -17.57
5 கர்நாடகா 4,764 3,980 19.70
6 தமிழ்நாடு 4,350 4,086 -6.46
7 ஜார்கண்ட் 3,140 1,204 160.80
8 மேற்கு வங்கம் 3,086 2,818 9.51
9 அசாம் 2,812 1,828 53.83
10 ஹரியானா 2,643 1,926 37.23
11 கேரளா 2,605 2,733 -4.68
12 ராஜஸ்தான் 2,353 1,700 38.41
13 டெல்லி 2,351 2,337 0.60
14 ஒடிசா 1,879 1,724 8.99
15 பஞ்சாப் 1,249 624 100.16
16 திரிபுரா 890 148 501.35
17 உத்தரகண்ட் 735 640 14.84
18 சத்தீஸ்கர் 690 677 1.92
19 ஜே & கே 656 396 65.66
20 மணிப்பூர் 130 81 60.49
21 நாகாலாந்து 119 74 60.81
22 இமாச்சலம் 102 31 229.03
23 மேகாலயா 88 60 46.67
24 சண்டிகர் 40 27 48.15
25 மிசோரம் 27 21 28.57
26 அருணாச்சல பிரதேசம் 25 37 -32.43
27 புதுச்சேரி 13 18 -27.78
28 கோவா 9 7 28.57
29 டி & டி 6 36 -83.33
ஒட்டுமொத்த விற்பனை 65,752 54,474 20.70
Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
State Wise Feb 2020 Auto Sales Report. Read In Tamil.
Story first published: Friday, March 20, 2020, 16:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X