மூடப்பட்டுள்ள ஷோரூம்கள்.. ரூ.8 கோடி மதிப்பிலான கார்களை திருடி கைவரிசையை காட்டியுள்ள இளைஞர்கள்...

ஊரடங்கினால் மூடப்பட்டுள்ள டீலர்ஷிப்களில் இருந்து கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட கார்கள் திருடுபோகியுள்ள சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மூடப்பட்டுள்ள ஷோரூம்கள்.. ரூ.8 கோடி மதிப்பிலான கார்களை திருடி கைவரிசையை காட்டியுள்ள இளைஞர்கள்...

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் வேகமாக பரவி பல உயிர்களை காவு வாங்கியுள்ளது. மேலும் இந்த வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.

மூடப்பட்டுள்ள ஷோரூம்கள்.. ரூ.8 கோடி மதிப்பிலான கார்களை திருடி கைவரிசையை காட்டியுள்ள இளைஞர்கள்...

இந்தியாவில் கொரோனாவினால் இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,152 ஆக உள்ளது. இதனால் நாடு முழுக்க ஊரடங்கு கடந்த மார்ச் 24ஆம் தேதியில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மூடப்பட்டுள்ள ஷோரூம்கள்.. ரூ.8 கோடி மதிப்பிலான கார்களை திருடி கைவரிசையை காட்டியுள்ள இளைஞர்கள்...

இருப்பினும் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கட்டுக்குள் வராததால் நாளை (மே 3ஆம் தேதி) முடிவடைய இருந்த ஊரடங்கு கூடுதலாக இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த நிலை என்றால், உலகின் மற்ற நாடுகளில் இந்த வைரஸ் தலை விரித்தாடுகிறது.

மூடப்பட்டுள்ள ஷோரூம்கள்.. ரூ.8 கோடி மதிப்பிலான கார்களை திருடி கைவரிசையை காட்டியுள்ள இளைஞர்கள்...

குறிப்பாக அமெரிக்காவில் இந்த வைரஸினால் பலியானவர்களின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதனால் அங்கு பொருளாதாரம் மிகவும் சரிவடைந்து வரும் நிலையில் பொதுமக்களும் மிகவும் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் செயல்பட்டு வருகின்றனர்.

மூடப்பட்டுள்ள ஷோரூம்கள்.. ரூ.8 கோடி மதிப்பிலான கார்களை திருடி கைவரிசையை காட்டியுள்ள இளைஞர்கள்...

இதற்கிடையில் அந்நாட்டின் வடக்கு கரோலினா மாகாணத்தில் சில டீலர்ஷிப்களில் இருந்து கிட்டத்தட்ட 50 கார்கள் களவு போகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் சில மாகாணங்களில் முழு ஊரடங்கு இல்லாவிடினும் அத்தியாவசிய கடைகளை தவிர்த்து பெரும்பான்மையான ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் மற்றும் கார்களை விற்பனை செய்யும் மையங்களான டீலர்ஷிப்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன.

மூடப்பட்டுள்ள ஷோரூம்கள்.. ரூ.8 கோடி மதிப்பிலான கார்களை திருடி கைவரிசையை காட்டியுள்ள இளைஞர்கள்...

இதனை பயன்படுத்தி கொண்டுள்ள சமூக விரோதிகள் அத்தகைய பகுதிகளில் தங்களது கை வரிசைகளை காட்டி வருகின்றனர். இதுகுறித்த வடக்கு கரோலினா மாகாண போலீஸார் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த மார்ச் 17ஆம் தேதியில் இருந்து மட்டும் இதுவரை 46 கார்கள் திருடு போகியுள்ளன.

மூடப்பட்டுள்ள ஷோரூம்கள்.. ரூ.8 கோடி மதிப்பிலான கார்களை திருடி கைவரிசையை காட்டியுள்ள இளைஞர்கள்...

இதன் மொத்த மதிப்பு சுமார் 1.1 மில்லியன் டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் 8 கோடியே 34 லட்சத்து 14 ஆயிரத்து நூறு ரூபாய். கார்கள் களவாடப்பட்டுள்ள டீலர்ஷிப்களில் ஆடி, செவ்ரோலெட், ஃபோர்டு, ஹோண்டா, லெக்ஸஸ், சுபாரு, டொயோட்டா மற்றும் வால்வோ உள்ளிட்ட நிறுவனங்களின் 13 டீலர்ஷிப்கள் அடங்கும்.

மூடப்பட்டுள்ள ஷோரூம்கள்.. ரூ.8 கோடி மதிப்பிலான கார்களை திருடி கைவரிசையை காட்டியுள்ள இளைஞர்கள்...

மேலும் போலீஸார் கூறுகையில், இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளவர்கள் வழக்கமான கார் திருடர்கள் கிடையாது. மாறாக பெற்றோர்களால் கார்களை ஓட்ட அனுமதிக்கப்படாத சிறுவர்களும் இளைஞர்களும் தான் என்கின்றனர். இவர்களில் இதுவரை 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மூடப்பட்டுள்ள ஷோரூம்கள்.. ரூ.8 கோடி மதிப்பிலான கார்களை திருடி கைவரிசையை காட்டியுள்ள இளைஞர்கள்...

ஆனால் இவர்களில் பெரும்பாலானோர்களை கைது செய்ய முடியாத நிலை போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இவர்களில் அதிக வயது உடையவர்கள் என்று பார்த்தாலே 16 வயது நிரம்பியவர்களாக தான் உள்ளனர். இதில் மேலும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இந்த கார் திருட்டு சம்பவங்களில் வெறும் 9 வயது நிரம்பிய சிறுவர் ஒருவரும் ஈடுப்பட்டுள்ளார்.

மூடப்பட்டுள்ள ஷோரூம்கள்.. ரூ.8 கோடி மதிப்பிலான கார்களை திருடி கைவரிசையை காட்டியுள்ள இளைஞர்கள்...

திருடப்பட்ட கார்களில் இதுவரை 40 கார்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்டதற்காக 19 வயது நிரம்பிய ஒருவரை மட்டுமே போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் உள்ள ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த திருடப்பட்ட கார்களால் எந்த விபத்தும் இந்நாள் வரை அங்கு பதிவாகவில்லை.

மூடப்பட்டுள்ள ஷோரூம்கள்.. ரூ.8 கோடி மதிப்பிலான கார்களை திருடி கைவரிசையை காட்டியுள்ள இளைஞர்கள்...

இதிலிருந்து அங்கு சிறுவர்கள் கூட கார் ட்ரைவிங்கில் பல வருட அனுபவத்தை கொண்டிருப்பதை அறிய முடிகிறது. மேலும் உள்ள கார் திருடர்களை கண்டறிய துப்பறியும் நபர்களின் உதவியை நாடியுள்ள வடக்கு கரோலினா போலீஸார், இதுவரை இந்த கார் திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களை தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் சிறைக்கு அனுப்ப முடியாததால் எலக்ட்ரானிக் மூலமாக தொடர்ந்து கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும் டீலர்ஷிப் நிர்வாகிகளும் ஷோரூம்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களை அதிநவீன தொழிற்நுட்பங்களால் பாதுகாக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பிரச்சனையை எப்படியெல்லாம் உபயோகப்படுத்தி கொள்கிறார்கள் என்று பாருங்களேன்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kids Steal 46 Cars Worth Over $1 Million
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X