காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு உச்சகட்ட வரவேற்பு... அதிகம் விற்பனையாகும் தயாரிப்பு எதுன்னு தெரியுமா?

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு உச்சகட்ட வரவேற்பு... அதிகம் விற்பனையாகும் தயாரிப்பு எதுன்னு தெரியுமா?

இந்தியாவில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. எனவே சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து கொண்டே செல்வதால், அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு, இந்த செக்மெண்ட்டில் புதிய கார்களை அறிமுகம் செய்து கொண்டே வருகின்றன.

காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு உச்சகட்ட வரவேற்பு... அதிகம் விற்பனையாகும் தயாரிப்பு எதுன்னு தெரியுமா?

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 29,113 சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை, 41,277ஆக உயர்ந்துள்ளது. இது 42 சதவீத வளர்ச்சியாகும். எனவேதான் இந்த செக்மெண்ட்டில் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய கார் நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு உச்சகட்ட வரவேற்பு... அதிகம் விற்பனையாகும் தயாரிப்பு எதுன்னு தெரியுமா?

நடப்பாண்டு செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், கியா சொனெட் முதலிடத்தை பிடித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கியா சொனெட் கார், கடந்த செப்டம்பர் 18ம் தேதிதான், விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது.

காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு உச்சகட்ட வரவேற்பு... அதிகம் விற்பனையாகும் தயாரிப்பு எதுன்னு தெரியுமா?

விற்பனைக்கு வந்த முதல் மாதத்திலேயே, தனது செக்மெண்ட்டிலேயே அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை கியா சொனெட் பெற்றுள்ளது. அதுவும் பாதி மாதத்தை கடந்த பின்னர்தான் கியா சொனெட் விற்பனைக்கு வந்தது. நடப்பு அக்டோபர் மாதம்தான், விற்பனையில் கியா சொனெட் காரின் முதல் முழு மாதமாக இருக்கும்.

காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு உச்சகட்ட வரவேற்பு... அதிகம் விற்பனையாகும் தயாரிப்பு எதுன்னு தெரியுமா?

கியா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம், 9,266 சொனெட் கார்களை விற்பனை செய்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா உள்ளது. மாருதி நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம், 9,153 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த இரண்டு கார்களுக்கும் இடையேயான வித்தியாசம் மிகவும் குறைவாக இருப்பது கவனிக்கத்தக்கது.

காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு உச்சகட்ட வரவேற்பு... அதிகம் விற்பனையாகும் தயாரிப்பு எதுன்னு தெரியுமா?

மூன்றாவது இடத்தை ஹூண்டாய் நிறுவனத்தின் வெனியூ பிடித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 8,469 வெனியூ கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. நான்காவது இடத்தை இந்தியாவின் பாதுகாப்பான கார்களில் ஒன்றான டாடா நெக்ஸான் பெற்றுள்ளது. டாடா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில், 6,007 நெக்ஸான் கார்களை விற்பனை செய்துள்ளது.

காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு உச்சகட்ட வரவேற்பு... அதிகம் விற்பனையாகும் தயாரிப்பு எதுன்னு தெரியுமா?

ஐந்தாவது இடத்தை மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 பெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 3,700 மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய 2 கார்களும், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு உச்சகட்ட வரவேற்பு... அதிகம் விற்பனையாகும் தயாரிப்பு எதுன்னு தெரியுமா?

ஆறாவது இடத்தை ஃபோர்டு நிறுவனத்தின் ஈக்கோஸ்போர்ட் பெற்றுள்ளது. ஃபோர்டு நிறுவனம் நடப்பாண்டு செப்டம்பர் மாதம், 3,558 ஈக்கோஸ்போர்ட் கார்களை விற்பனை செய்துள்ளது. 7வது மற்றும் கடைசி இடத்தை ஹோண்டா டபிள்யூஆர்-வி பிடித்துள்ளது. ஹோண்டா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம், 1,124 டபிள்யூஆர்-வி கார்களை விற்பனை செய்துள்ளது.

Most Read Articles
English summary
Sub-4m Compact SUV September 2020 Sales Analysis. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X