அடை மழையில் மகளுடன் அவசர அவசரமாக புறப்பட்ட சுரேஷ் ரெய்னா... ஏன் தெரிஞ்சா திட்டிபுடுவீங்க!
சுரேஷ் ரெய்னாவும் அவரது மகளும் விலையுயர்ந்த காரில் சென்றுக் கொண்டிருப்பது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்பவர் சுரேஷ் ரெய்னா. இடது கை பழக்கமுடைய விளையாட்டு வீரரான இவர் உலகின் மிகச் சிறந்த ஃபீல்டர்களில் ஒருவர் என்ற பட்டத்தை சூடிக் கொண்டிருக்கின்றார். இது மட்டுமின்றி, அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போனவர் மற்றும் மிகச் சிறந்த ஆஃப்-ஸ்பின் பந்து வீச்சாளர் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டவராக ரெய்னா இருந்து வருகின்றார்.

மேற்கூறியவாறே உலகமும் சுரேஷ் ரெய்னாவை தற்போது வரை அறிந்திருக்கின்றது. ஆனால், இவர் குடும்பம் என வந்துவிட்டால் சிறு குழந்தையாக மாறிவிடுவார் என தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. இதனால், சுரேஷ் ரெய்னா மீதிருந்த பார்வையே மக்கள் மத்தியில் மாறியிருக்கின்றது.

தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பருவ மழை பொழியத் தொடங்கியிருக்கின்றது. இதனால் நாட்டின் ஒரு சில மாநிலங்கள் வெள்ளக் காடாக மாறியிருக்கின்றன. இந்த நிலையில்தான், அண்மையில் பொழிந்த மழையில் சுரேஷ் ரெய்னா மற்றும் அவரது மகள் ஜாலி ரைடு சென்றிருக்கின்றனர். இதற்காக சுரேஷ் ரெய்னா அவரிடம் இருக்கும் விலையுயர்ந்த கார்களில் ஒன்றான மினி கன்ட்ரிமேன் காரைப் பயன்படுத்தியிருக்கின்றார்.

சுரேஷ் ரெய்னா கார்கள் மீதும் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருக்கின்றார். இதற்கு அவரிடத்தில் இருக்கும் விலையுயர்ந்த அதிக திறன் மிக்க கார்களே சான்று. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் ரெய்னாவின் கார் நிறுத்துமிடத்தில் போர்ஷே பாக்ஸ்டர் போன்ற பல்வேறு விலையுயர்ந்த கார்கள் அணி வகுத்து நிற்கின்றன. இந்த நிலையில்தான் மழையில் ஜாலி ரைடு செய்வதற்காக மினி கன்ட்ரிமேன் காரை அவர் பயன்படுத்தியிருக்கின்றார்.

ரெய்னா தற்போது தலைநகர் டெல்லியில் வசித்து வருகின்றார். இங்கு கடந்த சில தினங்களாக பருவ மழைப் பொழிந்துக் கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் சுட்டெரித்து வந்த வெயிலில் இருந்து மக்களைக் குளிர்விக்கும் விதமாக பருவை மழைப் பொழியத் தொடங்கியுள்ளது. இதில் ஒரு சில பெரியவர்கள்கூட தங்களை குழந்தையாக பாவித்து மழையில் நினைந்து வருகின்றனர்.

இந்த நிலையிலே ரெய்னா தனது மகளை மகிழ்விக்கும் விதமாக மழையில் ஜாலி ரைடு சென்றிருக்கின்றார். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வீடியோவில், மிகவும் ஜாலியான மூடில் ரெய்னா காரை ஓட்டிக் கொண்டிருக்க, முன்னிருக்கையில் அவரது மகள் அமர்ந்து மழையை ரசித்துக் கொண்டிருக்கின்றார்.

ஆனால், அவர் சீட் அணியவில்லை. இதுவே, பொதுமக்கள் மத்தியில் தற்போது எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. காரில் செல்லும்போது அனைவரும் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என கூறப்படுகின்ற வேலையில் ரெய்னா, அவரது மகளுக்கு சீட் பெல்ட் அணியாமல் முன்னிருக்கையில் அமர வைத்திருக்கின்றார்.

ஒரு சில ஆய்வுகள் 13 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் முன்னிருக்கையில் அமரக் கூடாது என அறிவுறுத்துகின்றது. எதிர்பாராத விபத்துகளில் முன்னிருக்கையில் அமரும் சிறுவர்களுக்கு பேராபத்து ஏற்படுவதைக் கருத்தில் கொண்டே ஆய்வுகள் இதனை வலியுறுத்துகின்றன.

ஆனால், பெரும்பாலானோருக்கு இது தெரிவதில்லை. அறியாமையால் சிறுவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை முன்னிருக்கையில் அமர அனுமதிக்கின்றனர். இம்மாதிரியான நேரத்தில் சீட் பெல்ட் போன்ற பாதுகாப்பு கவசங்களை அணிவதன் மூலம் பேராபத்தில் இருந்து தப்பிக்க முடியும். ஆனால், சுரேஷ் ரெய்னா அதையும் செய்ய தவறிவிட்டார்.

இதுமட்டுமின்றி, தற்போது இந்தியாவில் பேயலையை வீசிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசிடம் இருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக அவர்கள் மாஸ்க்கும் அணியவில்லை. அண்மைக் காலங்களாக போலீஸார் மாஸ்க் அணியாத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆகையால், இந்த வீடியோவையே ஆதாரமாக வைத்து போலீஸாரால், ரெய்னா மீது அபராதம் போன்ற அதிரடி நடவடிக்ககளை எடுக்க முடியும்.

ஆனால் காவல்துறை ரெய்னா மீது என்ன மாதிரியான நடவடிக்கையை எடுப்பார்கள் என்பது தற்போது வரை தெரியவில்லை. ஒரு வேலை ரெய்னா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமானால், சீட் பெல்ட் அணியாதது, குழந்தையை முன்னிருக்கையில் அமர வைத்தது, மாஸ்க் அணியாதது, பொது முடக்கத்தை மீறியது என பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிய முடியும்.

இதில், எந்த மாதிரியான நடவடிக்கையை காவல்துறை எடுக்க இருக்கின்றது என்பது தெரியவில்லை. அதேசமயம், இவர்கள் காரில் செல்லும்போது அதிக ஒலியில் இசையைக் கேட்டு மகிழ்ந்ததும் போக்குவரத்து விதிகளின்கீழ் குற்றமாகும். எனவே, ரெய்னா பல்வேறு விதிகளை மீறியிருக்கின்றார் என்பது அவர் வெளியிட்ட வீடியோவின் வாயிலாகவே தெரியவந்துள்ளது.

ரெய்னா பயன்படுத்திய மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் ரூ. 38.5 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் பிரீமியம் ரக சொகசு காராகும். இதில், 2.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்படுகின்றது. இது, அதிகபட்சமாக 191 பிஎஸ் பவரையும், 280 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது.


Click it and Unblock the Notifications








