Just In
- 43 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- News
நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கடைசியாக சுஷாந்தின் நினைவாக இருப்பது இவை மட்டுமே... மீண்டும் கலங்க வைத்த சுஷாந்த் தந்தை!!
சுஷாந்த் மிகவும் விரும்பி பயன்படுத்தி வந்த இரு விலை மதிப்பற்ற பொருள் அவரின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரரான எம்எஸ் தோனியன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சுஷாந்த் சிங். இந்த ஒற்றை படத்தின் மூலமே ஒட்டுமொத்த இந்தியர்களின் மனதையும் வென்றிருந்தார். இதேபோன்று ஒற்றைச் செயலால் ஒட்டுமொத்த நாட்டையும் கலக்கத்திலும் ஆழ்த்திவிட்டு அவர் சென்றிருக்கின்றார்.

34 வயதே ஆன இவர் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அவரது மும்பை, பந்திரா இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டார். இவரின் இழப்பை ஏற்க முடியாத சுஷாந்தின் தந்தை மற்றும் உறவினர்கள், தனது மகன் இறக்கவில்லை என்றும், அவரை யாரோ கொலை செய்துவிட்டார்கள் என்றும் சொந்த மாநிலமான பீஹார் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.

இதனடிப்படையில் வழக்குப்பதிந்த பீஹார் மாநிலம், பாட்னா போலீஸார் தங்களது விசாரணையை மிக தீவரமாக செய்து வருகின்றனர். அதேசமயம், மறுபக்கம் மஹாராஷ்டிரா மாநில அரசும் தங்களின் பங்காக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இரு மாநிலங்களிடையே மோதல் போக்கு நிலவியது. இந்நிலையில், சுஷாந்த் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி மிக சமீபத்தில் உச்சநீதமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சுஷாந்த் சிங் பயன்படுத்தி வந்த மிக விலையுயர்ந்த கார்கள் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெகுநீண்ட நாட்கள் கழித்து ரேஞ்ஜ் ரோவர் இவோக் மற்றும் மசராட்டி குவாட்ரோபோர்ட் ஆகிய இரு கார்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

இவ்விரு கார்களுடன் சேர்ந்தவாறு சுஷாந்த எடுத்த புகைப்படங்கள் தற்போதும் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இவையே அவருக்கும் மிகவும் பிடித்தமான கார்கள் என்கின்றனர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள். எனவேதான் இக்கார்களைப் பெற்றவுடன் மீண்டும் சுஷாந்தின் இழப்பு நினைவில் ஆழந்திருக்கின்றது அவருடைய நெறுங்கிய வட்டாரங்கள்.

சுஷாந்த் பயன்படுத்தி வந்த இந்த இரு கார்களும் ஆடம்பர வாகனங்கள் ஆகும். இதில், ரேஞ்ஜ் ரோவர் இவோக் காரின் மதிப்பு மட்டுமே ரூ. 54.94 லட்சம் ஆகும். ஆனால், இந்த காரைக் காட்டிலும் பல மடங்கு விலையுயர்ந்ததே மசராட்டி குவாட்ரபோர்டே. இக்கார், இந்தியாவில் சுமார் 1.74 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு இக்கார்களின் விலையை நாம் மதிப்பிட்டாலும் அவரின் குடும்பத்தாருக்கு சுஷாந்தின் கடைசி நினைவுகளாக அமைந்திருக்கின்றன. எனவே, தற்போது ரூபாயில் மதிப்பிடும் இந்த கார்கள் சுஷாந்தின் குடும்பத்தினருக்கு மதிப்பற்ற பொருளாக மாறியிருக்கின்றது.

சுஷாந்த் திரைத்துறையில் வைத்திருந்ததைப் போன்றே வாகனங்கள் மீதும் அதிகம் ஆர்வத்தைக் கொண்டிருந்தார். எனவேதான் அவரிடத்தில் பல விலையுயர்ந்த கார் மற்றும் பைக்குகள் பயன்பாட்டில் இருந்தன. அதில் மிக விலையுயர்ந்த மற்றும் அதிக சொகுசு வசதிகள் கொண்ட காராக தற்போது அவரது தந்தையிடம் வழங்கப்பட்டிருக்கும் கார்கள் இருக்கின்றன.

ரேஞ்ஜ் ரோவர் இவோக் கார் நான்கு வீல் இயங்கும் திறனைக் கொண்ட வாகனம் ஆகும். இந்த காரில் அனைத்துவிதமான சாலைகளையும் சமாளிக்கக்கூடிய திறன் வழங்கப்பட்டிருக்கின்றது. அதாவது, இக்காரில் இடம்பெற்றிருக்கும் 2.0 லிட்டர் எஞ்ஜின் அதிகபட்சமாக 247 குதிரைதிறன் மற்றும் 365 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த திறனே அனைத்து சாலைகளையும் எளிதில் கடக்க உதவுகின்றது.

இதேபோன்று அதிக திறன் மிக்க காராக மசராட்டி குவாட்ரோபோர்டே இருக்கின்றது. இதில், இடம்பெற்றிருக்கும் 3.0 லிட்டர் வி6 எஞ்ஜின் அதிகபட்சமாக 275 குதிரைதிறனை வெளிப்படுத்தும். மேலும், 600 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இது 6.4 செகண்டுகளிலேயே மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டதாகும். இதுமட்டுமின்றி, உச்சபட்சமாக இக்கார் மணிக்கு 250 கிமீ செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த காரையே சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது தினந்தோறும் பயணங்களுக்கு பயன்படுத்தி வந்திருக்கின்றார். கடைசியாக இவ்வுலகை விட்டு பிரிந்த நாளுக்கு முன்னர் வரை இக்கார்கள் அவரின் கை வசம் இருந்திருக்கின்றன.