பிரபலமான சுசுகி ஜிம்னி காருக்கு வயது 50... இந்த காரில் அப்படி என்ன தான் உள்ளது..?

சுசுகி ஜிம்னி மாடலின் நான்காம் தலைமுறை கார் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள நிலையில் இந்த மினி எஸ்யூவி கார் 50 ஆண்டு காலத்தை சந்தையில் நிறைவு செய்துள்ளது. ஜிம்னி மாடலின் சிறப்பம்சங்களையும், அதன் தயாரிப்பு முறைகளையும் இந்த செய்தியில் காண்போம்.

பிரபலமான சுசுகி ஜிம்னி காருக்கு வயது 50... இந்த காரில் அப்படி என்ன தான் உள்ளது..?

ஜிம்னி மாடலின் முதல் தலைமுறை கார் கடந்த 1970ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆஃப்-ரோடிற்கு ஏற்ற வகையிலான தோற்றத்தை கொண்டுள்ள இந்த காரின் 2.85 பிரதிகள் உலகம் முழுவதும் உள்ள 194 நகரங்களில் தற்போதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த காரில் சுசுகி நிறுவனம் பிரத்யேகமாக எந்த தொழிற்நுட்ப வசதியையும், டிசைன் அமைப்பையும் வழங்காவிடினும் இந்த கார் இத்தனை வருடங்கள் சந்தையில் நிலைத்து நின்றிருப்பது நிச்சயம் பாராட்டத்தக்கது. ஆனால் லேடார்-ஃப்ரேம் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வரும் இதன் நான்காம் தலைமுறை காரில் மிகவும் கவனிக்கத்தக்க வகையில் அதிநவீன சஸ்பென்ஷனை இந்த நிறுவனம் பொருத்தியுள்ளது.

பிரபலமான சுசுகி ஜிம்னி காருக்கு வயது 50... இந்த காரில் அப்படி என்ன தான் உள்ளது..?

இருப்பினும் மறுசுழற்சி செய்யும் விதத்திலான பந்து இயந்திர நுட்பம் மற்றும் பகுதி நேர 4-சக்கர ட்ரைவ் சிஸ்டம் உள்ளிட்டவை தற்போதும் இந்த காரில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தோற்ற அளவில் பார்த்தால் முதல் தலைமுறை சுசுகி ஜிம்னி மாடல் கிட்டத்தட்ட முதல் தலைமுறை டொயோட்டா லேண்ட் க்ரூஸர் உடன் ஒத்து காணப்பட்டது.

பிரபலமான சுசுகி ஜிம்னி காருக்கு வயது 50... இந்த காரில் அப்படி என்ன தான் உள்ளது..?

ஆனால் தற்போது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ்-க்ளாஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு இணையாக மிகவும் ப்ரீமியமான தோற்றத்தில் உள்ளது. அதுவே சுசுகி ஜிம்னி தற்போதும் அதே வெற்றிக்கரமான எளிமையான டிசைனில், முரட்டுத்தனமான மெக்கானிக்கல் பாகங்களுடன் ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கு உகந்த வகையில் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது.

பிரபலமான சுசுகி ஜிம்னி காருக்கு வயது 50... இந்த காரில் அப்படி என்ன தான் உள்ளது..?

ஜிம்னி மாடலில் தற்சமயம் சுசுகி நிறுவனத்தின் லேட்டஸ்ட் கே-சீரிஸ் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் ஆற்றல் மற்றும் எரிபொருள் திறன் என இரண்டையும் அதிகப்படியாக வழங்கவல்லது. சஸ்பென்ஷன் அமைப்பாக ஜிம்னி மாடலின் மூன்றாம் தலைமுறை காரில் வழக்கத்திற்கு மாற்றாக சுருள்-ஸ்ப்ரிங் யூனிட் பொருத்தப்பட்டு உள்ளது.

பிரபலமான சுசுகி ஜிம்னி காருக்கு வயது 50... இந்த காரில் அப்படி என்ன தான் உள்ளது..?

அதேபோல் வாக்கம் லாக்கிங் ஹப்ஸிற்கு பதிலாக எலக்ட்ரானிக் 4-சக்கர ட்ரைவ் சிஸ்டத்தை இதன் மூன்றாம் தலைமுறை கார் பெற்றிருந்தது. மாருதி நிறுவனத்துடன் சுசுகி நிறுவனம் ஏற்படுத்தி கொண்ட கூட்டணிக்கு பிறகு ஜிம்னி மாடலின் இரண்டாம் தலைமுறை கார் 1980ல் இந்தியாவில் அறிமுகமானது.

பிரபலமான சுசுகி ஜிம்னி காருக்கு வயது 50... இந்த காரில் அப்படி என்ன தான் உள்ளது..?

இந்த ஜிம்னி காரின் தோற்றத்தில், பிறகு மாருதியின் ஜிப்ஸி மாடல் உருவாக்கப்பட்டது. இதனால் ஜிப்ஸி மாடல், ஜிம்னி இரண்டாம் தலைமுறை காரின் நீண்ட-வீல்பேஸ் வெர்சனாக சந்தையில் பார்க்கப்பட்டது. அதன்பின் அடுத்த 30 வருடங்களில் மாருதி ஜிப்ஸி மாடலில் ஏகப்பட்ட அப்டேட்கள் கொண்டுவரப்பட்டாலும், மற்ற எஸ்யூவி மாடல்களை போல் பாதுகாப்பு மற்றும் மாசு உமிழ்வு சோதனை ஏற்றதாக இல்லாததால் விற்பனை நிறுத்தி கொள்ளப்பட்டது.

பிரபலமான சுசுகி ஜிம்னி காருக்கு வயது 50... இந்த காரில் அப்படி என்ன தான் உள்ளது..?

மீண்டும் சுசுகி ஜிம்னி மாடலுக்கு வருவோம். ஜிம்னியின் புதிய தலைமுறை கார் இந்தியாவில் அடுத்த வருடம் அறிமுகமாகவுள்ளது. 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த புதிய தலைமுறை ஜிம்னி மாடல், மற்ற நாட்டு மாடல்களை காட்டிலும் சிறிது வித்தியாமான வடிவத்தில் இந்தியாவில் வெளியாகவுள்ளது.

இதன் இந்திய வெர்சன் ஐந்து-கதவு லேஅவுட்டில் நெக்ஸா ப்ரீமியம் டீலர்ஷிப்கள் மூலமாக சந்தைப்படுத்தப்படவுள்ளது. மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த கார் சில வெளிநாட்டு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

Most Read Articles
English summary
India-Bound Suzuki Jimny SUV Turns 50 Years Old
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X