ஒட்டுமொத்த மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளிய தமிழகம்..! கொரோனா காலத்தில் இப்படியொரு வளர்ச்சியா..?

கொரோனாவின் இக்கட்டான காலத்திலும் தமிழகம் இந்தியாவின் பிற மாநிலங்களைப் பின்னுக்கு தள்ளியுள்ளது. எதில் என்பதை இந்த பதிவில் காணலாம்.

ஒட்டு மொத்த மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளிய தமிழகம்! கொரோனா காலத்தில் இப்படியொரு வளர்ச்சியா? நம்பவே முடியல!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், அண்மைக் காலங்களாக தமிழகத்தில் மிகக் கடுமையான எண்ணிக்கையில் உயர்ந்துக் கொண்டு வருகின்றது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் வெறும் நூற்றுக்கணக்கில் மட்டுமே உயர்ந்து வந்த தொற்றின் எண்ணிக்கை தற்போது நாள் ஒன்றிற்கு 4 ஆயிரம், ஆறாயிரம் என பல மடங்கு உயர்ந்து வருகின்றது.

ஒட்டு மொத்த மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளிய தமிழகம்! கொரோனா காலத்தில் இப்படியொரு வளர்ச்சியா? நம்பவே முடியல!

இதனால், இந்தியாவில் அதிக வைரஸ் தொற்றுடைய மாநிலங்களின் பட்டியலில் விரைவில் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்துவிடுமோ என்ற அச்சமான சூழ்நிலை நிலவி வருகின்றது. இந்த நிலையில்தான் தமிழகம், நாட்டின் பிற மாநிலங்களை புறம் தள்ளி முதல் இடத்தைப் பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒட்டு மொத்த மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளிய தமிழகம்! கொரோனா காலத்தில் இப்படியொரு வளர்ச்சியா? நம்பவே முடியல!

அதாவது, வைரஸ் பரவல் காரணமாக ஒட்டுமொத்த இந்திய வாகனத்துறையுமே கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வரும்வேலையில் தமிழகத்தில் வணிக ரீதியாக இயங்கும் வாகனங்களின் விற்பனை அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒட்டு மொத்த மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளிய தமிழகம்! கொரோனா காலத்தில் இப்படியொரு வளர்ச்சியா? நம்பவே முடியல!

இந்த கொரோனா வைரஸ் கடந்த காலங்களில் மக்களின் வாழ்க்கையை மட்டுமின்றி நாட்டின் ஒட்டுமொத்ததுறையுமே வீழ்ச்சியடையச் செய்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் வாகனத்துறையை அது கூடுதலாக வீழ்ச்சியடையச் செய்தது குறிப்பிடத்தகுந்தது. இதில் இருந்து விளக்களிக்கும் விதமாக தற்போது தளர்வுகள் அமைந்திருக்கின்றன.

ஒட்டு மொத்த மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளிய தமிழகம்! கொரோனா காலத்தில் இப்படியொரு வளர்ச்சியா? நம்பவே முடியல!

ஆம், நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் தளர்வுகளால் வாகனங்களின் விற்பனை மொட்டுகளைப் போல் மலர தொடங்கியிருக்கின்றது. இதற்கான உதாரணமாக, தமிழகத்தின் சரக்கு மற்றும் வணிக வாகனங்களின் விற்பனை விகிதம் அமைந்திருக்கின்றது. எனவே தமிழகம், கொரோனா பாதிப்பில் மட்டுமின்றி வாகன விற்பனையிலும் சூடிபிடிக்கத் தொடங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

ஒட்டு மொத்த மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளிய தமிழகம்! கொரோனா காலத்தில் இப்படியொரு வளர்ச்சியா? நம்பவே முடியல!

தமிழகம் சரக்கு வாகன விற்பனையில் தற்போது முதல் இடத்தைப் பிடித்திருந்தாலும், அதைக் கடந்த காலங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் மிக மோசமான வீழ்ச்சியாக இருக்கின்றது. ஆம், கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் இதே தமிழகத்தில் மட்டுமே ஒட்டுமொத்தமாக 6,900 யூனிட்டுகள் வணிக ரீதியிலாக இயங்கும் வாகனங்கள் விற்பனைச் செய்யப்பட்டிருந்தன. ஆனால், நடப்பாண்டு ஜூன் மாதத்திலோ 1,391 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன.

ஒட்டு மொத்த மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளிய தமிழகம்! கொரோனா காலத்தில் இப்படியொரு வளர்ச்சியா? நம்பவே முடியல!

இது 79.84 சதவீத வீழ்ச்சியாகும். இருப்பினும், கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்த ஆண்டு விற்பனையில் தமிழகமே உச்சத்தில் இருக்கின்றது.

அதாவது, தமிழகத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை கர்நாடகா பிடித்துள்ளது. சுமார் 1,173 யூனிட்டுகளை விற்பனைச் செய்து இந்த இடத்தை அம்மாநிலம் பிடித்துள்ளது.

ஒட்டு மொத்த மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளிய தமிழகம்! கொரோனா காலத்தில் இப்படியொரு வளர்ச்சியா? நம்பவே முடியல!

இதேபோன்று, மூன்றாம் இடத்தை 1,030 யூனிட்டுகளை விற்பனைச் செய்து குஜராத்தும், இதைத் தொடர்ந்து அதே 1,030 யூனிட்டுகளுடன் நான்காம் இடத்தை உபி-யும் பிடித்திருக்கின்றது. மேலும், 930 யூனிட்டுகளுடன் பிஹார் மாநிலம் பிடித்திருக்கின்றது. இந்த அனைத்து மாநிலங்களும் கடந்த வருடத்தைக் காட்டிலும் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன.

ஒட்டு மொத்த மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளிய தமிழகம்! கொரோனா காலத்தில் இப்படியொரு வளர்ச்சியா? நம்பவே முடியல!

இதில், மஹாராஷ்டிரா மாநிலம்தான் மிகக் கடுமையான விற்பனையைச் சந்தித்துள்ளது. அதாவது கடந்தாண்டு ஜூன் மாதத்தில் வணிக வாகன விற்பனையில் 8,963 யூனிட்டுகளுடன் உச்சத்தில் இருந்த மஹாராஷ்டிரா, தற்போது, 808 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்து 6வது இடத்தைப் பிடித்திருக்கின்றது. இது, 90.99 சதவீத விற்பனை வீழ்ச்சியாகும்.

ஒட்டு மொத்த மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளிய தமிழகம்! கொரோனா காலத்தில் இப்படியொரு வளர்ச்சியா? நம்பவே முடியல!

அதேசமயம், எப்போதுமே வர்த்தக வாகன விற்பனையில் கடைசி இடங்களைப் பிடிக்கும் சண்டிகர் மற்றும் லடாக் தற்போது பூஜ்ஜியம் விற்பனை என்ற இடத்தைப் பிடித்திருக்கின்றது. இவற்றுடன், மணிப்பூரும் இணைந்திருப்பது ஒட்டுமொத்த ஆட்டோத்துறைக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், நமது அண்டை மற்றும் யூனியன் பிரதேசமான புதுவையில் 5 யூனிட்டு சரக்கு வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருக்கின்றன.

ஒட்டு மொத்த மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளிய தமிழகம்! கொரோனா காலத்தில் இப்படியொரு வளர்ச்சியா? நம்பவே முடியல!

இதனால், 25 இடத்தில் புதுவை அமர்ந்துள்ளது. இதுவும் கடந்தாண்டைக் காட்டிலும் 91.80 சதவீத விற்பனை வீழ்ச்சியைப் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த முழு விபரத்தை பட்டியலாக கீழே காணலாம்.

வரிசை மாநிலம் ஜூன்-20 ஜூன்்-19 விகிதம் (%)
1 தமிழ்நாடு 1,391 6,900 -79.84
2 கர்நாடகா 1,173 5,555 -78.88
3 குஜராத் 1,030 4,284 -75.96
4 உபி 1,030 6,993 -85.27
5 பிஹார் 930 2,358 -60.56
6 மஹாராஷ்டிரா 808 8,963 -90.99
7 ராஜஸ்தான் 676 4,036 -83.25
8 ஒடிசா 615 2,383 -74.19
9 அசாம் 599 2,038 -70.61
10 கேரளா 548 2,914 -81.19
11 மேற்கு வங்கம் 498 3,609 -86.20
12 சத்திஷ்கர் 319 1,548 -79.39
13 ஹரியானா 189 3,343 -94.35
14 ஜார்கண்ட் 130 1,261 -89.69
15 பஞ்சாப் 118 1,650 -92.85
16 ஹிமாச்சல் 117 1,068 -89.04
17 மெகாலயா 108 328 -67.07
18 உத்தர்கண்ட் 66 615 -89.27
19 திரிபுரா 51 187 -72.73
20 கோவா 33 87 -62.07
21 மிசோரம் 28 191 -85.34
22 அருணாச்சல பிரதேசம் 26 98 -73.47
23 ஜம்மு மற்றும் காஷ்மீர் 9 1,180 -99.24
24 டெல்லி 5 1,526 -99.67
25 புதுவை 5 61 -91.80
26 டெஹ்ராடூன் 4 148 -97.30
27 சிக்கிம் 2 42 -95.24
28 நாகாலாந்து 1 1,239 -99.92
29 சண்டிகர் 0 74 -100.00
30 மணிப்பூர் 0 220 -100.00
31 லடாக் 0 77 -100.00
ஒட்டு மொத்த மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளிய தமிழகம்! கொரோனா காலத்தில் இப்படியொரு வளர்ச்சியா? நம்பவே முடியல!

கொரோனா பரவலின் ஆரம்ப காலமான, அதாவது, பொதுமுடக்கம் உச்சகட்டத்தில் இருந்த போது நிலவியதைக் காட்டிலும் தற்போதைய வாகனங்களின் விற்பனை வரவேற்கும் வகையில் இருக்கின்றது. கடந்த காலங்களில் வைரஸ் பரவல் காரணமாக முடங்கிக் கிடந்த வாகன விற்பனை தற்போதே சூடிபிடிக்க ஆரம்பித்துள்ளது.

ஒட்டு மொத்த மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளிய தமிழகம்! கொரோனா காலத்தில் இப்படியொரு வளர்ச்சியா? நம்பவே முடியல!

இதன் விளைவாக ஒவ்வொரு மாநிலத்திலும் புதிய வாகனங்களின் பதிவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதிலும், வணிக ரீதியாக இயங்கும் வாகனங்களின் விற்பனை கடந்த மாதங்களைக் காட்டிலும் தற்போது அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக வரவேற்க தக்கதாக இருக்கின்றது.

இதில், இந்தியாவின் ஒட்டுமொத்த மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் கூடுதல் விற்பனைக் கிடைத்திருப்பது இந்திய வாகனத்துறைக்கு மன நிம்மதியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

Most Read Articles

English summary
Tamil Nadu Gets Top Place On Commercial Vehicle Sales In June 2020. Read In Tamil.
Story first published: Saturday, July 25, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X