2020 ஐபிஎல்லின் பார்ட்னராக இணைந்தது டாடா மோட்டார்ஸ்... மைதானங்களில் இந்த கார்தான் இருக்கும்...

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஐபிஎல் 2020 போட்டியின் அதிகாரப்பூர்வ பார்ட்னராக அல்ட்ரோஸ் இணைந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்று (செப்டம்பர் 14) அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 ஐபிஎல்லின் பார்ட்னராக இணைந்தது டாடா மோட்டார்ஸ்... மைதானங்களில் இந்த கார்தான் இருக்கும்...

2020ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸின் தாக்கத்தினால் சிறிது தாமதமாக வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த வருடம் இந்தியாவிற்கு பதிலுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் மொத்தம் 50 நாட்கள் இந்த போட்டி நடைபெறவுள்ளது.

2020 ஐபிஎல்லின் பார்ட்னராக இணைந்தது டாடா மோட்டார்ஸ்... மைதானங்களில் இந்த கார்தான் இருக்கும்...

இதற்காக அந்த நாட்டின் துபாய், அபுதாபி மற்றும் சார்ஜா உள்ளிட்ட கிரிக்கெட் மைதானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த போட்டி தொடருக்காக இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்துடன் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அல்ட்ரோஸ் மூலமாக மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

2020 ஐபிஎல்லின் பார்ட்னராக இணைந்தது டாடா மோட்டார்ஸ்... மைதானங்களில் இந்த கார்தான் இருக்கும்...

கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் முறையே நெக்ஸான் மற்றும் ஹெரியர் கார் மாடல்கள் ஐபிஎல் போட்டியின் அதிகாரப்பூர்வ பார்ட்னராக இருந்தன. இதன்படி மேற்கூறப்பட்ட மூன்று மைதானங்களிலும் அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் கார் காட்சிக்காக வைக்கப்பட்டவுள்ளது.

2020 ஐபிஎல்லின் பார்ட்னராக இணைந்தது டாடா மோட்டார்ஸ்... மைதானங்களில் இந்த கார்தான் இருக்கும்...

அதுமட்டுமின்றி இந்த வருட ஐபிஎல் போட்டியில் இறுதியில் சிறந்த ஸ்ட்ரைக்-ரேட் வைத்திருக்கும் வீரர் அல்ட்ரோஸ் கார் ஒன்றை வீட்டிற்கு ஓட்டி செல்லவுள்ளார். அதேபோல் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த ஸ்ட்ரைக்ரேட்டை பெறும் வீரருக்கு அல்ட்ரோஸ் சூப்பர் ஸ்ட்ரைக்கர் கோப்பையுடன் ரூ.1 லட்ச காசோலை வழங்கப்படவுள்ளது.

2020 ஐபிஎல்லின் பார்ட்னராக இணைந்தது டாடா மோட்டார்ஸ்... மைதானங்களில் இந்த கார்தான் இருக்கும்...

வீரர்களுடன் கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்வதற்காக அல்ட்ரோஸ் சூப்பர் ஸ்ட்ரைகர் என்ற மொபைல் விளையாட்டை கொண்டுவந்துள்ள டாடா நிறுவனம் இதன் மூலமாக ரசிகர்கள் அல்ட்ரோஸ் சூப்பர் ஸ்டரைக்கர் என்ற பட்டத்தை (ரூ.1 லட்சம்) வெல்லலாம் எனவும் தெரிவித்துள்ளது.

2020 ஐபிஎல்லின் பார்ட்னராக இணைந்தது டாடா மோட்டார்ஸ்... மைதானங்களில் இந்த கார்தான் இருக்கும்...

அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் காரை மைதானத்தில் காட்சிக்காக வைப்பது மட்டுமில்லாமல், டீலர்ஷிப் ஷோரூம்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் ஐபிஎல் போட்டி கொண்டாட்டத்தை மக்களிடம் டாடா நிறுவனம் பரப்ப திட்டமிட்டுள்ளது.

2020 ஐபிஎல்லின் பார்ட்னராக இணைந்தது டாடா மோட்டார்ஸ்... மைதானங்களில் இந்த கார்தான் இருக்கும்...

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன சந்தைப்படுத்துதல் பிரிவின் முதன்மை அதிகாரி விவேக் ஸ்ரீவட்ஸா கூறுகையில், ஐபிஎல் நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கான பண்டிகை என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

2020 ஐபிஎல்லின் பார்ட்னராக இணைந்தது டாடா மோட்டார்ஸ்... மைதானங்களில் இந்த கார்தான் இருக்கும்...

ஐபிஎல் நிறுவனத்துடன் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக திரும்பி வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த முறை ஒவ்வொரு துறையிலும் கோல்டன் தரத்தை பெற்ற அல்ட்ரோஸ் காருடன் வருகிறோம். இந்தியாவின் பாதுகாப்பான ஹேட்ச்பேக் காரான அல்ட்ரோஸைப் போலவே, இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியும் தற்போதைய சூழ்நிலையில் அனைத்து வீரர்களின் பாதுகாப்பை முக்கியமானதாக கொண்டு நடைபெறவுள்ளது.

2020 ஐபிஎல்லின் பார்ட்னராக இணைந்தது டாடா மோட்டார்ஸ்... மைதானங்களில் இந்த கார்தான் இருக்கும்...

டாடா மோட்டார்ஸில், நாங்கள் எப்போதும் நுகர்வோருடன் புதுமையான விதத்தில் இணைப்பை ஏற்படுத்தி வருகிறோம். இன்னும் சொல்ல போனால், முன்பை விட தற்போது இவ்வாறான இணைப்பு அதிகமாக தேவைப்படுகிறது. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களின் மூலமாக தங்களுக்குப் பிடித்த அணிகளுக்கு ஆதரவளிக்கும் பார்வையாளரின் கவனத்தை ஈர்க்க விரிவான திட்டங்கள் எங்களிடம் உள்ளன.

2020 ஐபிஎல்லின் பார்ட்னராக இணைந்தது டாடா மோட்டார்ஸ்... மைதானங்களில் இந்த கார்தான் இருக்கும்...

இவற்றின் மூலமாக கிரிக்கெட் சங்கத்தின் மிகப்பெரிய மதிப்பை ஈட்டுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம், மேலும் நேரடி கிரிக்கெட்டைப் பார்க்கும் மகிழ்ச்சியை மீண்டும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வோம் என்று நம்புகிறோம் என கூறினார்.

2020 ஐபிஎல்லின் பார்ட்னராக இணைந்தது டாடா மோட்டார்ஸ்... மைதானங்களில் இந்த கார்தான் இருக்கும்...

ஐபிஎல், சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் கருத்து தெரிவிக்கையில், டாடா மோட்டார்ஸ் ட்ரீம் 11 ஐபிஎல் 2020 போட்டிக்கான கூட்டணியை தங்கள் அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் உடன் தொடர்ந்து வைத்திருப்பது மிகவும் நல்லது. டாடா மோட்டார்ஸ் 2018 முதல் அதிகாரப்பூர்வ பார்ட்னராக இருந்து வருகிறது. அவர்களுடனான எங்கள் உறவு தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

2020 ஐபிஎல்லின் பார்ட்னராக இணைந்தது டாடா மோட்டார்ஸ்... மைதானங்களில் இந்த கார்தான் இருக்கும்...

கடந்த இரண்டு ஆண்டுகளில், டாடா மோட்டார்ஸ் ரசிகர்களுக்காக சில சிறந்த செயல்பாடுகளைச் செய்வதைக் கண்டோம். இந்த சவாலான ஆண்டில், டாடா அல்ட்ரோஸ் அதன் தொழிற்நுட்ப அம்சங்களுடன் ஐபிஎல் ரசிகர்களை மேலும் ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் என எதிர்பார்க்கிறேன். 2020 ஆம் ஆண்டில் டாடா மோட்டார்ஸுக்கு பெரும் மதிப்பை வழங்குவதற்கும் எங்கள் கூட்டணியை மேலும் வளர்ப்பதற்கும் நாங்கள் எதிர்நோக்குகிறோம் என தெரிவித்தார்.

Most Read Articles
English summary
Tata Altroz becomes official partner of IPL 2020
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X