அதிக ரேஞ்ச்... கைக்கு எட்டும் விலை... அதிர வைக்கப்போகும் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக்!

மிக குறைவான பட்ஜெட்டில் அதிக தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் திறனுடன் புதிய டாடா அல்ட்ராஸ் காரின் மினசார மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 அதிக ரேஞ்ச்... கைக்கு எட்டும் விலை... அதிர வைக்கப்போகும் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக்!

இந்தியாவில் மின்சார கார்களுக்கான சந்தை வலுவான நிலையை நோக்கி நகரத் துவங்கி இருக்கிறது. தற்போதைக்கு இந்த சந்தையில் புதிய மாடல்கள் வரத் துவங்கி இருக்கின்றன. இந்த சந்தையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி சிறந்த தேர்வாக உள்ளது. மேலும், நெக்ஸான் எலெக்ட்ரிக் புண்ணியத்தில் 60 சதவீத பங்களிப்புடன் மின்சார கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் வலுவான நிலையில் உள்ளது.

 அதிக ரேஞ்ச்... கைக்கு எட்டும் விலை... அதிர வைக்கப்போகும் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக்!

தற்போது போட்டிக்கு அதிக மாடல்கள் இல்லாத சூழலில், டாடா நெக்ஸான் எஸ்யூவி விலை, சிறப்பம்சங்கள், ரேஞ்ச் என அனைத்திலும் மிகச் சிறந்த தேர்வாக உள்ளது. மேலும், பாதுகாப்பு தரம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஸிப்ட்ரான் எலெக்ட்ரிக் தொழில்நுட்பம் ஆகியவையும் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியை சிறந்த தேர்வாக மாற்றி உள்ளது.

 அதிக ரேஞ்ச்... கைக்கு எட்டும் விலை... அதிர வைக்கப்போகும் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக்!

இந்த சூழலில், மின்சார கார் மார்க்கெட்டில் மிக வலுவான நிலையை தக்க வைப்பதற்காக புதிய மாடல்களை கொண்டு வருவதற்கு டாடா திட்டம் போட்டு வேலை செய்து வருகிறது. அந்த வகையில், அடுத்ததாக அல்ட்ராஸ் காரின் மின்சார மாடலை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

 அதிக ரேஞ்ச்... கைக்கு எட்டும் விலை... அதிர வைக்கப்போகும் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக்!

தற்போது டாடா அல்ட்ராஸ் கார் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைப்பதுடன், விற்பனையிலும் வலுவான போட்டியாளராக உருவெடுத்துள்ளது. கடந்த மாதம் கூட விற்பனையில் மிக வலுவான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

 அதிக ரேஞ்ச்... கைக்கு எட்டும் விலை... அதிர வைக்கப்போகும் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக்!

எனவே, இந்த காரின் மின்சார மாடல் மூலமாக எலெக்ட்ரிக் கார் சந்தையில் வர்த்தகத்தை வலுவாக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை கச்சிதமாக பூர்த்தி செய்யும் விதத்தில், அதிக ரேஞ்ச் மற்றும் சரியான விலையில் அல்ட்ராஸ் மின்சார மாடலை கொண்டு வருவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

 அதிக ரேஞ்ச்... கைக்கு எட்டும் விலை... அதிர வைக்கப்போகும் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக்!

அதன்படி, டாடா அல்ட்ராஸ் காரின் மின்சார மாடலின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரத்திற்கும் அதிகமாக பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று காடிவாடி செய்தி கூறுகிறது. இது நிச்சயம் நடைமுறை பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால், நகர்ப்புற பயன்பாட்டிற்கு மட்டும் இப்போதைக்கு உகந்ததாக இருக்கும்.

 அதிக ரேஞ்ச்... கைக்கு எட்டும் விலை... அதிர வைக்கப்போகும் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக்!

டாடா அல்ட்ராஸ் காரின் பெட்ரோல், டீசல் மாடல்கள் ரூ.5.44 லட்சம் முதல் ரூ.8.95 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. இந்த சூழலில், டாடா அல்ட்ராஸ் மின்சார மாடலானது ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில் இருக்கும்.

 அதிக ரேஞ்ச்... கைக்கு எட்டும் விலை... அதிர வைக்கப்போகும் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக்!

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் புதிய அல்ட்ராஸ் மின்சார மாடல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவியின் மின்சார மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Tata Motors is working on to launch a more affordable electric car in the country.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X