பிரிமீயம் ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் 3வது இடத்தை பிடித்தது டாடா அல்ட்ராஸ்!

பிரிமீயம் ரக ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் விற்பனை அடிப்படையில் டாடா அல்ட்ராஸ் கார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

பிரிமீயம் ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் 3வது இடத்தை பிடித்தது டாடா அல்ட்ராஸ்!

இந்தியாவின் பிரிமீயம் ரக ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சிறந்த கார் மாடல்கள் தேர்வுக்கு உள்ளன. மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் டொயோட்டா க்ளான்ஸா என பல மாடல்கள் இந்த சந்தையில் கடும் போட்டி போடுகின்றன.

பிரிமீயம் ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் 3வது இடத்தை பிடித்தது டாடா அல்ட்ராஸ்!

இந்த நிலையில், சந்தைப் போட்டி மிகுந்த இந்த சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் அல்ட்ராஸ் என்ற புத்தம் புதிய மாடலுடன் அண்மையில் களமிறங்கியது. நவீன யுக டிசைன், தொழில்நுட்ப அம்சங்கள், வசதிகளுடன் வந்த டாடா அல்ட்ராஸ் கார் வாடிக்கையாளர் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

பிரிமீயம் ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் 3வது இடத்தை பிடித்தது டாடா அல்ட்ராஸ்!

கடந்த மாதம் 2,806 டாடா அல்ட்ராஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த சந்தையில் மாருதி பலேனோ முதலிடத்திலும், ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இரண்டாவது இடத்திலும் இருந்து வருகின்றது. மூன்றாவது இடத்தில் மாருதி பலேனோ காரின் ரீபேட்ஜ் மாடலான டொயோட்டா க்ளான்ஸா இருந்து வந்தது.

பிரிமீயம் ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் 3வது இடத்தை பிடித்தது டாடா அல்ட்ராஸ்!

இந்த நிலையில், டொயோட்டா க்ளான்ஸா காரின் விற்பனையை முந்தி, டாடா அல்ட்ராஸ் கார் இந்த சந்தையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 2,710 டொயோட்டா க்ளான்ஸா கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. சிறிய வித்தியாசத்தில் டொயோட்டா க்ளான்ஸா காரை டாடா அல்ட்ராஸ் முந்தியுள்ளது.

பிரிமீயம் ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் 3வது இடத்தை பிடித்தது டாடா அல்ட்ராஸ்!

இந்த எண்ணிக்கை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினாலும், எதிர்பார்த்த அளவு விற்பனை இலக்கை எட்டியதா என்பது சந்தேகத்திற்கு இடமாக இருக்கிறது.

பிரிமீயம் ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் 3வது இடத்தை பிடித்தது டாடா அல்ட்ராஸ்!

எனினும், பிரிமீயம் ரக ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் அனைத்து விதத்திலும் சிறந்த தேர்வாக டாடா அல்ட்ராஸ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. ரூ.5.29 லட்சம் என்ற மிக சவாலான விலையில் டாடா அல்ட்ராஸ் கார் கிடைக்கிறது.

பிரிமீயம் ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் 3வது இடத்தை பிடித்தது டாடா அல்ட்ராஸ்!

குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருக்கிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களின் தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் தரும் பாதுகாப்பு விஷயமாக இருக்கும்.

பிரிமீயம் ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் 3வது இடத்தை பிடித்தது டாடா அல்ட்ராஸ்!

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடல் 90 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பிஎஸ்-6 தரமுடைய எஞ்சின்களுடன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது.

பிரிமீயம் ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் 3வது இடத்தை பிடித்தது டாடா அல்ட்ராஸ்!

டாடா அல்ட்ராஸ் காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரிலும் 7 அங்குல மல்டி இன்ஃபர்மேஷன் திரை கொடுக்கப்படுகிறது.

பிரிமீயம் ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் 3வது இடத்தை பிடித்தது டாடா அல்ட்ராஸ்!

ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், கூல்டு க்ளவ்பாக்ஸ், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல அலாய் வீல்கள் என பல அசத்தலான அம்சங்களை பெற்றிருக்கிறது. பல மதிப்பு மிக்க அம்சங்களுடன் அடுத்து வரும் மாதங்களிலும் டாடா அல்ட்ராஸ் கார் பிரிமீயம் ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் மூன்றாவது இடத்தை தக்க வைக்கும் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
The Tata Altroz sales overtook the likes of the Volkswagen Polo, Toyota Glanza and the Honda Jazz and garners third place in premium hatchback car market.
Story first published: Saturday, March 7, 2020, 13:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X