முதல்முறையாக டாடா இணையதளத்தில் தரிசனம் தந்த அல்ட்ராஸ் டர்போ மாடல்!

டாடா அல்ட்ராஸ் காரின் டர்போ மாடல் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த கார் பதிவேற்றப்பட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.

டாடா இணையதளத்தில் தரிசனம் தந்த அல்ட்ராஸ் டர்போ மாடல்!

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் டாடா அல்ட்ராஸ் கார் சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது. வடிவமைப்பு, வசதிகள், எஞ்சின் தேர்வு, விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை கொடுத்து வருகிறது.

டாடா இணையதளத்தில் தரிசனம் தந்த அல்ட்ராஸ் டர்போ மாடல்!

இந்த நிலையில், டாடா அல்ட்ராஸ் காரில் பெட்ரோல், டீசல் மாடல்கள் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைத்து வருகிறது. இதைத்தொடர்ந்து, தற்போது மற்றொரு எஞ்சின் தேர்வும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டாடா இணையதளத்தில் தரிசனம் தந்த அல்ட்ராஸ் டர்போ மாடல்!

அதாவது, டாடா அல்ட்ராஸ் காரில் சக்திவாய்ந்த டர்போ பெட்ரோல் மாடலில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஏற்கனவே பலமுறை இந்த கார் சாலை சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கும் படங்கள் வெளியாகி வந்தன.

டாடா இணையதளத்தில் தரிசனம் தந்த அல்ட்ராஸ் டர்போ மாடல்!

இந்த நிலையில், தற்போது முதல்முறையாக அதிகாரப்பூர்வ டாடா இணையதளத்தில் இந்த கார் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும் படங்களை டீம் பிஎச்பி தளம் வெளியிட்டுள்ளது. இந்த கார் iTurbo பேட்ஜ் பொருத்தப்பட்டு வர இருக்கிறது. மேலும், கரும் பூச்சு பின்னணி கொண்ட டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. இதேபோன்று, சில கூடுதல் அலங்கார அம்சங்களுடன் தனித்துவமாக இருக்கும் என்று தெரிகிறது.

டாடா இணையதளத்தில் தரிசனம் தந்த அல்ட்ராஸ் டர்போ மாடல்!

டாடா அல்ட்ராஸ் காரின் டர்போ மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். மேலும், 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோமேட்டிக் மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதியும் கொடுக்கப்படும் வாய்ப்புள்ளது.

டாடா இணையதளத்தில் தரிசனம் தந்த அல்ட்ராஸ் டர்போ மாடல்!

டாடா அல்ட்ராஸ் காரில் எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன. தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டு இருக்கும்.

டாடா இணையதளத்தில் தரிசனம் தந்த அல்ட்ராஸ் டர்போ மாடல்!

தற்போது டாடா அல்ட்ராஸ் காரில் வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 85 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

டாடா இணையதளத்தில் தரிசனம் தந்த அல்ட்ராஸ் டர்போ மாடல்!

டாடா அல்ட்ராஸ் காரின் டர்போ பெட்ரோல் மாடலானது ஃபோக்ஸ்வேகன் போலோ டிஎஸ்ஐ, விரைவில் வரும் புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் ஆகிய மாடல்களுடன் போட்டி போடும். இந்த புதிய மாடலின் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படும். இந்த காரில் பிரத்யேக வண்ணத் தேர்வுகளும் கொடுக்கப்படும்.

More from DriveSpark

Article Published On: Friday, October 9, 2020, 10:22 [IST]
English summary
Tata Motors will be soon introducing a more powerful turbo-petrol engine on its Altroz premium hatchback in the Indian market. Ahead of its launch, the upcoming turbo-petrol variant of the hatchback has been spied several times testing in the country.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+