டாடா அல்ட்ராஸில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்... அறிமுகம் எப்போது..?

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் மாடலின் புதிய டர்போ பெட்ரோல் வேரியண்ட் கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. இதனால் அல்ட்ராஸின் இந்த டர்போ பெட்ரோல் வேரியண்ட் தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

டாடா அல்ட்ராஸில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்... அறிமுகம் எப்போது..?

கடந்த மாத இறுதியில் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த இந்த கார் தற்போது மீண்டும் மஹாராஷ்டிரா என்எச்65 சாலையில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கார், டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்டிருப்பதையும் அறிய முடிகிறது.

டாடா அல்ட்ராஸில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்... அறிமுகம் எப்போது..?

டாடா அல்ட்ராஸின் இந்த டர்போ பெட்ரோல் வேரியண்ட்டில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வெவ்வேறு விதமான நிலைகளில் பொருத்தப்பட்ட டர்போசார்ஜர் உடன் உள்ளது. இந்த என்ஜின் 100 பிஎச்பி ஆற்றலையும் 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்து திறன் கொண்டதாக கூறப்படுகிறது.

டாடா அல்ட்ராஸில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்... அறிமுகம் எப்போது..?

இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. தற்போதைய அல்ட்ராஸ் மாடலில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர், பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

டாடா அல்ட்ராஸில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்... அறிமுகம் எப்போது..?

இதில் 1.2 லி பெட்ரோல் என்ஜின் 6,000 ஆர்பிஎம்-ல் 85 பிஎச்பி பவரையும், 3,300 ஆர்பிஎம்-ல் 113 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக காருக்கு வழங்கி வருகிறது. 1.5 லி டர்போ டீசல் என்ஜின் 4,000 ஆர்பிஎம்-ல் 89 பிஎச்பி ஆற்றலையும் 3,000 ஆர்பிஎம்-ல் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

டாடா அல்ட்ராஸில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்... அறிமுகம் எப்போது..?

இந்த இரு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த சோதனை ஓட்ட காரில் என்ஜின் மாற்றம் தவிர்த்து டிசைன் மற்றும் தொழிற்நுட்பம் உள்ளிட்ட வேறெந்த தகவலையும் அறிய முடியவில்லை.

டாடா அல்ட்ராஸில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்... அறிமுகம் எப்போது..?

இந்த டர்போ என்ஜினுடன் டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் மாடல் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜெனிவா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த கூடுதல் என்ஜினால் அல்ட்ராஸ் மாடல் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலைட் ஐ20 டர்போ மாடலுடன் நேரடியாக போட்டியிட முடியும்.

டாடா அல்ட்ராஸில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்... அறிமுகம் எப்போது..?

அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் மாடல் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஆல்ஃபா மாடுலர் ப்ளாட்ஃபாரத்தில் தான் டாடா நிறுவனத்தின் எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி காரும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ப்ளாட்ஃபாரத்தின் மூலமாக 3.7 மீட்டரில் இருந்து 4.3 மீட்டர் வரையிலான நீளம் கொண்ட கார்களை தயாரிக்க இயலும்.

டாடா அல்ட்ராஸில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்... அறிமுகம் எப்போது..?

தோற்றம் மட்டுமின்றி, வெவ்வேறான வடிவ கார்களில் பெட்ரோல், டீசல் மற்றும் ஹைப்ரீட் என்ஜினுடன் எலக்ட்ரிக் மோட்டாரையும் பொருத்த முடியும். டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் கார் இந்திய சந்தையில் ரூ.5.29 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டாடா அல்ட்ராஸில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்... அறிமுகம் எப்போது..?

டாடா அல்ட்ராஸிற்கு போட்டி மாடல்களாக சந்தையில் மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் டொயோட்டா க்ளான்ஸா உள்ளிட்ட பிரபலமான மாடல் கார்கள் உள்ளன. இதனால் தான் டாடா நிறுவனம் அல்ட்ராஸ் மாடலில் கூடுதல் என்ஜின் தேர்வுகளை வழங்க வேண்டும் என திட்டமிட்டு இந்த டர்போ பெட்ரோல் வேரியண்ட்டை தயாரித்து வருகிறது. இந்த புதிய அல்ட்ராஸ் மாடலின் இந்திய அறிமுகம் இந்த வருட பண்டிக்கை காலமான ஆகஸ்ட்-அக்டோபரில் இருக்கலாம்.

Source: Team BHP

Most Read Articles
English summary
Tata Altroz Turbo Petrol spied
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X