விற்பனையில் உள்ள டாடா அல்ட்ராஸ் மாடல் சோதனை ஓட்டம்... டர்போ பெட்ரோல் வேரியண்ட்டிற்காகவா..?

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகங்களுள் ஒன்றான அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனையில் உள்ள டாடா அல்ட்ராஸ் மாடல் சோதனை ஓட்டம்... டர்போ பெட்ரோல் வேரியண்ட்டிற்காகவா..?

அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் கார் ஏற்கனவே சந்தையில் விற்பனையில் உள்ளதால் ஒருவேளை இது, இந்த காரின் புதிய டர்போ பெட்ரோல் வேரியண்ட்டாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ள இந்த சோதனை ஓட்டத்தின் ஸ்பை படங்களில் கார் கோயம்புத்தூரில் சிக்னல் ஒன்றில் நின்று கொண்டிருக்கிறது.

விற்பனையில் உள்ள டாடா அல்ட்ராஸ் மாடல் சோதனை ஓட்டம்... டர்போ பெட்ரோல் வேரியண்ட்டிற்காகவா..?

கோயம்புத்தூர், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்பு கூட்டணி வைத்து கொண்டிருந்த ஜெயம் ஆட்டோமேட்டிவ் நிறுவனத்தின் தலைமையகம் உள்ள நகரமாகும். டர்போசார்ஜர்ஸ் மற்றும் மற்ற என்ஜின் பாகங்களை டாடா நிறுவனத்திற்கு வழங்குவதில் இந்நிறுவனம் தான் முதன்மையானதாக உள்ளது.

விற்பனையில் உள்ள டாடா அல்ட்ராஸ் மாடல் சோதனை ஓட்டம்... டர்போ பெட்ரோல் வேரியண்ட்டிற்காகவா..?

இதுவே தற்போது சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ள அல்ட்ராஸ் மாடல் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டாக இருக்குமோ என்ற கேள்வி எழுவதற்கு காரணமாக உள்ளது. ஆனால் இதுவரை டர்போ-பெட்ரோல் அல்ட்ராஸ் வேரியண்ட்டை பற்றிய எந்தவொரு தகவலும் டாடா நிறுவனத்தில் இருந்து வெளிவரவில்லை.

விற்பனையில் உள்ள டாடா அல்ட்ராஸ் மாடல் சோதனை ஓட்டம்... டர்போ பெட்ரோல் வேரியண்ட்டிற்காகவா..?

அதேநேரம் இந்த சோதனை காரில் நெக்ஸான் பிஎஸ்6 மாடலின் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டிருப்பதற்கும் வாய்ப்புண்டு. ஆனால் இந்த டர்போ என்ஜின் நிச்சயம் நேரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருக்காது. மாறாக, மாறுப்பட்ட வடிவத்துடன் வித்தியாசமாக ட்யூன் செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருக்கலாம்.

விற்பனையில் உள்ள டாடா அல்ட்ராஸ் மாடல் சோதனை ஓட்டம்... டர்போ பெட்ரோல் வேரியண்ட்டிற்காகவா..?

இதுமட்டுமின்றி இந்த சோதனை காரின் என்ஜின் அமைப்பில் புத்தம் புதிய டிசிடி யூனிட்டும் (தேர்வாக) இணைக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் டிசிடி யூனிட்டின் தயாரிப்பில் ஈடுப்பட்டுவருவதாக டாடா நிறுவனம் முன்னதாக தெரிவித்திருந்தது.

விற்பனையில் உள்ள டாடா அல்ட்ராஸ் மாடல் சோதனை ஓட்டம்... டர்போ பெட்ரோல் வேரியண்ட்டிற்காகவா..?

ஆனால் எந்தவொரு வெளிப்படையான காரணமும் இல்லாமல் அல்ட்ராஸின் தோற்றத்தில் உள்ள இந்த சோதனை காரை வைத்து ஒரு முடிவுக்கு வருவது சரியாக இருக்காது. ஏனெனில் இந்த சோதனை ஓட்டம் எதற்கு என்பதற்கான விடை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மட்டுமே தெரியும்.

விற்பனையில் உள்ள டாடா அல்ட்ராஸ் மாடல் சோதனை ஓட்டம்... டர்போ பெட்ரோல் வேரியண்ட்டிற்காகவா..?

டாடா நெக்ஸானில் பிஎஸ்6 தரத்தில் உள்ள 1.2 லிட்டர் டர்போ ரெவோட்ரான் என்ஜின் அதிகப்பட்சமாக 118 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி வருகிறது. அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரின் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 85 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 25, 2020, 18:30 [IST]
English summary
Tata Altroz spied testing – Could this be the turbo petrol variant
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+