டர்போ & ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் அல்ட்ராஸ்!! தீவிரம் காட்டும் டாடா மோட்டார்ஸ்

டாடா அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் கார் மீண்டும் ஒருமுறை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. ரோகித் புபனாலே மூலம் வெளியாகியுள்ள இதுகுறித்து ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரான அல்ட்ராஸில் புதியதாக இரு முக்கிய அப்கிரேட்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக கடந்த சில மாதங்களாக கூறி வருகிறோம்.

இதில் ஒன்று டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின், மற்றொன்று டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ். புதிய அல்ட்ராஸ் டர்போ காரின் அறிமுகம் அடுத்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில் இந்த டர்போ கார் தற்போது மீண்டும் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது.

அல்ட்ராஸின் இந்த புதிய டர்போ வேரியண்ட்டில்தான் புதிய 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படவுள்ளது. இந்த கியர்பாக்ஸ் ஜெர்மனை சேர்ந்த ஸ்கேஃப்லர் நிறுவனத்தால் வழங்கப்படவுள்ளது. இந்த ட்ரான்ஸ்மிஷன் காரில் கியர்-ஷிஃப்டர் லுமக்ஸ் நிறுவனத்தில் இருந்து பெறப்படவுள்ளது.

7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு அல்ட்ராஸ் டர்போ காரின் டாப் வேரியண்ட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் கியர்பாக்ஸ் வருகையால் அல்ட்ராஸின் எடை தற்போதைய நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல்-மேனுவல் வெர்சனை காட்டிலும் சற்று அதிகமாக இருக்கும்.

இவ்வாறு எடை அதிகரிப்பதால், காருக்கு வழங்கப்படும் என்ஜின் ஆற்றல் நாம் எதிர்பார்ப்பதை காட்டிலும் அதிகமாகவே டாடா நிர்ணயிக்கும். இதனால் காரின் சஸ்பென்ஷன் அமைப்பில் டாடா மோட்டார்ஸ் பெரிய அளவில் மாற்றம் கொண்டுவர வாய்ப்பில்லை.

அதிகப்படியான டர்போசார்ஜ்டு என்ஜினின் ஆற்றல் மற்றும் வேகமாக கியரை மாற்றும் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுவரும் டாடா அல்ட்ராஸ் டர்போ காரின் செயல்திறன் எவ்வாறு இருக்கும் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள், உண்மையில் பயணம் மெய்சிலிர்க்க வைக்கும்.

அல்ட்ராஸ் டர்போ ஆட்டோமேட்டிக் கார் அறிமுகமான பிறகு புதிய ஹூண்டாய் ஐ20 டிசிடி, ஃபோக்ஸ்வேகன் போலோ 1.0 டிஎஸ்ஐ (ஆட்டோமேட்டிக்) மற்றும் சிவிடி ட்ரான்ஸ்மிஷன் தேர்வை பெற்றுவரும் மாருதி பலேனோ, ஹோண்டா ஜாஸ் மற்றும் டொயோட்டா க்ளான்ஸா கார்களுக்கு விற்பனையில் போட்டியாக விளங்கும்.

டிசிடி போன்ற ஈரமான-க்ளட்ச் செயல்படுதிறனில் தரமானதாகும். ஏனெனில் இந்திய ட்ரைவிங் சூழ்நிலையில் உலர்ந்த-க்ளட்ச் (மேனுவல்) யூனிட்கள் சில குறைப்பாடுகளை கொண்டவைகளாக பார்க்கப்படுகின்றன.

அல்ட்ராஸ் டர்போ காரில் புதிய டர்போ முத்திரையை தவிர்த்து தோற்றத்தில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. டாடா அல்ட்ராஸில் தற்சமயம் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

தற்போதுவரையில் கசிந்துள்ள தகவல்களில் அல்ட்ராஸ் டர்போ கார் அதிகப்பட்சமாக 108 பிஎச்பி மற்றும் 140 என்எம் டார்க் திறனில் இயங்கக்கூடிய வகையில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. டாப் வேரியண்டில் மட்டுமே வழங்கப்படும் இந்த டாடா டர்போ காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9 லட்சத்தில் இருந்து ரூ.9.5 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 17, 2020, 12:30 [IST]
English summary
Tata Altroz Turbo Petrol Spied – New Hyundai i20 DCT Automatic Rival
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+