டாடா நிறுவனம் வைத்த சஸ்பென்ஸ்... உச்சகட்ட எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்... பொங்கல் களைகட்ட போகுது...
டாடா அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் மாடலின் அறிமுக தேதி குறித்த தகவல்கள் வெளியாகி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், நடப்பாண்டு தொடக்கத்தில் அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போது ஒவ்வொரு மாதமும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ளது.

எனவே அல்ட்ராஸ் காரின் டர்போ பெட்ரோல் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான செய்திகள் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வெளியாகி வருகின்றன. நடப்பாண்டு இறுதியில் டாடா அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகமாகலாம் என ஆரம்பத்தில் கூறப்பட்டது.

இந்த சூழலில், வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி, பொங்கல் பண்டிகையை ஒட்டி அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த புதிய மாடலில், 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 5,500 ஆர்பிஎம்மில் 108 பிஎச்பி பவரையும், 1,500-5,500 ஆர்பிஎம்மில் 140 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர ட்யூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக கூறப்படுகிறது. அல்ட்ராஸ் காரின் டர்போ பெட்ரோல் மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சாலைகளில் ஏற்கனவே சோதனை செய்து வருகிறது. இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

இந்த சூழலில், வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி நடைபெறவுள்ள அல்ட்ராஸ் காரின் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அனுப்பியுள்ளது. இதன் அடிப்படையில்தான், அல்ட்ராஸ் காரின் டர்போ பெட்ரோல் மாடல் வரும் ஜனவரி 13ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

விற்பனைக்கு வந்த பிறகு ஹூண்டாய் ஐ20 டர்போ மாடலுடன், டாடா அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் மாடல் நேருக்கு நேராக போட்டியிடும். டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, இந்த புதிய டர்போ பெட்ரோல் மாடல் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக கிராவிட்டாஸ் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

தற்போது விற்பனையில் உள்ள டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் 7 சீட்டர் வெர்ஷன்தான் கிராவிட்டாஸ் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் விற்பனைக்கு வரவுள்ள கிராவிட்டாஸ் காரும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








