ஆஹா... இந்த கலர்ல டாடா கார் வருதா? இதுக்கே ஒரு காரை புக் செய்யலாம் போலிருக்கே!

டாடா அல்ட்ராஸ் கார் புதிய நிறத்தில் அறிமுகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஆஹா... இந்த கலர்ல டாடா கார் வருதா? இதுக்கே ஒரு காரை புக் செய்யலாம் போலிருக்கே!

டாடா நிறுவனம் அதன் அல்ட்ராஸ் மாடலில் விரைவில் டர்போ-பெட்ரோல் வேரியண்டை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காரிலேயே புதுமுக நிற தேர்வை டாடா வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய மரினா நீல நிறத்திலேயே அது விற்பனைக்குக் கொண்டுவரப்பட இருக்கின்றது.

ஆஹா... இந்த கலர்ல டாடா கார் வருதா? இதுக்கே ஒரு காரை புக் செய்யலாம் போலிருக்கே!

மரினா நீல நிறத்திலான டாடா அல்ட்ராஸ்

இந்த புதிய நிறம் அனைத்து விதமான வாகன பிரியர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இளைஞர்களை அதிகம் கவரும் என கூறப்படுகின்றது. எனவேதான் இந்த புதிய நிறத்தில் புதுமுக காரை அறிமுகம் செய்ய டாடா திட்டமிட்டுள்ளது.

ஆஹா... இந்த கலர்ல டாடா கார் வருதா? இதுக்கே ஒரு காரை புக் செய்யலாம் போலிருக்கே!

இந்த கார் வருகின்ற ஜனவரி 13ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அறிமுகத்தை முன்னிட்டே அக்கார் தீவிர பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே டாடா நிறுவனம் புதிய டர்போ பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட காரை விற்பனைக்குக் கொண்டுவர அது திட்டமிட்டுள்ளது.

ஆஹா... இந்த கலர்ல டாடா கார் வருதா? இதுக்கே ஒரு காரை புக் செய்யலாம் போலிருக்கே!

தற்போது 1.2 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆகிய இரு தேர்வில் மட்டுமே இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த வரிசையிலேயே டர்போ பெட்ரோல் எஞ்ஜின் தேர்வு சேர்க்கப்பட இருக்கின்றது.

ஆஹா... இந்த கலர்ல டாடா கார் வருதா? இதுக்கே ஒரு காரை புக் செய்யலாம் போலிருக்கே!

புதிய டர்போ பெட்ரோல் எஞ்ஜின் உயர் ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களில் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வந்த பின்னர் ஹூண்டாய் ஐ10 டர்போ, மாருதி சுசுகி பலினோ, ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும். இதன் விலை ரூ. 7.99 லட்சத்தில் இருந்து ரூ. 8.75 லட்சம் வரையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆஹா... இந்த கலர்ல டாடா கார் வருதா? இதுக்கே ஒரு காரை புக் செய்யலாம் போலிருக்கே!

டாடா நிறுவனத்தின் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார்களில் அல்ட்ராஸ் மாடலும் ஒன்று. இது ஓர் 5 நட்சத்திரம் பெற்ற காராகும். எனவேதான் டாடாவின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இது இருக்கின்றது.

Most Read Articles

English summary
Tata Altroz Turbo-Petrol Will Get New Marina Blue Colour. Read In Tamil.
Story first published: Friday, December 25, 2020, 17:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X