பண்டிகை கால ஆஃபர்... டாடா கார்கள் மீது ரூ.65,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!
பண்டிகை காலத்தையொட்டி, டாடா கார்களுக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சேமிப்புச் சலுகைகள் விபரங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

கடந்த மாதம் நவராத்திரி பண்டிகை காலத்தின்போது டாடா கார்களின் விற்பனை சிறப்பாக அமைந்தது. சிறப்பு சேமிப்புச் சலுகைகள் உள்ளிட்டவற்றுடன் பண்டிகை காலத்தை டாடா மோட்டார்ஸ் அணுகியதால், எதிர்பார்த்த அளவு நல்ல விற்பனையை பதிவு செய்தது. இதனை தக்க வைக்கும் விதத்தில், தொடர்ந்து ஆஃபர்களை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது.

அதிகபட்ச சேமிப்பு விபரம்
கார்களின் விலையில் நேரடியான தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்டவற்றுடன் ரூ.65,000 வரை சேமிக்கும் வாய்ப்பை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. ஒவ்வொரு காருக்கும் எவ்வளவு சேமிப்பு வழங்கப்படுகிறது. என்பது குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டாடா டியாகோ
டாடா டியாகோ காருக்கு ரூ.25,000 வரையிலான சேமிப்புச் சலுகைகள் உள்ளன. இதில், ரூ.15,000 நேரடிய தள்ளுபடியாகவும், பழைய காரை கொடுத்து புதிய டாடா டியாகோ கார் வாங்குவோருக்கு ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும் இருக்கும். இந்த கார் ரூ.4.70 லட்சம் முதல் ரூ.6.74 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

டாடா டிகோர்
டாடா டிகோர் காருக்கு ரூ.30,000 வரையிலான சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.15,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும் பெற முடியும். டாடா டிகோர் கார் ரூ.5.39 லடசம் முதல் ரூ.7.49 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

டாடா நெக்ஸான்
டாடா நெக்ஸான் எஸ்யூவி காருக்கு ரூ.15,000 வரையில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் சேமிப்பை பெற முடியும். பழைய காரை கொடுத்து வாங்குவோருக்கு கூடுதலாக ரூ.15,000 வரை மதிப்பு சேர்க்கப்படும். இந்த கார் ரூ.6.99 லட்சம் முதல் ரூ.12.70 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

டாடா ஹாரியர்
டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு ரூ.65,000 வரையிலான சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ25,000 வரை நேரடி தள்ளுபடியாகவும், ரூ.40,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும் பெற இயலும்.

டீலரை தொடர்பு கொள்க
கடந்த 1ந் தேதி முதல் வரும் 30ந் தேதி வரை புதிய டாடா கார்களை முன்பதிவு செய்வோருக்கு இந்த சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். டீலருக்கு டீலர் இந்த சேமிப்புச் சலுகைகள் வேறுபடும் வாய்ப்புள்ளது. அருகிலுள்ள டாடா கார் ஷோரூமை தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை பெற முடியும். விற்பனை சிறப்பாக இருந்து வருவதால், டாடா அல்ட்ராஸ் காருக்கு எந்த விதமான சேமிப்புச் சலுகைகளும் இப்போதைக்கு இல்லை.


Click it and Unblock the Notifications








