பண்டிகை கால ஆஃபர்... டாடா கார்கள் மீது ரூ.80,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!

கொரோனா தாக்கம் ஒரு புறம் இருந்தாலும், பண்டிகை காலம் வருவதால் கார் நிறுவனங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வர்த்தகத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களை கவரும் வகையில் தள்ளுபடி சலுகைகளை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

பண்டிகை கால ஆஃபர்... டாடா கார்கள் மீது ரூ.80,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களுக்கு இந்த சிறப்பு சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. க்ளிக் டு டிரைவ் என்ற ஆன்லைன் பக்கம் மூலமாக முன்பதிவு செய்யும்போது இந்த சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது.

பண்டிகை கால ஆஃபர்... டாடா கார்கள் மீது ரூ.80,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!

அதிகபட்சமாக ரூ.80,000 வரை சேமிக்கும் வாய்ப்பை இதன் மூலமாக பெற முடியும். கார்ப்பரேட் போனஸ், எக்ஸ்சேஞ்ச் சலுகை ஆகியவை இதில் அடங்கும். மாடலுக்கு தக்கவாறு இந்த சேமிப்பு வழங்கப்படுகிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பண்டிகை கால ஆஃபர்... டாடா கார்கள் மீது ரூ.80,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!

டாடா டியாகோ

டாடா டியாகோ காருக்கு ரூ.32,000 வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது. நேரடி தள்ளுபடியாக ரூ.15,000 வரையிலும், பழைய காரை மாற்றி டியாகோ கார் வாங்குவோருக்கு ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாக பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதுதவிர்த்து, ரூ.7,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் சலுகையாக பெறலாம். கொரோனா முன்கள பணியாளர்களுக்கு ரூ.3,000 சிறப்பு சேமிப்பும் வழங்கப்படுகிறது.

பண்டிகை கால ஆஃபர்... டாடா கார்கள் மீது ரூ.80,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!

டாடா டிகோர்

டாடா டிகோர் காருக்கு ரூ.37,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.15,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெற முடியம். ரூ.7,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி பெறும் வாய்ப்பும் உள்ளது.

பண்டிகை கால ஆஃபர்... டாடா கார்கள் மீது ரூ.80,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!

டாடா நெக்ஸான்

டாடா நெக்ஸான் எஸ்யூவிக்கு ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும், ரூ.10,000 நேரடி தள்ளுபடியாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது. டீசல் வேரியண்ட்டுகளுக்கு இந்த சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். பெட்ரோல் நெக்ஸான் வேரியண்ட்டுகளுக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகை இல்லை. டாடா பணியாளர்களுக்கு ரூ.5,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது.

பண்டிகை கால ஆஃபர்... டாடா கார்கள் மீது ரூ.80,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!

டாடா ஹாரியர்

டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு ரூ.80,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.25,000 வரை நேரடி தள்ளுபடியும், ரூ.40,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் இருக்கிறது. ரூ.15,000 வரை கார்ப்பரேட் போனஸாக பெறலாம்.

பண்டிகை கால ஆஃபர்... டாடா கார்கள் மீது ரூ.80,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!

அதேநேரத்தில், டார்க் எடிசன் மற்றும் டாப் வேரியண்ட்டுகளுக்கு மேற்குறிப்பிட்ட சலுகைகள் பொருந்தாது. ஆனால், ரூ.40,000 வரையிலான சலுகைகளை டாப் வேரியண்ட்டுகளுக்கு பெறும் வாய்ப்பு இருக்கிறது. வரும் செப்டம்பர் 30 வரை புதிய டாடா கார்களை முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த சேமிப்புச் சலுகைகள் பொருந்தும்.

Most Read Articles

English summary
Tata Motors have announced attractive discounts and special offers on its select models range this month. The company is offering cash discounts, exchange bonuses, and corporate discounts.
Story first published: Wednesday, September 9, 2020, 19:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X