டாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுகம்

பண்டிகை காலம் துவங்கி இருக்கும் நிலையில், டாடா கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எளிதாக செலுத்தக்கூடிய வகையில் மாதத் தவணைகள் வகுக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கடன் திட்ட விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நல்ல காலம் பிறந்துள்ளது. மிக நீண்ட காலத்திற்கு பின்னர், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த உற்சாகத்துடன் பண்டிகை காலத்தில் கார் வாங்க இருக்கும் வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு திட்டங்களுடன் விற்பனையை அதிகரிக்க களம் புகுந்துள்ளது.

டாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுகம்

இதற்காக, எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைந்து பல சிறப்பு கடன் திட்டங்களை தனது கார்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்க உள்ளது. இந்த சிறப்பு கடன் திட்டங்களானது TML Flexi Drive மற்றும் Gradual Step Up என்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுகம்

கிராஜுவல் ஸ்டெப் அப் என்ற கடன் திட்டத்தின்படி, வாடிக்கையாளர்கள் ஒரு லட்சம் கடனுக்கு ரூ.799 மட்டுமே மாதத் தவணையாக செலுத்தும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதாவது, நீங்கள் வாங்கும் காருக்கு 5 லட்ச ரூபாய் கடன் வாங்கினால். 3,995 என்ற மாதத் தவணையை செலுத்தினால் போதுமானது.

டாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுகம்

அதேநேரத்தில், இந்த மாதத் தவணையானது சிறிது சிறிதாக உயர்த்தப்படும் வகையில் வகுக்கப்பட்டுள்ளது. இந்த கடன் திட்டத்தின் மூலமாக, ஆரம்ப கட்டத்தில் அதிக மாதத் தவணை சுமை இல்லாத வகையில் இருக்கும். பின்னர், வாடிக்கையாளர்களின் பொருளாதார நிலை சீரானவுடன் அதிக மாதத் தவணையை செலுத்த வேண்டி இருக்கும்.

டாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுகம்

பிளெக்ஸி ட்ரைவ் திட்டத்தின்படி, கடன் திட்ட காலத்தில், ஆண்டுக்கு 3 மாதங்களுக்கு லட்சத்திற்கு ரூ.789 மட்டுமே மாதத் தவணையாக செலுத்தும் வாய்ப்பு வழங்கப்படும். பொருளாதார நிலை அல்லது கூடுதல் செலவு இருக்கும் மாதங்களில் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்து குறைவான மாதத் தவணையை செலுத்தும் வாய்ப்பை பெற முடியும்.

டாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுகம்

இந்த இரண்டு திட்டங்களின் கீழ், டாடா கார்களின் எக்ஸ்ஷோரூம் விலையில் 100 சதவீதம் வரை கடன் பெறும் வசதியும் கொடுக்கப்படும். இந்த கடன் திட்டங்கள் நாடு முழுவதும் அனைத்து டாடா மோட்டார்ஸ் கார் டீலர்களிலும் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

டாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுகம்

வரும் நவம்பர் 30ந் தேதி வரை இந்த சிறப்பு கடன் திட்டங்கள் அமலில் இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டாலும், பாதுகாப்பு கருதி கார் வாங்க விரும்புவோருக்கு இந்த திட்டங்கள் சிறப்பானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Most Read Articles

English summary
Tata Motors has partnered with HDFC Bank to roll out exciting finance offers for its passenger cars in the country. The company has introduced two new finance offers called the 'Gradual Step Up' and the 'TML Flexi Drive' schemes during this festive season this year.
Story first published: Monday, October 19, 2020, 18:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X