டாடா கார்கள் மீது சிறப்பு சேமிப்புச் சலுகைகள்... விபரம் உள்ளே!

ஆண்டு கடைசியை நெருங்கும் இவ்வேளையில், டாடா கார்கள் மீது அதிரடி சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த டாடா காருக்கு எவ்வளவு சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது என்ற விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டாடா கார்கள் மீது சிறப்பு சேமிப்புச் சலுகைகள்... விபரம் உள்ளே!

ஆண்டு இறுதி தள்ளுபடி

ஆண்டு கடைசி நெருங்கும்போது இருப்பு இருக்கும் இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்வதற்காக கார் நிறுவனங்கள் சிறப்பு சேமிப்புச் சலுகைகளை வழங்குகின்றன. அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ஆண்டு இறுதி தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது.

டாடா கார்கள் மீது சிறப்பு சேமிப்புச் சலுகைகள்... விபரம் உள்ளே!

அதிகபட்ச சேமிப்பு

அதன்படி, டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான் மற்றும் ஹாரியர் உள்ளிட்ட முன்னணி மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ.65,000 வரை சேமிப்பு பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

டாடா கார்கள் மீது சிறப்பு சேமிப்புச் சலுகைகள்... விபரம் உள்ளே!

டாடா டியோகோ

டாடா டியாகோ கார் மீது ரூ.25,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். இதில், ரூ.15,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மதிப்பாகவும் வழங்கப்படுகிறது. டாடா டியாகோ கார் ரூ.4.70 லட்சம் முதல் ரூ.6.74 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டாடா கார்கள் மீது சிறப்பு சேமிப்புச் சலுகைகள்... விபரம் உள்ளே!

டாடா டிகோர்

அடுத்து டாடா நிறுவனத்தின் காம்பேக்ட் ரக செடான் மாடலான டிகோர் காருக்கு ரூ.30,000 மதிப்புடைய சேமிப்பை பெற முடியும். ரூ.15,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மதிப்பாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது. டாடா டிகோர் கார் ரூ.5.39 லட்சம் முதல் ரூ.7.49 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டாடா கார்கள் மீது சிறப்பு சேமிப்புச் சலுகைகள்... விபரம் உள்ளே!

டாடா நெக்ஸான்

டாடா நெக்ஸான் காருக்கு ரூ.15,000 மதிப்புடைய சேமிப்பை பெற முடியும். பழைய காரை கொடுத்து புதிய டாடா நெக்ஸான் பெட்ரோல் மாடலை தேர்வு செய்வோருக்கு இந்த எக்ஸ்சேஞ்ச் போனஸ் மதிப்பு பெற முடியும். இந்த கார் பெட்ரோல் மட்டுமின்றி, டீசல் எஞ்சின் தேர்விலும் கிடைக்கிறது. ரூ.6.99 லட்சம் முதல் ரூ.12.70 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

டாடா கார்கள் மீது சிறப்பு சேமிப்புச் சலுகைகள்... விபரம் உள்ளே!

டாடா ஹாரியர்

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு ரூ.65,000 வரை சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.25,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ40,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும் பெற முடியும். டாடா ஹாரியர் எஸ்யூவியின் எக்ஸ்இசட் ப்ளஸ் , எக்ஸ்இசட்ஏ ப்ளஸ், கேமோ மற்றும் டார்க் எடிசன் உள்ளிட்ட விலை உயர்ந்த மாடல்களுக்கு விலையில் தள்ளுபடி இல்லை. ஆனால், ரூ.40,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையை பெற முடியும்.

டாடா கார்கள் மீது சிறப்பு சேமிப்புச் சலுகைகள்... விபரம் உள்ளே!

சலுகை வரம்பு காலம்

கடந்த 1ந் தேதி முதல் வரும் டிசம்பர் 31ந் தேதி வரை புதிய டாடா கார்களை புக்கிங் செய்பவர்களுக்கு இந்த சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். இதுபற்றிய விரிவான விபரங்களை அருகாமையிலுள்ள டாடா டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, December 4, 2020, 16:21 [IST]
English summary
Tata Motors has announced year-end discounts, benefits and special offers for December 2020. The year-end discounts and benefits are offered on select models of the brand's 'Forever Range'. This includes the Tiago, Tigor, Nexon and the Harrier.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+