விஜயவாடா மாநகராட்சிக்கு 25 ஏஸ் மினி டிரக்கை டெலிவரி கொடுத்த டாடா... இது எதற்கு பயன்படபோகுது தெரியுமா

விஜயவாடா மாநகராட்சிக்கு 25 டாடா ஏஸ் மினி டிரக்கை டெலிவரி கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயவாடா மாநகராட்சிக்கு 25 ஏஸ் மினி டிரக்கை டெலிவரி கொடுத்த டாடா... இது எதற்கு பயன்படபோகுது தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மினி டிரக்குகளில் ஏஸ் மினி மாடலும் ஒன்றாகும். இதனை சரக்கு வானக பிரியர்கள் செல்லமாக குட்டி யானை என்று அழைத்து வருகின்றனர். இந்த வாகனத்தையே விஜயவாடா மாநகராட்சிக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயவாடா மாநகராட்சிக்கு 25 ஏஸ் மினி டிரக்கை டெலிவரி கொடுத்த டாடா... இது எதற்கு பயன்படபோகுது தெரியுமா?

மாநகராட்சியின் கழிவுகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்துவதற்காக இந்த வாகனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக 25 யூனிட்டுகள் விஜயவாடா நகராட்சிக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த ஏஸ் மினி டிரக்கில் ஜியோ-பொஷிஷனிங், பொது அறிவிப்பை வெளியிடுவதற்கான மைக் மற்றும் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கின்றன.

விஜயவாடா மாநகராட்சிக்கு 25 ஏஸ் மினி டிரக்கை டெலிவரி கொடுத்த டாடா... இது எதற்கு பயன்படபோகுது தெரியுமா?

அண்மையில், விஜயவாடா விடுத்த ஏலத்தில் வெற்றிப் பெற்றதை அடுத்து டாடா மோட்டார்ஸுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதனடிப்படையிலேயே 25 யூனிட் ஏஸ் மினி டிரக்குகளா டாடா மோட்டார்ஸ் வழங்கியிருக்கின்றது. மாநகராட்சியின் தேவைக்கேற்ப இந்த வாகனத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

விஜயவாடா மாநகராட்சிக்கு 25 ஏஸ் மினி டிரக்கை டெலிவரி கொடுத்த டாடா... இது எதற்கு பயன்படபோகுது தெரியுமா?

குறிப்பாக, கழிவுகளைச் சேகரிப்பதற்கு ஏற்ப உடற் கட்டுமானம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானம் 3 க்யூபிக் மீட்டர் அளவுடையதாகும். இதனை மூடுவதற்கு தனித்துவமான மூடி அமைப்பு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதனையே விஜயவாடா மாநகராட்சி நகரத்தில் இருக்கும் கழிவுகளை அகற்ற பயன்படுத்த இருக்கின்றது.

விஜயவாடா மாநகராட்சிக்கு 25 ஏஸ் மினி டிரக்கை டெலிவரி கொடுத்த டாடா... இது எதற்கு பயன்படபோகுது தெரியுமா?

டாடா நிறுவனத்தின் இந்த ஏஸ் மினி சிஎன்ஜி, டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவையனைத்துமே பிஎஸ்-6 தரத்திலானதாகும். இதுமட்டுமின்றி, 2, 2.6, 3 மற்றும் 3.3 க்யூபிக் மெட்ரிக் ஆகிய அளவுள்ள பாடிகளிலும் இது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

விஜயவாடா மாநகராட்சிக்கு 25 ஏஸ் மினி டிரக்கை டெலிவரி கொடுத்த டாடா... இது எதற்கு பயன்படபோகுது தெரியுமா?

இதில், மூடி வைத்தது மற்றும் திறந்த அமைப்புடையது ஆகிய தேர்வுகளும் வழங்கப்படுகின்றது. இத்தகைய வசதிகளை டாடா ஏஸ் மினி கொண்டிருப்பதே, விஜயவாடா மாநகராட்சி இந்த வாகனத்தைத் தேர்வு செய்ய காரணமாக அமைந்திருக்கின்றது. இதற்கான செலவு பற்றிய தகவல் வெளியாகவில்லை. ஆனால், தற்போது விஜயவாடா மாநகராட்சிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மினி டிரக் சிஎன்ஜி தரத்திலானது என கூறப்படுகின்றது.

விஜயவாடா மாநகராட்சிக்கு 25 ஏஸ் மினி டிரக்கை டெலிவரி கொடுத்த டாடா... இது எதற்கு பயன்படபோகுது தெரியுமா?

இதுகுறித்து டாடா மோட்டார்ஸின் துணைத் தலைவர் வினய் பதக் கூறியதாவது, "நகரத்தில் தேங்கியிருக்கும் திடக்கழிவுகளை அகற்றுவதில் விஜயவாடா மாநகராட்சியுடன் இணைந்து எங்கள் தயாரிப்பு செயல்பட இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது" என்றார்.

விஜயவாடா மாநகராட்சிக்கு 25 ஏஸ் மினி டிரக்கை டெலிவரி கொடுத்த டாடா... இது எதற்கு பயன்படபோகுது தெரியுமா?

அண்மையில் ரேஷன் பொருட்களை மக்களின் வீட்டிற்கே தேடிச் சென்று விநியோகிக்கும் வகையில் 6,413 யூனிட்டுகள் டாடா ஏஸ் கோல்டிற்கான ஆர்டரை ஆந்திர அரசு கொடுத்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே முன்னதாக கொடுக்கப்பட்ட ஆர்டரின் போரில் தற்போது 25 யூனிட் ஏஸ் மினி டிரக்குகள் கழிவுகளை அகற்றும் பணிக்காக டாடா மோட்டார்ஸ் வழங்கியிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tata Delivers Ace Mini-Trucks To Vijayawada. Read In Tamil.
Story first published: Tuesday, November 10, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X