செம ஹிட் அடிக்கப்போகுது... டாடா கிராவிட்டாஸ் கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்...

டாடா கிராவிட்டாஸ் கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செம ஹிட் அடிக்கப்போகுது... டாடா கிராவிட்டாஸ் கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்...

ஒவ்வொரு ஆண்டு ஜனவரி மாதமும் பொங்கல் பண்டிகையை ஒட்டி புதிய கார்களை விற்பனை அறிமுகம் செய்வதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாடிக்கையாக்கி கொண்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது. நடப்பு 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டு புதிய கார்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை டாடா மோட்டார்ஸ் உற்சாகப்படுத்தியது.

செம ஹிட் அடிக்கப்போகுது... டாடா கிராவிட்டாஸ் கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்...

அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மற்றும் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய இரண்டு கார்களும்தான் நடப்பாண்டு ஜனவரி மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கார்கள். இந்த வரிசையில் 2021ம் ஆண்டு ஜனவரி மாதமும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து புதிய கார் ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செம ஹிட் அடிக்கப்போகுது... டாடா கிராவிட்டாஸ் கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்...

இம்முறை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள கார் கிராவிட்டாஸ். 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் டாடா கிராவிட்டாஸ் காரின் உற்பத்தி தொடங்கப்படலாம் எனவும், ஜனவரி இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் எனவும் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது.

செம ஹிட் அடிக்கப்போகுது... டாடா கிராவிட்டாஸ் கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்...

இந்த தகவலை டாடா இன்னும் உறுதி செய்யவில்லை என்றாலும், வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் 7 சீட்டர் வெர்ஷன்தான் கிராவிட்டாஸ் என்பதை பல செய்திகளில் கூறியுள்ளோம். இந்த புதிய கார் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களை இந்த செய்தியில் தெரிவித்துள்ளோம்.

செம ஹிட் அடிக்கப்போகுது... டாடா கிராவிட்டாஸ் கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்...

7 இருக்கைகள்!

மூன்றாவது வரிசை இருக்கைகள் வழங்கப்படுவதால், டாடா ஹாரியர் உடன் ஒப்பிடும்போது கிராவிட்டாஸ் காரில் கூடுதலாக இரண்டு பேர் பயணம் செய்ய முடியும். எனவே பெரிய குடும்பங்களின் பயன்பாட்டிற்கு கார் வாங்குபவர்களை டாடா கிராவிட்டாஸ் ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர இது வழிவகுக்கலாம்.

செம ஹிட் அடிக்கப்போகுது... டாடா கிராவிட்டாஸ் கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்...

கார் பெருசு!

டாடா ஹாரியர் எஸ்யூவி உடன் ஒப்பிடும்போது டாடா கிராவிட்டாஸ் நீளமானது மற்றும் உயரமானது. ஆனால் டாடா ஹாரியர் எஸ்யூவி மற்றும் கிராவிட்டாஸ் ஆகிய இரண்டு கார்களின் வீல் பேஸ் நீளமும் ஒன்றுதான். அத்துடன் இந்த இரண்டு டாடா கார்களும் ஒமேகா பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்படுகின்றன.

செம ஹிட் அடிக்கப்போகுது... டாடா கிராவிட்டாஸ் கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்...

லுக்!

டாடா ஹாரியர் எஸ்யூவி மற்றும் கிராவிட்டாஸ் ஆகிய இரண்டு கார்களும் இம்பேக்ட் 2.0 டிசைன் மொழியின் அடிப்படையில் வடிவமைக்கப்படுகின்றன. இந்த 2 கார்களின் தோற்றமும் ஒரு சில நுட்பமான மாற்றங்களை தவிர கிட்டத்தட்ட ஒன்று போலவேதான் இருக்கும். ஆனால் ஹாரியர் உடன் ஒப்பிடும்போது கிராவிட்டாஸின் பின்பகுதியில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும்.

செம ஹிட் அடிக்கப்போகுது... டாடா கிராவிட்டாஸ் கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்...

இன்ஜின்!

டாடா ஹாரியர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதே இன்ஜின் தேர்வுதான் டாடா கிராவிட்டாஸ் காரிலும் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டாடா கிராவிட்டாஸ் காரில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படலாம்.

செம ஹிட் அடிக்கப்போகுது... டாடா கிராவிட்டாஸ் கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்...

எதிர்பார்க்கப்படும் விலை!

டாடா கிராவிட்டாஸ் கார் 14.50 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 18 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

செம ஹிட் அடிக்கப்போகுது... டாடா கிராவிட்டாஸ் கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்...

போட்டியாளர்கள்!

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் ஹூண்டாய் கிரெட்டா காரின் 7 சீட்டர் வெர்ஷன் ஆகிய கார்களுடன் டாடா கிராவிட்டாஸ் போட்டியிடும். எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் தற்போது 6 இருக்கைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இதன் 7 சீட்டர் மாடல் வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 22, 2020, 19:28 [IST]
English summary
Tata Gravitas: 6 Things You Need To Know. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+