Just In
- 3 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 4 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 5 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 6 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய டாடா க்ராவிட்டாஸ் 7 சீட்டர் எஸ்யூவியின் 7 முக்கிய அம்சங்கள்!
டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் வெளியீட்டு தேதி உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி குறித்த 7 முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எஸ்யூவிகளை வரிசை கட்டும் டாடா
எஸ்யூவி மார்க்கெட்டில் வலுவான வர்த்தகத்தை எட்டுவதற்கான முயற்சியில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது. நெக்ஸான், ஹாரியர் எஸ்யூவி மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வலுவான வர்த்தக பங்களிப்பை கொடுத்து வருகின்றன.

வெளியீட்டு தேதி
இந்த வரிசையில், அடுத்ததாக ஹாரியர் அடிப்படையிலான 7 சீட்டர் எஸ்யூவி மாடலை டாடா மோட்டார்ஸ் அடுத்த மாதம் 26ந் தேதி வெளியிட உள்ளது. க்ராவிட்டாஸ் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரிமாணம்
டாடா ஹாரியர் எஸ்யூவியைவிட நீளம், உயரத்தில் புதிய க்ராவிட்டாஸ் எஸ்யூவி பெரிதாக மாற்றப்பட்டுள்ளது. புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி 4,661 மிமீ நீளமும், 1,894 மிமீ அகலமும், 1786 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. அதாவது, ஹாரியர் எஸ்யூவியைவிட 63 மிமீ கூடுதல் நீளமும், 80 மிமீ கூடுதல் உயரமும் பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், வீல் பேஸ் நீளத்தில் மாறுதல் செய்யப்படவில்லை. இந்த புதிய எஸ்யூவி 2,741 மிமீ நீளம் கொண்டதாக இருக்கிறது.

டிசைன்
முகப்பு ஹாரியர் எஸ்யூவியின் டிசைன் அம்சங்களை பெற்றிருந்தாலும், பக்கவாட்டில் பி பில்லரில் இருந்து டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கூரை அமைப்பிலும் வேறுபடுகிறது. புதிய அலாய் வீல்கள் மற்றும் புதிய வெளிப்புற வண்ணத் தேர்வுகள் மூலமாக ஹாரியர் எஸ்யூவியில் இருந்து வேறுபடும். டெயில் லைட்டுகள் மற்றும் பின்புற டிசைன் அம்சங்கள் ஹாரியர் எஸ்யூவியை பிரதிபலிக்கும்.

எஞ்சின் தேர்வு
டாடா ஹாரியர் எஸ்யூவியில் இடம்பெறும் அதே 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் க்ராவிட்டாஸ் எஸ்யூவியிலும் இடம்பெறுகிறது. ஆனால், இதன் சக்தியை வெளிப்படுத்தும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. க்ராவிட்டாஸ் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 170 எச்பி பவரை வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது.

எதிர்பார்க்கும் மைலேஜ்
டாடா ஹாரியர் எஸ்யூவியின் மேனுவல் மாடல் லிட்டருக்கு 16.35 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் 14.63 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஹாரியர் எஸ்யூவி 5 சீட்டர் மாடலாக இருக்கும் நிலையில், அதனைவிட அதிக இருக்கை வசதி கொண்ட க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் மைலேஜ் ஹாரியரைவிட சற்றே குறைவாக இருக்கும்.

கட்டமைப்புக் கொள்கை
புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியும் டாடா ஒமேகா கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மிகவும் பாதுகாப்பான எஸ்யூவி மாடலாக நிலைநிறுத்துவதற்கான முனைப்பில் டாடா மோட்டார்ஸ் உள்ளது.

எதிர்பார்க்கும் விலை
புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி ரூ.15 லட்சம் முதலான ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி500, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் ஆகிய மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.