Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 6 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 8 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப்போனது... எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா?
டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் அறிமுகம் தள்ளிப்போயுள்ளது. இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி எப்போது விற்பனைக்கு வரும்? என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் க்ராவிட்டாஸ் எஸ்யூவியை களமிறக்குவதற்கான பணிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நீண்ட காலமாக செய்து கொண்டுள்ளது. சமீபத்தில் நிறைவடைந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு, புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது நடக்கவில்லை. அதற்கு மாறாக இந்த புதிய எஸ்யூவியின் அறிமுகம் அடுத்த ஆண்டு தொடக்கத்திற்கு தள்ளி போயுள்ளது. இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து வெளிவரவுள்ள இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் விற்பனைக்கு வரும் என ஆட்டோகார் இந்தியா தளம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதன்மையான மாடலாக க்ராவிட்டாஸ் திகழும். டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு மேலாக க்ராவிட்டாஸ் நிலைநிறுத்தப்படும். கோவிட்-19 பிரச்னை மற்றும் அதன் விளைவாக அமலுக்கு கொண்டு வரப்பட்ட ஊரடங்கு ஆகிய காரணங்களாலேயே டாடா க்ராவிட்டாஸ் அறிமுகம் தள்ளி போய் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 டிசைன், பெர்ஃபார்மென்ஸ் எப்படி இருக்கு? வீடியோ பாருங்க...
2020ம் ஆண்டிற்கான டாடா நிறுவனத்தின் திட்டங்களில், இந்த பிரச்னைகள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஊரடங்கு காரணமாக வினியோக சங்கிலியில் இடையூறு ஏற்பட்டது. இதன் காரணமாக க்ராவிட்டாஸின் அறிமுகத்தை 2021ம் ஆண்டுக்கு தள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆளாகியுள்ளது.

நாம் ஏற்கனவே பல செய்திகளில் குறிப்பிட்டுள்ளபடி, டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷன்தான் க்ராவிட்டாஸ் எஸ்யூவி. டாடா ஹாரியர் எஸ்யூவியை விட, புதிய க்ராவிட்டாஸ் 7 சீட்டர் எஸ்யூவி 63 மிமீ நீளமாகவும், 80 மிமீ உயரமாகவும் இருக்கும். எனினும் வீல் பேஸ் அதே 2741 மிமீ என்ற அளவில் தக்க வைக்கப்பட்டிருக்கும்.

பரிமாணங்களில் ஹாரியரை விட பெரிதுபடுத்தப்பட்டிருப்பதால், டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் விற்பனைக்கு வரவுள்ளது. டிசைனை பொறுத்தவரை, பி-பில்லர் வரை, டாடாட ஹாரியரை போன்றேதான் டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியும் இருக்கும். எனினும் பின் பகுதியில் மாற்றங்கள் இருக்கும்.

டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் பின் பகுதியில் செய்யப்படும் சிறிய மாற்றங்கள், இரண்டு கார்களையும் வேறுபடுத்தி பார்ப்பதற்கு உதவி செய்யும். ஆனால் டாடா ஹாரியரில் உள்ள அதே 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுதான் டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியிலும் வழங்கப்படும். அத்துடன் ஹாரியரை போலவே, க்ராவிட்டாஸ் எஸ்யூவியிலும் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 172 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும்தான் வெளிப்படுத்தும்.

6 ஸ்பீடு மேனுவல் அல்லது டார்க்-கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. க்ராவிட்டாஸ் 7 சீட்டர் எஸ்யூவி கார் தவிர இன்னும் பல்வேறு புதிய தயாரிப்புகளையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது.