புதிய டாடா க்ராவிட்டாஸ் 7 சீட்டர் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - அதிகாரப்பூர்வத் தகவல் வெளியானது!

புதிய டாடா க்ராவிட்டாஸ் 7 சீட்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகி இருக்கிறது. விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய டாடா க்ராவிட்டாஸ் 7 சீட்டர் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் டாடா ஹாரியர் எஸ்யூவி மிக முக்கிய தேர்வாக மாறி இருக்கிறது. கடந்த சில மாதங்களாக டாடா ஹாரியர் எஸ்யூவியின் விற்பனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலையும் டாடா மோட்டார்ஸ் களமிறக்க உள்ளது.

புதிய டாடா க்ராவிட்டாஸ் 7 சீட்டர் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது!

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் க்ராவிட்டாஸ் என்ற பெயரில் இந்த 7 சீட்டர் எஸ்யூவி மாடலை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த நிலையில், நடப்பு ஆண்டின் கடைசி காலாண்டில், அLாவது வரும் ஜனவரி - மார்ச் காலக்கட்டத்தில் க்ராவிட்டாஸ் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

புதிய டாடா க்ராவிட்டாஸ் 7 சீட்டர் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது!

இந்த எஸ்யூவியில் 3 வரிசைகள் கொண்ட இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கும். உட்புறத்தில் மூன்றாவது வரிசை இருக்கை அமைப்பிற்காக சில மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், பக்கவாட்டு மற்றும் பின்புற டிசைன் வேறுபாடுகள் உள்ளன.

புதிய டாடா க்ராவிட்டாஸ் 7 சீட்டர் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது!

லேண்ட்ரோவர் டி8 கட்டமைப்புக் கொள்கையின் அடிப்படையிலான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒமேகா கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், ஓட்டுதல் தரம், கையாளுமை போன்ற அம்சங்களில் சிறப்பானதாக எதிர்பார்க்கலாம்.

புதிய டாடா க்ராவிட்டாஸ் 7 சீட்டர் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது!

மேலும், ஹாரியர் எஸ்யூவியைவிட 63 மிமீ கூடுதல் நீளமும், 80 மிமீ கூடுதல் உயரமும் கொண்டதாக இருக்கிறது. இதனால், மூன்றாவது வரிசை எளிதாக அமைக்கும் வாய்ப்பு கிட்டி இருக்கிறது.

புதிய டாடா க்ராவிட்டாஸ் 7 சீட்டர் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது!

இந்த எஸ்யூவியில் 3 வரிசைகள் கொண்ட இருக்கை அமைப்புடன் வர இருக்கிறது. நடுவரிசையில் கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட்டு இருக்கும். அடிக்கடி நீண்டதூரம் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த நடுவரிசை இருக்கை மிகவும் சவுகரியமாக இருக்கும்.

புதிய டாடா க்ராவிட்டாஸ் 7 சீட்டர் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது!

புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியில் ஃப்ளோட்டிங் தொடுதிரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் சிஸ்டம், அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய டாடா க்ராவிட்டாஸ் 7 சீட்டர் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது!

புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்ீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாடா க்ராவிட்டாஸ் 7 சீட்டர் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது!

மஹிந்திரா எக்ஸ்யூவி500, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இதன் ரகத்தில் மிக சவாலான விலையில் இந்த புதிய மாடல் எதிர்பார்க்கப்படுவதால், வாடிக்கையாளர் மத்தியில் ஆவல் எழுந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 10, 2020, 10:18 [IST]
English summary
Tata Motors is planning to launch new Gravitas SUV in India by early next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+