2 விதமான இருக்கை அமைப்புகளில் வருகிறது புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி!

டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி இரண்டு இருக்கை அமைப்பு கொண்ட மாடல்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் இருக்கை அமைப்பு விபரம் வெளியானது!

கடந்த 2019ம் ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் பஸ்ஸார்டு என்ற 7 சீட்டர் எஸ்யூவி மாடலை டாடா மோட்டார்ஸ் பொது பார்வைக்கு வைத்திருந்தது. இந்த எஸ்யூவியானது க்ராவிட்டாஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிலை மாடலாக உருப்பெற்றது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் காலாண்டு காலத்தில் புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் இருக்கை அமைப்பு விபரம் வெளியானது!

இந்த நிலையில், டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் இருக்கை அமைப்பு விபரம் குறித்த தகவலை காடிவாடி தளம் வெளியிட்டுள்ளது. இதன்படி, டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் வர இருப்பதாக தெரிகிறது.

டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் இருக்கை அமைப்பு விபரம் வெளியானது!

அதாவது, நேரடி போட்டியாளரான எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியை எதிர்கொள்ளும் விதத்தில், இந்த யுக்தியை டாடா மோட்டார்ஸ் பின்பற்ற இருப்பதாக தெரிகிறது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் மாடலில் கிடைத்து வரும் நிலையில், ஜனவரியில் 7 சீட்டர் மாடலும் வர இருக்கிறது.

டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் இருக்கை அமைப்பு விபரம் வெளியானது!

எனவே, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வை வழங்கும் விதத்தில் க்ராவிட்டாஸ் எஸ்யூவியில் இரண்டு இருக்கை அமைப்புடைய மாடல்கள் தேர்வுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.

டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் இருக்கை அமைப்பு விபரம் வெளியானது!

டாடா க்ராவிட்டாஸ் 6 சீட்டர் மாடலில் நடு வரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகளும், 7 சீட்டர் மாடலில் பென்ச் இருக்கையும் அமைப்பும் இடம்பெற்றிருக்கும். டாடா ஹாரியர் எஸ்யூவியின் அடிப்படையிலான 7 சீட்டர் மாடலாக இருந்தாலும், பக்கவாட்டிலும், பின்புறத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் இந்த எஸ்யூவி வர இருக்கிறது.

டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் இருக்கை அமைப்பு விபரம் வெளியானது!

மூன்றாவது வரிசை இருக்கையை வழங்கும் விதத்தில் கூடுதல் நீளம் கொண்டதாக மாற்றங்கள் செயய்ப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஹெக்ஸா எம்பிவி காரை 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் டாடா மோட்டார்ஸ் வழங்கி வந்தது.

டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் இருக்கை அமைப்பு விபரம் வெளியானது!

இந்த நிலையில், க்ராவிட்டாஸ் எஸ்யூவியிலும் இரண்டு இருக்கை அமைப்புடைய மாடல்கள் வர இருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களின் விருப்பதை பூர்த்தி செய்யும் விதமாக அமையும்.

டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் இருக்கை அமைப்பு விபரம் வெளியானது!

டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
According to the report, Tata Gravitas is likely to get 6 and 7 seater configurations.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X