புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி எப்போது அறிமுகம்?

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி அறிமுகம் செய்யப்படுவது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி எப்போது அறிமுகம்?

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹாரியர் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட மாடல்களால் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்த நிலையில், ஹாரியர் அடிப்படையில் 7 சீட்டர் மாடலாக டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி எப்போது அறிமுகம்?

அண்மையில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மாடல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இது 7 சீட்டர் மாடலாக வருவதால் வாடிக்கையாளர் மத்தியிலும் பெரும் ஆவல் இருந்து வருகிறது.

புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி எப்போது அறிமுகம்?

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஒமேகா பிளாட்ஃபார்மில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி எப்போது அறிமுகம்?

இந்த கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2.0 டிசைன் கொள்கையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. டாடா ஹாரியர் மாடலிலிருந்து இதனை பின்புற அமைப்பு வேறுபடுத்துகிறது.

புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி எப்போது அறிமுகம்?

இந்த காரில் 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், 9 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, அட்ஜெஸ்ட் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி எப்போது அறிமுகம்?

நடுவரிசையில் கேப்டன் எனப்படும் வசதியான இரண்டு தனி இருக்கைகள் இடம்பெற்றிருக்கும். இந்த காரின் பின் வரிசை இருக்கையை மடக்கி வைத்து பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை அதிகரித்துக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி எப்போது அறிமுகம்?

டாடா ஹாரியர் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த காரிலும் இடம்பெற்றிருக்கும். இந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 167 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது.

புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி எப்போது அறிமுகம்?

புதிதய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 26, 2020, 10:47 [IST]
English summary
According to report, Tata Motors is planning to launch Gravitas SUV in India by August, 2020.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+