Just In
- 1 min ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 54 min ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 1 hr ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
- 4 hrs ago
ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்!! கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன
Don't Miss!
- News
தமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா? வேல்முருகன் கடும் கண்டனம்
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரேஞ்ச் ரோவருக்கு இணையான அம்சத்துடன் வரும் டாடா கிராவிட்டாஸ்... மீண்டும் சோதனை ஓட்டம்...
டாடா மோட்டார்ஸின் புதிய தயாரிப்பான கிராவிட்டாஸ் மீண்டும் ஒருமுறை அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

நீட்டிக்கப்பட்ட எஸ்யூவியாக உருவாகப்பட்டுள்ள டாடா கிராவிட்டாஸை இந்த வருட இறுதிக்குள்ளாக சந்தையில் தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்திவிடும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த எஸ்யூவி கார் இந்திய சாலைகளில் தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வகையில் தற்போதும் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த காரின் ஸ்பை படங்கள் ஆட்டோவீல்ஸ் இந்தியா என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படங்களில் கார் முழுவதும் மறைக்கப்பட்டு இருந்தாலும், புதிய 9-ஸ்போக் அலாய் சக்கரங்களை நம்மால் பார்க்க முடிகிறது.

புதிய 9-ஸ்போக் அலாய் சக்கரங்கள் ப்ரீமியம் உணர்விற்காக 18 இன்ச் அளவில் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் இந்த சக்கர டிசைன் லக்சரி ரக காரான ரேஞ்ச் ரோவரில் இருந்து எடுக்கப்பட்டு பொருத்தப்பட்டதுபோல் உள்ளது எனவும் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் ரேஞ்ச் ரோவரில் 10-ஸ்போக் அலாய் சக்கரங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முந்தைய சோதனை ஓட்டங்களில் டாடா கிராவிட்டஸ் 5-ஸ்போக் மற்றும் இரட்டை நிறத்தில் 6-ஸ்போக் என வெவ்வேறு விதமான அலாய் சக்கரங்களின் டிசைனை கொண்டிருந்தது. டிசைன் மட்டுமின்றி சக்கரங்களின் அளவுகளும் 16 இன்ச்சில் இருந்து 18 இன்ச் வரையில் இருந்தன.

இதனால் இத்தகைய அலாய் சக்கரங்கள் இந்த எஸ்யூவி காருக்கு இந்தியாவில் கூடுதல் ஆக்ஸஸரீ தேர்வுகளாக வழங்கப்படலாம். இந்த புதிய அலாய் சக்கரங்களை தவிர்த்து தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்களின் மூலம் வேறெந்த புதிய அம்சத்தையும் சோதனை காரில் கண்டறிய முடியவில்லை.

ஏனெனில் மற்ற பாகங்கள் அனைத்தும் முந்தைய சோதனை கிராவிட்டாஸ் காரை தான் கிட்டத்தட்ட ஒத்து காணப்படுகின்றன. விற்பனையில் உள்ள ஐந்து-இருக்கை டாடா ஹெரியரின் ஏழு-இருக்கை வெர்சனாக கிராவிட்டாஸ் விற்பனை வருவதால் ஹெரியரில் இருந்துதான் பிளவுப்பட்ட ஹெட்லேம்ப் அமைப்பு உள்பட பெரும்பான்மையான பாகங்களை இந்த கார் பெற்றுள்ளது.

இருப்பினும் மூன்றாவது இருக்கை வரிசைக்காக வழங்கப்படும் தட்டையான மேற்கூரையால் கிராவிட்டாஸின் பின்பக்கத்தை சற்று வேறுப்பட்டதாக எதிர்பார்க்காம். ஏனெனில் ஹெரியரில் மேற்கூரை பின்பக்கத்தில் சரிவது போல் வழங்கப்படுகிறது.

இதன் காரணமாக கிராவிட்டாஸில் மூன்றாவது இருக்கை பயணிகளுக்கு தாராளமாக இடம் இருக்கும். மேலும் மூன்றாவது இருக்கை வரிசையினால் காரின் நீளமும் 62மிமீ அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. மற்றப்படி என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளில் ஹெரியருக்கும் கிராவிட்டாஸுக்கும் எந்த வித்தியாசமும் இருக்க வாய்ப்பில்லை.

இதனால் ஹெரியரில் தற்சமயம் வழங்கப்படும் பிஎஸ்6 இணக்கமான 2.0 லிட்டர், 4-சிலிண்டர், ‘க்ரையோடெக்' டீசல் என்ஜினை தான் புதிய டாடா கிராவிட்டாஸும் பெற்றுவரவுள்ளது. இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 168 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை ஹெரியரில் வெளிப்படுத்துகிறது. ஆனால் கிராவிட்டாஸில் கூடுதல் எடைக்காக சற்று கூடுதலான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இந்த என்ஜின் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த டீசல் என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அறிமுகத்திற்கு பிறகு டாடா கிராவிட்டாஸிற்கு விற்பனையில் போட்டியினை அளிக்க மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் தயாராகவுள்ளன.