19மாதங்களுக்கு பிறகு நிகழ்ந்த அதிசயம்! இதுக்குதான் டாடாவை எல்லோரும் இந்தியாவின் ஜாம்பவான் என்கிறோம்!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் டாடா நிறுவனத்தின் பிரபல தயாரிப்பு ஒன்று இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற தொடங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

19 மாதங்களுக்கு பிறகு நிகழ்ந்த அதிசயம்... இதுக்குதான் டாடாவை எல்லோரும் இந்தியாவின் ஜாம்பவான் என்கிறோம்...

நாட்டின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் வெகு நீண்ட காலத்திற்கு பிறகு இப்போதே சந்தையில் நல்ல வளர்ச்சியைக் காணத் தொடங்கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் மிக மெதுவாகவும், சீராகவும் டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் விற்பனை முன்னேற்றத்தைக் காணத் தொடங்கியுள்ளது. டாடா நிறுவனம் இக்காரை கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தியது.

19 மாதங்களுக்கு பிறகு நிகழ்ந்த அதிசயம்... இதுக்குதான் டாடாவை எல்லோரும் இந்தியாவின் ஜாம்பவான் என்கிறோம்...

அறிமுகப்படுத்தப்பட்ட புதிதில் இக்காருக்கு நல்ல விற்பனை டிமாண்ட் கிடைத்தது. 2019 மார்ச் மாதத்தில் மட்டும் 2,500 யூனிட்டுகளை விற்பனைச் செய்து கெத்து காட்டியது. ஆனால், அடுத்தடுத்த மாதங்களில் இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறியது. அதாவது ஜீன் மாதம் எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் கார் அறிமுகத்திற்கு பின்னர் டாடா ஹாரியர் தொடர் விற்பனைச் சரிவைச் சந்தித்தது.

19 மாதங்களுக்கு பிறகு நிகழ்ந்த அதிசயம்... இதுக்குதான் டாடாவை எல்லோரும் இந்தியாவின் ஜாம்பவான் என்கிறோம்...

இந்த நிலை கொரோனா காலத்தில் மேலும் மிக மோசமான நிலையாக உருவெடுத்தது. இதனால் தொடர்ச்சியாக 19 மாதங்கள் வரை விற்பனை வளர்ச்சி என்ற ஒன்றை டாடா ஹாரியர் சந்திக்காமலே இருந்தது. இந்நிலையில்தான் டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் விற்பனை எண்ணிக்கைக் கணிசமாக உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

19 மாதங்களுக்கு பிறகு நிகழ்ந்த அதிசயம்... இதுக்குதான் டாடாவை எல்லோரும் இந்தியாவின் ஜாம்பவான் என்கிறோம்...

இதற்கு முன்னதாக ஹாரியரின் பக்கம் மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக அக்காரை டாடா நிறுவனம் அதிக சிறப்பு மிக்க வாகனமாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டது. இதனடிப்படையில், அதிக பவர்ஃபுல் எஞ்ஜின் மற்றும் சிறப்பம்சங்கள் கொண்ட காராக 2020 ஜனவரியில் அது களமிறக்கியது. ஆனால், இதற்கும் எந்த ரெஸ்பான்ஸும் கிடைக்காத நிலையேக் காணப்பட்டது.

19 மாதங்களுக்கு பிறகு நிகழ்ந்த அதிசயம்... இதுக்குதான் டாடாவை எல்லோரும் இந்தியாவின் ஜாம்பவான் என்கிறோம்...

அதற்குள்ளாக கொரோனா வைரசும் தனது பங்காக ஒட்டுமொத்த இந்திய வாகனச் சந்தையையுமே ஒரு கை பார்த்துவிட்டு சென்றுவிட்டது. இந்த நிலையிலேயே தற்போதைய விழாக்காலம் டாடா நிறுவனத்திற்குக் கை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. விற்பனை மட்டுமின்றி டாடா ஹாரியரின் பங்குகளும் கணிசமாக வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் டாடா நிறுவனம் இந்தியா கார் சந்தையின் ஜாம்பவான் என்பதை நிரூபித்துள்ளது.

19 மாதங்களுக்கு பிறகு நிகழ்ந்த அதிசயம்... இதுக்குதான் டாடாவை எல்லோரும் இந்தியாவின் ஜாம்பவான் என்கிறோம்...

2020 அக்டோபரில் ஒட்டுமொத்தமாக டாடா ஹாரியர் எஸ்யூவி 2,398 யூனிட்டுகளை விற்பனைச் செய்து நாட்டின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்கள் சந்தையில் 2ம் இடத்தை பிடித்தது. முதல் இடத்தை எம்ஜி ஹெக்டார் பிடித்துள்ளது. 19 மாதங்களுக்கு பிறகு இத்தகைய விற்பனையை இப்போதே டாடா ஹாரியர் பெறுகின்றது. எனவே டாடா தற்போது புதிய உற்சகத்தில் திகைத்திருக்கின்றது.

19 மாதங்களுக்கு பிறகு நிகழ்ந்த அதிசயம்... இதுக்குதான் டாடாவை எல்லோரும் இந்தியாவின் ஜாம்பவான் என்கிறோம்...

இதுதவிர 12.59 சதவீதம் சந்தை பங்கையும் டாடா ஹாரியர் பெற்றிருக்கின்றது. இக்காரை தவிர வேறு எந்த காரும் இத்தகைய வளர்ச்சியை தற்போது பெறவில்லை. இதில், முதல் இடத்தைப் பிடித்திருக்கும் எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டார்கூட 4.23 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இதேபோன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி கார் 6.78 சதவீதம் சரிவையும், ஜீப் காம்பஸ் 1.57 சதவீதம் சரிவையும் சந்தித்திருக்கின்றன.

19 மாதங்களுக்கு பிறகு நிகழ்ந்த அதிசயம்... இதுக்குதான் டாடாவை எல்லோரும் இந்தியாவின் ஜாம்பவான் என்கிறோம்...

டாடா நிறுவனம் இக்காரை டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதனால்தான் இக்கார் அதன் போட்டியாளர்களுடன் மிகக் கடுமையாக போராடும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இதற்கு போட்டியாக சந்தையில் இருக்கும் பிற கார்கள் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரு தேர்வுகளையும் வழங்குகின்றன. இந்த நிலையால்தான் டாடா ஹாரியர் பின் தங்கியிருப்பதாக கருத்துகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

19 மாதங்களுக்கு பிறகு நிகழ்ந்த அதிசயம்... இதுக்குதான் டாடாவை எல்லோரும் இந்தியாவின் ஜாம்பவான் என்கிறோம்...

அதேசமயம், இருவிதமான தேர்வுகளையும் டாடா ஹாரியர் வழங்கினால் இதுவே நாட்டின் நம்பர் எஸ்யூவி காராக இருக்கும் என கூறப்படுகின்றது. ஏற்கனவே கூறியதைப் போல் கடந்த அக்டோபர் (2020) மாதம் டாடா ஹாரியர் 2,398 யூனிட்டுகளை விற்பனைச் செய்தே இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இதுவே கடந்த வருடத்தில் இந்த கார் வெறும் 1,258 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன.

19 மாதங்களுக்கு பிறகு நிகழ்ந்த அதிசயம்... இதுக்குதான் டாடாவை எல்லோரும் இந்தியாவின் ஜாம்பவான் என்கிறோம்...

தற்போதைய விற்பனை வளர்ச்சி 90.62 சதவீதம் ஆகும். இதேபோன்று, எம்ஜி ஹெக்டார் காரும் 2.52 சதவீதம் வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. அதாவது, 2019 அக்டோபரைக் காட்டிலும் நடப்பாண்டு அக்டோபரில் ஹெக்டார் கார் 89 யூனிட்டுகள் அதிகம் விற்பனையாகியிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 3,625 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன.

19 மாதங்களுக்கு பிறகு நிகழ்ந்த அதிசயம்... இதுக்குதான் டாடாவை எல்லோரும் இந்தியாவின் ஜாம்பவான் என்கிறோம்...

ஆனால், மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி500 26.78 சதவீதம் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அதாவது, 2020 அக்டோபரில் 1,009 யூனிட்டுகள் எக்ஸ்யூவி500 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருக்கின்றன. இதுகுறித்த தகவலை பட்டியலாக கீழே காணலாம்.

வரிசை மாடல் அக்டோபர்-20 அக்டோபர்-19 விற்பனை வளர்ச்சி (%)
1 எம்ஜி ஹெக்டர் 3,625 3,563 2.52
2 டாடா ஹாரியர் 2,398 1,258 90.62
3 மஹிந்திரா எக்ஸ்யூவி500 1,009 1,378 -26.78
4 ஜீப் காம்பஸ் 832 854 -2.58
19 மாதங்களுக்கு பிறகு நிகழ்ந்த அதிசயம்... இதுக்குதான் டாடாவை எல்லோரும் இந்தியாவின் ஜாம்பவான் என்கிறோம்...

இதேபோன்று இந்த எஸ்யூவி கார்கள் சந்தையில் என்ன பங்கீட்டைக் கொண்டிருக்கின்றன என்பதையும் பட்டியலாக கீழே காணலாம்.

வரிசை பங்கு சந்தை அக்டோபர்-20 அக்டோபர்-19 வித்தியாசம்
1 எம்ஜி ஹெக்டர் 46.1 50.33 -4.23
2 டாடா ஹாரியர் 30.49 17.9 12.59
3 மஹிந்திரா எக்ஸ்யூவி500 12.83 19.61 -6.78
4 ஜீப் காம்பஸ் 10.58 12.15 -1.57
Most Read Articles

English summary
Tata Harrier 2020 October Sales Report. Read In Tamil.
Story first published: Thursday, November 5, 2020, 14:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X