டாடா ஹாரியர் பிஎஸ்-6 ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது

பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ள டாடா ஹாரியர் பிஎஸ்-6 ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா ஹாரியர் பிஎஸ்-6 ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது

வரும் ஏப்ரல் 1 முதல் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதனையடுத்து, அனைத்து கார் நிறுவனங்களும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையாக எஞ்சின்களை மேம்படுத்தி கார்களை அறிமுகம் செய்து வருகின்றன.

டாடா ஹாரியர் பிஎஸ்-6 ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது

இந்த வரிசையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தி அறிமுகம் செய்து வருகின்றன. டியாகோ, டிகோர், நெக்ஸான் வரிசையில் ஹாரியர் எஸ்யூவியிலும் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருக்கிறது.

டாடா ஹாரியர் பிஎஸ்-6 ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது

டாடா ஹாரியர் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட ஆட்டோமேட்டிக் மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. ரூ.30,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்படுகிறது.

டாடா ஹாரியர் பிஎஸ்-6 ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது

நாளை துவங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய டாடா ஹாரியர் பிஎஸ்-6 ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஹாரியர் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டு வரும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

டாடா ஹாரியர் பிஎஸ்-6 ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது

ஆனால், இதன் முக்கிய அம்சமே, பிஎஸ்-6 மாடலில் இருக்கும் எஞ்சின் 170 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது, பிஎஸ்-4 எஞ்சினைவிட 30 பிஎஸ் பவரை கூடுதலாக வெளிப்படுத்தும் திறனுடன் வருகிறது.

டாடா ஹாரியர் பிஎஸ்-6 ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது

இதுதவிர்த்து, டாடா ஹாரியர் எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் வர இருக்கிறது.

டாடா ஹாரியர் பிஎஸ்-6 ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது

பனோரமிக் சன்ரூஃப், 6 விதமான நிலைகளில் மாற்றங்கள் செய்து கொள்வதற்கான 6 வே அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுனர் இருக்கை, உட்புறத்தில் இரவு நேரத்தில் விளக்கொளியில் கண் கூச்சத்தை தவிர்க்கும் பகல் இரவு ரியர் வியூ மிரர், 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஆகியவையும் புதிய அம்சங்களாக சேர்க்கப்பட்டு இருக்கும்.

டாடா ஹாரியர் பிஎஸ்-6 ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடலில் ஏற்கனவே வழங்கப்பட்ட வண்ணத் தேர்வுகள் தவிர்த்து புதிய சிவப்பு வண்ணத் தேர்விலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

டாடா ஹாரியர் பிஎஸ்-6 ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது

டாடா ஹாரியர் எஸ்யூவியில் புதிய எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் என்ற ஆகிய டாப் வேரியண்ட்டுகளில் கூடுதலாக பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கிடைக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 4, 2020, 16:47 [IST]
English summary
Tata Motors has commenced bookings for its Harrier BS-VI SUV in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+