சாஃபாரி பிரியர்களுக்காக டாடாவின் ஹெரியர் கேமோ கார்!! அதே பச்சை நிறத்தில் விற்பனைக்கு வந்தது

சில தினங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து டாடா ஹெரியர் கேமோ எடிசனின் புதிய தொலைக்காட்சி கமர்ஷியல் (டிவிசி) வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் காரை பற்றி தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

சாஃபாரி பிரியர்களுக்காக டாடாவின் ஹெரியர் கேமோ கார்!! அதே பச்சை நிறத்தில் விற்பனைக்கு வந்தது

ஹெரியருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இதனை இந்த தீபாவளி பண்டிகை காலத்தில் சரியாக உபயோகப்படுத்தி கொள்ளும் விதமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த காரில் புதிய வசதிகளையும், எடிசன்களையும் கொண்டுவரும் முனைப்புடன் உள்ளது.

சாஃபாரி பிரியர்களுக்காக டாடாவின் ஹெரியர் கேமோ கார்!! அதே பச்சை நிறத்தில் விற்பனைக்கு வந்தது

இந்த வகையில்தான் கடந்த வாரத்தில் புதிய நிறத்தில் ஹெரியர் கேமோ எடிசன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் இந்திய இராணுவத்திற்காக டாடா நிறுவனம் வழங்கிவரும் சாஃபாரி ஸ்ட்ரோமின் பச்சை நிறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் காரின் டிவிசி வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் ஆஃப்-ரோடு அட்வென்ஜெர் பயணங்களுக்கு ஹெரியர் கேமோ எடிசன் மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பதுபோல் காட்டப்பட்டுள்ளது. மேலும், ‘காடுகளின் புதிய அரசன்' என்ற வாசகமும் இந்த டிவிசி வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாஃபாரி பிரியர்களுக்காக டாடாவின் ஹெரியர் கேமோ கார்!! அதே பச்சை நிறத்தில் விற்பனைக்கு வந்தது

இந்த பச்சை நிறம் ஹெரியருக்கு முற்றிலும் புதியதாகும். இந்த நிறம், டாடா நெக்ஸானிற்கு வழங்கப்படும் பச்சை நிறத்துடன் கிட்டத்தட்ட ஒத்துப்போகிறது. ஆனால் நெக்ஸானில் ஜன்னல்களில் வெள்ளை நிற ஸ்ட்ரிப் வழங்கப்படுவது உண்டு. அது புதிய ஹெரியர் கேமோவில் இல்லை.

சாஃபாரி பிரியர்களுக்காக டாடாவின் ஹெரியர் கேமோ கார்!! அதே பச்சை நிறத்தில் விற்பனைக்கு வந்தது

இருப்பினும் நெக்ஸானை காட்டிலும் ஹெரியர் கேமோ கார் தான் பெரியளவில் டாடா சஃபாரி ஸ்ட்ரோம் இராணுவ காருடன் ஒத்த நிறத்தில் காட்சியளிக்கிறது என்பதை சொல்லியே ஆக வேண்டும். ஹெரியரில் வழங்கப்படும் க்ரோம் பாகங்கள் அனைத்தும், இந்த ஸ்பெஷல் எடிசனில் கருப்பு நிறத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

சாஃபாரி பிரியர்களுக்காக டாடாவின் ஹெரியர் கேமோ கார்!! அதே பச்சை நிறத்தில் விற்பனைக்கு வந்தது

இதன் காரணமாக 17 இன்ச் அலாய் சக்கரங்களும் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதுதான் காருக்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகிறது. உட்புற கேபின் வெளிப்புறத்திற்கு ஏற்ற விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதை இந்த ஸ்பெஷல் எடிசன் காரின் அறிமுகத்தின் போதே பார்த்திருந்தோம்.

சாஃபாரி பிரியர்களுக்காக டாடாவின் ஹெரியர் கேமோ கார்!! அதே பச்சை நிறத்தில் விற்பனைக்கு வந்தது

உள்ளே டேஸ்போர்டின் வடிவம் சற்று திருத்தியமைக்கப்பட்டு கருப்பு நிறத்திலும், இருக்கைகளில் கேமோ முத்திரையும் வழங்கப்பட்டுள்ளன. ஸ்டீல்த் மற்றும் ஸ்டீல்த்+ என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ள ஹெரியர் கேமோ எடிசனில் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.

சாஃபாரி பிரியர்களுக்காக டாடாவின் ஹெரியர் கேமோ கார்!! அதே பச்சை நிறத்தில் விற்பனைக்கு வந்தது

அதே 2.0 லிட்டர் க்றையோடெக் டீசல் என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் பெற்றுவந்துள்ள கேமோ எடிசனின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.16.50 லட்சத்தில் இருந்து ரூ.20.30 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Tata Harrier Camo Green Resembles Safari Indian Army Colour – New TVC
Story first published: Monday, November 9, 2020, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X