எம்ஜி ஹெக்டருடன் மோத ரெடியாகும் டாடா ஹெரியர்... பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் சோதனை...

2020ஆம் வருடம் முடிவதற்குள்ளாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து சந்தையில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படும் ஹெரியர் எஸ்யூவி மாடலின் புதிய பெட்ரோல் வேரியண்ட் கார் பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டப்போது கண்டறியப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டருடன் மோத ரெடியாகும் டாடா ஹெரியர்... பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் சோதனை...

டாடா நிறுவனத்தின் தனித்துவமான மாடலாக விளங்கும் ஹெரியர் எஸ்யூவி இதுவரை எந்த பெட்ரோல் என்ஜினையும் பெறவில்லை. இதனால் தான் இந்த வாய்ப்பை பயன்படுத்தும் விதமாக ஹெரியர் மாடலில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான பெட்ரோல் என்ஜினை கொண்டுவர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டருடன் மோத ரெடியாகும் டாடா ஹெரியர்... பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் சோதனை...

தற்போது இந்த எஸ்யூவி காரின் சோதனை புகைப்படங்களின் மூலம் சோதனையில் கார் மறைப்பு எதுவுமின்றியும், மாசு உமிழ்வை அளவிடும் கருவிகளுடனும் ஈடுப்படுத்தப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.

எம்ஜி ஹெக்டருடன் மோத ரெடியாகும் டாடா ஹெரியர்... பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் சோதனை...

இந்த எஸ்யூவி காரின் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்ட டீசல் வேரியண்ட் கார் அறிமுகத்திற்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது இதன் பெட்ரோல் வேரியண்ட் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டருடன் மோத ரெடியாகும் டாடா ஹெரியர்... பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் சோதனை...

ஹெரியர் மாடலையும் சேர்த்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான எஸ்யூவி ரக கார்களில் அதிக கொள்ளளவு பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுவதில்லை. நெக்ஸான் எஸ்யூவி மாடலில் மட்டும் தான் பெரிய அளவிலான பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

எம்ஜி ஹெக்டருடன் மோத ரெடியாகும் டாடா ஹெரியர்... பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் சோதனை...

நெக்ஸான் மாடலில் உள்ள 1.2 லிட்டர் மூன்று-சிலிண்டர் 'ரெவோட்ரான்' என்ஜின் 119 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதே என்ஜின் அமைப்பை பெறவுள்ள ஹெரியர் அல்லது ஹெக்ஸா மாடலில் இதன் ஆற்றல் அளவுகள் மேலே குறிப்பிட்டப்படியே இருந்தாலும், செயல்படுதிறன் சற்று குறைவாகவே இருக்கும்.

எம்ஜி ஹெக்டருடன் மோத ரெடியாகும் டாடா ஹெரியர்... பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் சோதனை...

இதற்கிடையில் ஹெரியர் எஸ்யூவி காரில் அதிக ஆற்றல் கொண்ட 4-சிலிண்டர் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. அதிகப்பட்சமாக 150 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தும் இந்த என்ஜின் டாடாவின் எஸ்யூவி வரிசை மாடல்களுக்கு போதுமானதாக இருக்கும்.

எம்ஜி ஹெக்டருடன் மோத ரெடியாகும் டாடா ஹெரியர்... பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் சோதனை...

கூடுதல் பெட்ரோல் என்ஜினை தவிர்த்து ஹெரியரின் இந்த பெட்ரோல் வேரியண்ட் காரின் டிசைன் மற்றும் தொழிற்நுட்ப வசதிகளில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இதனால் தான் இந்த சோதனை கார் எந்த மறைப்பாலும் மறைக்கப்படவில்லை.

எம்ஜி ஹெக்டருடன் மோத ரெடியாகும் டாடா ஹெரியர்... பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் சோதனை...

புதிய மாசு உமிழ்வு விதி இந்தியாவில் விரைவில் அமலப்படுத்தப்படவுள்ளதால் தற்போதைய ஹெரியர் டீசல் வேரியண்ட்டின் விற்பனை கணிசமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பெட்ரோல் ஹெரியர் மாடல் அறிமுகமான பிறகு இந்த எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

எம்ஜி ஹெக்டருடன் மோத ரெடியாகும் டாடா ஹெரியர்... பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் சோதனை...

இருப்பினும் ஹெரியர் மாடலின் மொத்த விற்பனை பல மடங்கு முன்னேற்றத்தை அடையும். இதற்கு சிறந்த உதாரணம் டாடா நெக்ஸான். நெக்ஸானின் 70 சதவீத விற்பனை எண்ணிக்கை அதன் பெட்ரோல் வேரியண்ட்டின் மூலமாக தான் கிடைக்கிறது.

எம்ஜி ஹெக்டருடன் மோத ரெடியாகும் டாடா ஹெரியர்... பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் சோதனை...

டாடா ஹெரியர் இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் எஸ்யுவி மாடலுடன் கடுமையாக போட்டியிட்டு வருகிறது. ஹெரியரின் பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட்டின் அறிமுகத்திற்கு பிறகு இந்த போட்டி இன்னும் விறுவிறுப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி ஹெக்டருடன் மோத ரெடியாகும் டாடா ஹெரியர்... பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் சோதனை...

ஒவ்வொரு மாதமும் 700 வரையிலான டாடா ஹெரியர் மாடல்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஹெரியர் எஸ்யூவி மாடலில் வழங்கப்படவுள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மிக விரைவில் டாடா நிறுவனத்தில் இருந்து வெளியாகவுள்ள கிராவிட்டாஸ் 7-இருக்கை எஸ்யூவி மாடலிலும் பொருத்தப்படவுள்ளது.

எம்ஜி ஹெக்டருடன் மோத ரெடியாகும் டாடா ஹெரியர்... பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் சோதனை...

ஹெரியரின் புதிய பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினை கொண்ட எம்ஜி ஹெக்டர், 1.4 லி பெட்ரோல் என்ஜினை கொண்டுள்ள ஜீப் காம்பஸ் மற்றும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினுடன் விரைவில் அறிமுகமாகவுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடலின் அடுத்த தலைமுறை காருடன் போட்டியிடவுள்ளது.

எம்ஜி ஹெக்டருடன் மோத ரெடியாகும் டாடா ஹெரியர்... பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் சோதனை...

டாடா நிறுவனம் ஹெரியர் எஸ்யூவி தயாரிப்பில் எந்தவொரு பின்வாங்கும் செயல்பாட்டையும் இதுவரை யோசிக்கவில்லை என்பது ஹெரியர் பெட்ரோல் வேரியண்ட்டின் இந்த சோதனை ஓட்டத்தின் மூலம் தெரிய வருகிறது.

எம்ஜி ஹெக்டருடன் மோத ரெடியாகும் டாடா ஹெரியர்... பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் சோதனை...

புதிய ஹெரியர் பெட்ரோல் காரின் எக்ஸ்ஷோரூம் விலை? மற்றும் நெக்ஸானில் பொருத்தப்பட்டிருந்த இந்த என்ஜின் இந்த காம்பெக்ட்-எஸ்யூவி மாடலில் எவ்வாறான ஆற்றல்களை வெளிப்படுத்தவுள்ளது? என்ற கேள்விகளுக்கான பதில்கள் விரைவில் வெளியே வரும்.

Source: Rushlane

Most Read Articles

English summary
Tata Harrier Petrol SUV Spied in White and Black Dual Tone. Expected to launch soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X