டாடா ஹாரியர் விலை கணிசமாக அதிகரிப்பு... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
டாடா ஹாரியர் எஸ்யூவியின் விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த ஆண்டு ஜனவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டாடா ஹாரியர் எஸ்யூவி மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக அமைந்தது. ரூ.12.69 லட்சம் என்ற மிக சவாலான விலையில் வந்ததால், ஆரம்பத்தில் விற்பனையிலும் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்தது. இந்த நிலையில், எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ் போன்ற புதிய ஸ்யூவி மாடல்களின் வரவால், டாடா ஹாரியர் எஸ்யூவி நெருக்கடியில் உள்ளது.

விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஓர் ஆண்டு நெருங்கும் நிலையில், ஹாரியர் உரிமையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளையும், திட்டங்களையும் சில தினங்களுக்கு முன்தான் டாடா மோட்டார்ஸ் அறிவித்தது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை தொடர்ந்து, ஹாரியர் எஸ்யூவி வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஏமாற்றமான செய்தியையும் கையுடன் சேர்த்து டாடா மோட்டார்ஸ் வழங்கி இருக்கிறது . ஆம், ஹாரியர் எஸ்யூவியின் விலை ரூ.43,000 அதிகரிக்கப்படுவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

அறிமுகம் செய்யப்பட்டு கடந்த ஓர் ஆண்டில் ஹாரியர் விலை இரண்டாவது முறையாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை ரூ.12.99 லட்சத்தில் கிடைத்து வந்த ஹாரியர் எஸ்யூவி தற்போது ரூ.13.42 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. டாப் வேரியண்ட் விலை ரூ.17.30 லட்சமாக உயர்ந்துள்ளது.
| Variants | New Price | Old Price |
| XE | Rs 13.43 Lakh | Rs 12.99 Lakh |
| XM | Rs 14.69 Lakh | Rs 14.25 Lakh |
| XT | Rs 15.89 Lakh | Rs 15.45 Lakh |
| XZ | Rs 17.19 Lakh | Rs 16.75 Lakh |
| XZ (DT) | Rs 17.30 Lakh | Rs 16.95 Lakh |
| XT (Dark) | Rs 16.00 Lakh | Rs 15.55 Lakh |
| XZ (Dark) | Rs 17.30 Lakh | Rs 16.85 Lakh |

டாடா ஹாரியர் எஸ்யூவி எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி மற்றும் எக்ஸ்டி ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. தவிரவும், டார்க் எடிசன் என்ற பெயரில் சிறப்பு பதிவு மாடலிலும் கிடைக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் கொள்கையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தனித்துவமான டிசைன் அம்சங்கள் மற்றும் பிரம்மாண்டத் தோற்றம் ஹாரியர் எஸ்யூவியின் முத்தாய்ப்பான அம்சமாக இருக்கிறது.

அதேபோன்று, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒமேகா கட்டமைப்புக் கொள்கையில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டி8 கட்டமைப்புக் கொள்கையை தழுவி இந்த ஒமேகா கட்டமைப்புக் கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் விலை உயர்த்தப்பட்டாலும், இன்னமும் மதிப்பு வாய்ந்த மாடலாகவே இருக்கிறது. டாடா ஹாரியர் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன.

பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன.

டாடா ஹாரியர் எஸ்யூவியில் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








