ஹெரியர் எஸ்யூவி காரை விளம்பரப்படுத்தும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ்... புதிய டிவிசி வீடியோ வெளியீடு

இந்திய சந்தையில் பிரபலமான எஸ்யூவிகளுள் ஒன்றாக இருக்கும் டாடா ஹெரியரின் புதிய டிவிசி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹெரியர் எஸ்யூவி காரை விளம்பரப்படுத்தும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ்... புதிய டிவிசி வீடியோ வெளியீடு

ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் எம்ஜி ஹெக்டர் உள்ளிட்டவற்றிற்கு சரியான போட்டி மாடலாக விளங்கிவரும் ஹெரியரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது.

ஹெரியர் எஸ்யூவி காரை விளம்பரப்படுத்தும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ்... புதிய டிவிசி வீடியோ வெளியீடு

அதன்பின் சமீபத்தில் புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட இந்த எஸ்யூவி கார் இந்த அப்கிரேட்டினால் குறிப்பிடத்தக்க டிசைன் அப்டேட்களை பெற்றிருந்தது. இந்த நிலையில் தான் தற்போது இதன் டிவிசி எனப்படும் தொலைக்காட்சி கமர்ஷியல் வீடியோ டாடா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் முக்கியமாக, வெற்றியை அடைய ஒரு வலுவான அடித்தளம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது கூறப்பட்டுள்ளது. இதில் அடித்தளம் என்பது ஹெரியர் உருவாக்க பயன்படுத்தப்பட்ட ஒமேகார்க் ப்ளாட்ஃபாரத்தை குறிக்கிறது.

ஹெரியர் எஸ்யூவி காரை விளம்பரப்படுத்தும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ்... புதிய டிவிசி வீடியோ வெளியீடு

இந்த ப்ளாட்ஃபாரம் ஆனது லேண்ட் ரோவரின் டி8 ப்ளாட்ஃபாரத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த ப்ளாட்ஃபாரத்தில் தான் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காரும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்ட அனைத்து மாடல்களும் கம்பீரமான தோற்றத்தை பெற்றுள்ளன.

ஹெரியர் எஸ்யூவி காரை விளம்பரப்படுத்தும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ்... புதிய டிவிசி வீடியோ வெளியீடு

இதில் டாடா ஹெரியர் மட்டும் என்ன விதிவிலக்கா.. இந்த வகையில் லேண்ட் ரோவர் மாடல்களுக்கே சவால்விடும் வகையிலான நேர்த்தியான தோற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹெரியரில் பொருத்தப்படும் எல்இடி டிஆர்எல்கள் இரு விதமான செயல்பாடுகளை கொண்டுள்ளன.

ஹெரியர் எஸ்யூவி காரை விளம்பரப்படுத்தும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ்... புதிய டிவிசி வீடியோ வெளியீடு

இதனுடன் உள்ள ஹெட்லேம்ப் பொருத்தப்பட்ட பம்பர், பெரிய அளவில் முன்பக்க க்ரில் உள்ளிட்டவை சாலையில் ஹெரியருக்கு மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தை வழங்குகின்றன. ஏற்கனவே கூறியதுபோல் பிஎஸ்6 அப்கிரேடினால் காரின் தோற்றத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன.

ஹெரியர் எஸ்யூவி காரை விளம்பரப்படுத்தும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ்... புதிய டிவிசி வீடியோ வெளியீடு

இந்த வகையில் ரீடிசைனில் வழங்கப்பட்ட பின்புறம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகள் A-பில்லரில் ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை வெகுவாக குறைக்கின்றன. மற்றொரு முக்கிய மாற்றம், ட்யூல்-டோனில் புதிய டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள்.

ஹெரியர் எஸ்யூவி காரை விளம்பரப்படுத்தும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ்... புதிய டிவிசி வீடியோ வெளியீடு

ஹெரியரின் உட்புற கேபின் லெதரால் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதன் கேபினில் பல செயல்பாடுகளை கொண்ட அலாய் சக்கரங்கள், தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் திரை உள்ளிட்டவை வழங்குகின்றன. இவற்றுடன் பிஎஸ்6 அப்கிரேட்டாக சில புதிய அம்சங்களையும் இந்த எஸ்யூவி கார் பெற்று வந்துள்ளது.

ஹெரியர் எஸ்யூவி காரை விளம்பரப்படுத்தும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ்... புதிய டிவிசி வீடியோ வெளியீடு

இதில் பனோராமிக் சன்ரூஃப், மின்சாரம் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் தன்னிச்சையாக ஒளிமங்கக்கூடிய ஐஆர்விஎம் உள்ளிட்டவை அடங்குகின்றன. இவற்றை தவிர்த்து பிஎஸ்4 ஹெரியருக்கும் பிஎஸ்6 ஹெரியருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஹெரியர் எஸ்யூவி காரை விளம்பரப்படுத்தும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ்... புதிய டிவிசி வீடியோ வெளியீடு

டாடா ஹெரியரில் ஒரே ஒரு 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் மட்டும் தான் பிஎஸ்6 தரத்தில் வழங்கப்படுகிறது. இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 170 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதேநேரம் இந்த என்ஜின் பிஎஸ்4 வெர்சனில் 140 பிஎச்பி பவரை தான் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஹெரியர் எஸ்யூவி காரை விளம்பரப்படுத்தும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ்... புதிய டிவிசி வீடியோ வெளியீடு

அதேபோல் பிஎஸ்6 ஹெரியர் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் என்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸையும் கூடுதலாக பெற்று வந்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் மூலமாக வழங்கப்படும் இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் டாடா ஹெரியரின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.16.25 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதேநேரம் ஹெரியரை மேனுவல் வெர்சனில் ரூ.13.69 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையிலேயே வாங்கலாம்.

Most Read Articles

English summary
Tata Harrier SUV New TVC out
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X