டாடா ஹாரியர் எஸ்யூவியில் விரைவில் இரண்டு புதிய வேரியண்ட்டுகள்!

டாடா ஹாரியர் எஸ்யூவியில் விரைவில் இரண்டு புதிய வேரியண்ட்டுகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டாடா ஹாரியர் காரில் விரைவில் 2 புதிய வேரியண்ட்டுகள்!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிக முக்கிய தேர்வாக டாடா ஹாரியர் உள்ளது. பிரம்மாண்டமான வடிவமைப்பு, வசதிகள், சரியான விலையில் கிடைக்கும் டாடா ஹாரியர் குறிப்பிடத்தக்க அளவு வாடிக்கையாளர் வட்டத்தையும் தக்க வைத்து வருகிறது.

டாடா ஹாரியர் காரில் விரைவில் 2 புதிய வேரியண்ட்டுகள்!

இந்த சூழலில், எம்ஜி ஹெக்டர் கொடுத்து வரும் குடைச்சல் காரணமாக, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதத்தில் ஹாரியர் எஸ்யூவியில் புதிய வேரியண்ட்டுகளை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

டாடா ஹாரியர் காரில் விரைவில் 2 புதிய வேரியண்ட்டுகள்!

இதன்படி, எக்ஸ்டி ப்ளஸ் மற்றும் எக்ஸ்டிஏ (ஆட்டோமேட்டிக்) ஆகிய இரண்டு புதிய வேரியண்ட்டுகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக டீம் பிஎச்பி தள தகவல் தெரிவிக்கிறது. தற்போது விற்பனயைில் உள்ள எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இசட் ஆகிய விலை உயர்ந்த வேரிண்ட்டுகளுக்கு இடையிலான வேரியண்ட்டாக எக்ஸ்டி ப்ளஸ் வேரியண்ட் நிலைநிறுத்தப்படும். இதில், பனோரமிக் சன்ரூஃப் முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது.

டாடா ஹாரியர் காரில் விரைவில் 2 புதிய வேரியண்ட்டுகள்!

அடுத்து, தற்போது ஹாரியர் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலானது எக்ஸ்எம்ஏ, எக்ஸ்இசட்ஏ மற்றும் எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதில், புதிய எக்ஸ்டிஏ வேரியண்ட்டானது எக்ஸ்எம்ஏ மற்றும் எக்ஸ்இசட்ஏ ஆகிய வேரியண்ட்டுகளுக்கு இடையிலான வேரியணட்டாக நிலைநிறுத்தப்பட உள்ளது. ஆனால், எக்ஸ்டிஏ வேரியண்ட்டில் பனோரமிக் சன்ரூஃப் இடம்பெறாது.

டாடா ஹாரியர் காரில் விரைவில் 2 புதிய வேரியண்ட்டுகள்!

இந்த வேரியண்ட்டுகள் டாடா ஹாரியர் எஸ்யூவியை தேர்வுக்கு எடுப்பவர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பட்ஜெட் , சிறப்பம்சங்கள் அடிப்படையில் இவை தக்க தேர்வு வாய்ப்பை கொடுக்கும்.

டாடா ஹாரியர் காரில் விரைவில் 2 புதிய வேரியண்ட்டுகள்!

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் மேனுவல் வேரியண்ட்டுகள் ரூ.13.69 லட்சம் முதல் ரூ.18.95 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகள் ரூ.16.25 லட்சம் முதல் ரூ.20.25 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

டாடா ஹாரியர் காரில் விரைவில் 2 புதிய வேரியண்ட்டுகள்!

இந்தநிலையில், புதிய எக்ஸ் ப்ளஸ் மற்றும் எக்ஸ்டிஏ ஆகிய வேரியண்ட்டுகள் ரூ.17 லட்சத்தை ஒட்டி விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது. தற்போது ஒற்றை மற்றும் இரட்டை வண்ணக் கலவையில் டாடா ஹாரியர் கிடைக்கிறது. இந்த புதிய வேரியண்ட்டுகளில் இரட்டை வண்ணத் தேர்வு வழங்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா ஹாரியர் காரில் விரைவில் 2 புதிய வேரியண்ட்டுகள்!

டாடா ஹாரியர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் க்ரையோடெக் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

டாடா ஹாரியர் காரில் விரைவில் 2 புதிய வேரியண்ட்டுகள்!

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 17 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுள், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், 9 ஸ்பீக்கர்களுடன் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

டாடா ஹாரியர் காரில் விரைவில் 2 புதிய வேரியண்ட்டுகள்!

டாடா ஹாரியர் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் ஆகியவை உள்ளன. ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், சீட் பெல்ட் ரிமைன்டர், ஹை ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், ஹில் டிசென்ட் கன்ட்ரோல் ஆகியவையும் முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக கூறலாம்.

Most Read Articles

English summary
Tata Motors launched a new version of its flagship SUV, the Harrier earlier this year. The 2020 Harrier came with a whole host of changes including a powerful engine and an optional automatic transmission.
Story first published: Friday, July 17, 2020, 10:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X