அடேங்கப்பா புதுமுக டாடா கார்ல இவ்ளோ வசதிகள் இடம்பெற இருக்கா?.. எவ்ளோ நாள் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்!

விரைவில் அறிமுகம் காணவிருக்கும் டாடா எச்பிஎக்ஸ் கார் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

அடேங்கப்பா புதுமுக டாடா கார்ல இவ்ளோ வசதிகள் இடம்பெற இருக்கா?.. எவ்ளோ நாள் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின்கீழ் எச்பிஎக்ஸ் எனும் புதுமுக மைக்ரோ எஸ்யூவி ரக கார் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கின்றது. எச்பிஎக்ஸ் என்பது தற்காலிக பெயர் மட்டுமே ஆகும். இது விற்பனைக்கு வரும்போது வேறு பெயரில் விற்பனைக்கு வரும். இதன் பெயரை தற்போது வரை டாடா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இக்கார் டைமரோ எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடேங்கப்பா புதுமுக டாடா கார்ல இவ்ளோ வசதிகள் இடம்பெற இருக்கா?.. எவ்ளோ நாள் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்!

மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் காருக்கு போட்டியளிக்கின்ற வகையில் விரைவில் இக்கார் விற்பனைக்கு வரவிருக்கின்றது. இதன் அறிமுகம் அடுத்த வருடத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக இக்காரை டாடா மோட்டார்ஸ் நடப்பாண்டு நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது.

அடேங்கப்பா புதுமுக டாடா கார்ல இவ்ளோ வசதிகள் இடம்பெற இருக்கா?.. எவ்ளோ நாள் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்!

இதைத்தொடர்ந்து தற்போது இக்காரை விற்பனைக்கான அறிமுகத்திற்கு தயார்படுத்தி வருகின்றது. இதற்காக தீவிர சோதனையோட்டத்தில் இக்கார் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. ஆகையால், வாகன ஆர்வலர்கள் மத்தியில் இக்கார் பற்றிய பல்வேறு கேள்விகளும், சங்தேகங்களும் எழும்பிய வண்ணம் இருக்கின்றன. இதனை தீர்த்து வைக்கின்ற வகையில் இப்புதிய கார் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களையே இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பார்க்கலாம்.

அடேங்கப்பா புதுமுக டாடா கார்ல இவ்ளோ வசதிகள் இடம்பெற இருக்கா?.. எவ்ளோ நாள் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்!

அறிமுகம் எப்போது:

டாடாவின் இந்த புதுமுக மைக்ரோ எஸ்யூவி கார் வருகின்ற 2021ம் ஆண்டின் இரண்டாம் கால் பகுதியிலேயே விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, ஏப்ரல்-மே மாதத்திற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என கூறப்படுகின்றது. அதேசமயம், வாகன கண்காட்சியின்போது இக்கார் 2021ன் முதல் காலாண்டிலேயே அறிமுகமாகிவிடும் என தகவல்கள் வெளிவந்தன. ஆனால், கொரோனா வைரஸ் இதற்கு முற்றுக்கட்டைப் போட்டது. இதனால், இதன் அறிமுகம் தற்போது தள்ளி போயிருக்கின்றது.

அடேங்கப்பா புதுமுக டாடா கார்ல இவ்ளோ வசதிகள் இடம்பெற இருக்கா?.. எவ்ளோ நாள் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்!

அல்ட்ராஸ் பிளாட்பாரம்:

அல்ட்ராஸ் கார்களை தயாரிக்கக் கூடிய அதே பிளாட்பாரத்தைப் பயன்படுத்தியே எச்பிஎக்ஸ் கார் தயாரிக்கப்பட இருக்கின்றது. டாடாவின் பிரபல கார் மாடல்களில் ஒன்றே இந்த அல்ட்ராஸ். இதனை ஆல்ஃபா எனும் பிளாட்பாரத்தில் வைத்தே டாடா தயாரித்து வருகின்றது. ஆகையால், புதுமையான ஸ்டைல் மட்டுமின்றி பாதுகாப்பிற்கும் உரித்தான காராக இது வெளிவரும் என நம்பப்படுகின்றது.

அடேங்கப்பா புதுமுக டாடா கார்ல இவ்ளோ வசதிகள் இடம்பெற இருக்கா?.. எவ்ளோ நாள் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்!

ஏனெனில் ஆல்ஃபா பிளாட்பாரத்தில் வைத்து தயாரிக்கப்படும் அல்ட்ராஸ், டியாகோ, டிகோர் மற்றும் நெக்ஸான் ஆகிய கார்கள் அதீத பாதுகாப்பு திறன் கொண்ட கார்களாக விற்பனைக்குக் கிடைக்கின்றன.

அடேங்கப்பா புதுமுக டாடா கார்ல இவ்ளோ வசதிகள் இடம்பெற இருக்கா?.. எவ்ளோ நாள் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்!

எரிபொருள்:

பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே எச்பிஎக்ஸ் கிடைக்கும் என கூறப்படுகின்றது. டாடா டியாகோ மற்றும் அல்ட்ராஸ் கார்களில் இடம்பெற்றிருக்கும் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் ரெவ்ட்ரோன் பெட்ரோல் எஞ்ஜினே இக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வில் இக்கார் கிடைக்கும்.

அடேங்கப்பா புதுமுக டாடா கார்ல இவ்ளோ வசதிகள் இடம்பெற இருக்கா?.. எவ்ளோ நாள் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்!

பெரிய உருவம்:

மாருதி சுசுகி இக்னிஸ் காருக்கு போட்டி என்றே இந்த கார் கூறப்படுகின்றது. ஆனால், உருவத்தில் காரைக் காட்டிலும் பல மடங்கு பெரியதாக இக்கார் காட்சியளிக்கின்றது. முன்மாதிரி மாடலாக காட்சியளித்த எச்பிஎக்ஸ் 1,900 மிமீ அகலத்தையும், 1,880 மிமீ உயரத்தையும், 3,860 மிமீ நீளத்தையும் கொண்டதாக இருக்கின்றது. இந்த அளவுகள் மஹிந்திரா நிறுவனத்தின் கேயூவி100 காருக்கே போட்டியளிக்கின்ற வகையில் இருக்கின்றது.

அடேங்கப்பா புதுமுக டாடா கார்ல இவ்ளோ வசதிகள் இடம்பெற இருக்கா?.. எவ்ளோ நாள் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்!

ஹாரியரின் ஸ்டைல்:

டாடா எச்பிஎக்ஸ், அந்நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றான ஹாரியர் எஸ்யூவி காரை தழுவியே உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு எச்பிஎக்ஸ் காரின் ஸ்டைல் மற்றும் முன் பக்க தோற்றமே சான்று. குறிப்பாக, ஹாரியர் காரில் இடம்பெற்றிருப்பதைப் போன்று தனித் தனியான ஹெட்லேம்ப் அமைப்பு, எல்இடி டிஆர்எல்கள், ரேடியேட்டர் கிரில், ட்யூவல் டோன் பம்பர் உள்ளிட்டவைக் காட்சியளிக்கின்றன.

அடேங்கப்பா புதுமுக டாடா கார்ல இவ்ளோ வசதிகள் இடம்பெற இருக்கா?.. எவ்ளோ நாள் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்!

எச்பிஎக்ஸ் உட்பகுதி:

இதன் வெளிப்புற ஸ்டைல் மட்டுமே ஹாரியர் எஸ்யூவி காரைப் போன்று இருக்கின்றது. இதன் உட்பகுதி டாடா அல்ட்ராஸ் கார்களைப் போன்று காட்சியளிக்கின்றது. குறிப்பாக, டேஷ்போர்டு, தொடுதிரை சிஸ்டம் மற்றும் இணைப்பு வசதி உள்ளிட்டவை அல்ட்ராஸ் காரில் இடம்பெற்றிருப்பதைப் போன்றே காட்சியளிக்கின்றது.

அடேங்கப்பா புதுமுக டாடா கார்ல இவ்ளோ வசதிகள் இடம்பெற இருக்கா?.. எவ்ளோ நாள் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்!

எச்பிஎக்ஸ் காரில் இடம்பெற இருக்கும் முக்கிய அம்சங்கள்:

  • பன்முக கட்டுப்பாட்டு பொத்தான்களைக் கொண்ட ஸ்டீயரிங் வீல்
  • தானியங்கி ஏசி
  • ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே
  • ஹர்மன் சவுண்ட் சிஸ்டம்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • புஷ் பட்டணுடன் கூடிய கீலெஸ் நுழைவு
  • ஈபிடியுடன் கூடிய ஏபிஎஸ்
  • முன்பக்கத்தில் இரு ஏர்பேக்குகள்
  • வேக எச்சரிக்கை
  • பின்பக்கத்தில் கேமரா
  • உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இக்காரில் இடம்பெற இருக்கின்றன. ஆகையால், டாடா எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் சில பிரீமியம் கார்களுக்கே டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    அடேங்கப்பா புதுமுக டாடா கார்ல இவ்ளோ வசதிகள் இடம்பெற இருக்கா?.. எவ்ளோ நாள் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்!

    விலை:

    டாடா நிறுவனம் இந்த மைக்ரோ எஸ்யூவி காரை மிக குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ரூ. 4.5 லட்சம் முதல் ரூ. 6.5 லட்சம் வரையிலான விலையிலேயே இக்கார் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Most Read Articles
English summary
Tata HBX Micro SUV Interesting Facts. Read In Tamil.
Story first published: Wednesday, December 16, 2020, 13:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X