2021 எச்பிஎக்ஸ் காரின் முன்பக்கம் செம!! டாடா மோட்டார்ஸின் அனுபவம் பளிச்சிடுகிறது...

டாடா எச்பிஎக்ஸ் கார் மீண்டும் ஒரு முறை பொது சாலையில் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 எச்பிஎக்ஸ் காரின் முன்பக்கம் செம!! டாடா மோட்டார்ஸின் அனுபவம் பளிச்சிடுகிறது...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய எச்பிஎக்ஸ் காரை அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்தவுள்ளது. எச்பிஎக்ஸ் என்பது தற்காலிக பெயரே, டைமரோ என்ற பெயரில்தான் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 எச்பிஎக்ஸ் காரின் முன்பக்கம் செம!! டாடா மோட்டார்ஸின் அனுபவம் பளிச்சிடுகிறது...

இதற்கிடையில் டாடா எச்பிஎக்ஸ் கடந்த மாதங்களாக தீவிர சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது மீண்டும் பொது சாலையில் சோதிக்கப்பட்ட டாடாவின் இந்த புதிய தயாரிப்பு இந்த சோதனை ஓட்டத்தில் கிட்டத்தட்ட 2020 ஆட்டோ எக்ஸ்போவில் கொண்டிருந்த தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

2021 எச்பிஎக்ஸ் காரின் முன்பக்கம் செம!! டாடா மோட்டார்ஸின் அனுபவம் பளிச்சிடுகிறது...

இதன் காரணமாக இந்த சோதனை மாதிரியில் மேற்பக்கத்தில் எல்இடி டிஆர்எல்களை கொண்ட பிளவுப்பட்ட ஹெட்லேம்ப் அமைப்பு மற்றும் இருபுறங்களிலும் ஹலோஜன் ஹெட்லைட்களை கொண்ட பம்பரை பார்க்க முடிகிறது.

2021 எச்பிஎக்ஸ் காரின் முன்பக்கம் செம!! டாடா மோட்டார்ஸின் அனுபவம் பளிச்சிடுகிறது...

இவற்றுடன் மற்ற கவனிக்கத்தக்க அம்சங்களாக எச்பிஎக்ஸ் காரில் டாடா லோகோ உடன் கருப்பு நிறத்தில் ஒற்றை ஸ்லாட் க்ரில், இரு நிறங்களில் பம்பர் மற்றும் A-பில்லரில் பொருத்தப்பட்ட பின்பக்கம் பார்க்க உதவும் கண்ணாடி உள்ளிட்டவற்றையும் எதிர்பார்க்கலாம்.

2021 எச்பிஎக்ஸ் காரின் முன்பக்கம் செம!! டாடா மோட்டார்ஸின் அனுபவம் பளிச்சிடுகிறது...

இந்த சோதனை எச்பிஎக்ஸ் கார் இரும்பு சக்கரத்தால் இயங்குகிறது. ஆனால் முந்தைய சோதனை ஓட்டங்களில் காரில் இரு-நிற அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டன. சக்கரங்களுக்கு மேலே பிளாஸ்டிக் க்ளாடிங்குகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

2021 எச்பிஎக்ஸ் காரின் முன்பக்கம் செம!! டாடா மோட்டார்ஸின் அனுபவம் பளிச்சிடுகிறது...

முந்தைய சோதனை ஓட்டங்களில் C-பில்லரில் பொருத்தப்பட்ட பின்பக்க கதவு கைப்பிடிகள், கருப்பு நிறத்தில் B-பில்லர்கள், பின்பக்கத்தில் வாஷர் & வைபர், உயரத்தில் நிறுத்து விளக்கு மற்றும் பம்பரில் ஒளி பிரதிப்பலிப்பான் போன்றவை எச்பிஎக்ஸ் காரில் வழங்கப்பட்டு இருந்தன.

2021 எச்பிஎக்ஸ் காரின் முன்பக்கம் செம!! டாடா மோட்டார்ஸின் அனுபவம் பளிச்சிடுகிறது...

உட்புறத்தில் சுழலக்கூடிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சதுர வடிவில் ஏசி துளைகள், டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் கண்ட்ரோல்களை கொண்ட தட்டையான- தாழ்வான ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றை டாடா எச்பிஎக்ஸ் பெற்று வரலாம்.

2021 எச்பிஎக்ஸ் காரின் முன்பக்கம் செம!! டாடா மோட்டார்ஸின் அனுபவம் பளிச்சிடுகிறது...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு புதிய எச்பிஎக்ஸ் காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

2021 எச்பிஎக்ஸ் காரின் முன்பக்கம் செம!! டாடா மோட்டார்ஸின் அனுபவம் பளிச்சிடுகிறது...

டாடாவின் ஆல்ஃபா கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுவரும் எச்பிஎக்ஸ், மாருதி சுஸுகி இக்னிஸ் மற்றும் மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் உள்ளிட்டவற்றுக்கு போட்டியாக விளங்கும்.

Most Read Articles
English summary
Tata HBX front design leaked; to be launched in India next year
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X